என் மலர்
ராணிப்பேட்டை
- கலெக்டர் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்
- பொதுமக்கள் வலியுறுத்தல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை , சிப்காட் மற்றும் சுற்றுவட் டார பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் எடை குறைவாக பொருட்கள் வழங்குவதாக புகார் எழுந்துள்ளது . இதுகுறித்து நடவ டிக்கை எடுக்கபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
எனவே இது குறித்து நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகளும், எடை குறைவாக குறைவை கண்காணிக்கும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .
கலெக்டர் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து நுகர்வோருக்கு வழங்கப்படும் பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா என்று கண்காணித்து எடை குறைவாக வழங்கும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உபயோகிக்கும் ரேஷன் கடை பொருட்களை எடை சரியாகவும், தரமானதாகவும் வழங்க வேண்டும் என்பதே நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
- குப்பைகள் வாராமல் தேங்கி உள்ளது
- போனஸ் வழங்க வலியுறுத்தல்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் இன்று காலை திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்தத்தால் அரக்கோணம் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் வாராமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றது.
இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் துர்நாற்றம் மிகுதியால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கேட்டபோது:-
அரக்கோணம் நகராட்சி தங்களுக்கு சம்பளத்தை குறித்த நேரத்தில் வழங்குவதில்லை இதுகுறித்து அதிகாரியிடம் பலமுறை தெரிவித்தும் மெத்தன போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.
சம்பளம் காலதாமதம் வருவதால் தங்கள் குடும்பத்தை நடத்த சிரமமாய் இருப்பதாகவும் மேலும் தங்களுக்கு தீபாவளி பண்டிகை நெருங்கி நிலையில் போனஸ் வழங்க வேண்டும்.
தாங்கள் வேலை செய்வதற்கு தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
- 13½ மணி நேரம் நடந்தது
- 83 சிறுமிகள் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஸ்ரீ உடற்பயிற்சி மற்றும் நடன குழுவின் சார்பில் 83குழுந்தைகள் மற்றும் சிறுமியர் அடுத்தடுத்து பல்வேறு பாடல்களுக்கு தொடர்ச்சியாக 13½ மணிநேரம் நடனமாடி உலக சாதனை படைத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டையில் ஸ்ரீ உடற்பயிற்சி மற்றும் நடன குழு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.மொத்தமாக 80க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளும், குழந்தைகளும் நடன கலை பயின்று வருகின்றனர்.
இந்தக் குழுவின் சார்பில் உலக சாதனை படைக்கும் முயற்சியாக, 83 சிறுமிகள் மற்றும்குழந்தைகள் இணைந்து தொடர்ச்சியாக 13½ மணி நேரம் தொடர்ச்சியாக நடனமா டினர். தனித்தனியாகவும், குழுவாக சேர்ந்து பல்வேறு பாடல்களுக்கு நடனமாடி உலக சாதனை படைத்தனர். இந்த சாதனையை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்தது.
- மேற்கூரை இடிந்து விழுந்து சேதமானதால் நடவடிக்கை
- புதிதாக கட்டப்படும் என அதிகாரிகள் தகவல்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் 4 மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மகப்பேறு உள் நோயாளி வெளி நோயாளிகள் என தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பழமை வாய்ந்த கட்டிடத்தில் அவசர சிகிச்சை பிரிவு, ஆண், பெண், குழந்தைகள் பிரிவு, முதலமைச்சர் காப்பீடு பிரிவு இயங்கி வந்தது.
இதில் குழந்தைகள் பிரிவு கடந்த 2 மாதங்களுக்கு முன் மேற்கூரை இடிந்து விழுந்து சேதமானது. இதனால் பொதுப்பணித்துறை ஆய்வு செய்து இந்த கட்டிடம் முழுவதும் சேதமடைந்தது உள்ளது இந்த கட்டிடம் உறுதிதன்மை இல்லை என்பதால் மருத்துவமனை கட்டிடம் மூடப்பட்டது இந்த பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்ட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
- 1000த்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் டாக்டர் அப்துல்கலாம் 91-வது பிறந்தநாளை முன்னிட்டும், போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அப்துல் கலாம் கனவு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.
இந்த மாரத்தான் போட்டியை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
மாரத்தான் போட்டியானது 11 மற்றும் 21 கிலோமீட்டர் தூரம் ஆகிய இரு பிரிவுகளாக நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 1000த்திற்கும் அதிகமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இந்த மாரத்தான் போட்டியானது வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் தொடங்கிய அம்மூர், மாந்தாங்கல் முத்துக்கடை ஆகிய பகுதிகளின் வழியாக சென்று மீண்டும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், டி.எஸ்.பி பிரபு, ரோட்டரி ஆளுநர் பழனி, மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், வன்னிவேடு ஊராட்சிமன்ற தலைவர் கற்பகராணி சக்திவேல், வாலாஜா ஸ்போட்ஸ் கிளப் தலைவர் பாலாஜி, அப்துல் கரீம் மற்றும் கிளப் நிர்வாகிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
- போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
- பெண்ணின் தந்தை போலீசில் புகார்
அரக்கோணம்:
திருவள்ளூர் மாவட்டம் ஊத் துக்கோட்டை தாலுகா தென்னலூர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் பூவரசன் (வயது 19). இவர் திருவள்ளூர் அருகே தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
அதே கம்பெனியில் வேலை செய்து வரும் தக்கோலம் பகுதியை சேர்ந்த 17 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெண்ணின் தந்தை தக்கோலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பூவரசனை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நகரிகுப்பம் செக் போஸ்ட் அருகே தக்கோலம் போலீசார் வாகன சோதனையில் இருந்தபோது அந்த வழியாக வந்த பூவரசனை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை
- பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
சோளிங்கர்:
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு பக்தோசிதப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபா ராதனை நடைபெற்றது.
சோளிங்கர் மற்றும் சுற் றுப்பகுதி கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கோவில் பிரகாரத்தில் 108 முறை சுற்றி வந்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள். நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
சோமசமுத்திரம்
சோமசமுத்திரம் கிராமத்தில் உள்ள கருமான் பிள்ளையார் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. அதையொட்டி மூல வர் கருமான் பிள்ளையாருக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமணப் பொருட்க ளால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அதன் பிறகு அலங்காரம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட் டது. பிள்ளையாருக்கு பிடித்தான அருகம்புல் மாலை அணி வித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- பைக்கில் வந்து துணிகரம்
- போலீசார் விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் கணேஷ் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் வேலு. சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமாதேவி (வயது 35).
இவர் நேற்று இரவு கணேஷ் நகர் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள கடையில் மாவு அரைத்துக் கொண்டு, வீட் டிற்கு நடந்து சென்றார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் உமா தேவியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு மோட்டர் சைக்கிளில் தப்பிசென்று விட்டான்.
இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 5 ஏக்கரில் தானிய சேமிப்புக் கிடங்கு அமைய உள்ளது
- ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உத்தரவு
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் ஊராட்சி மாங்குப்பம் கிராமத்தில் 2021-22ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வெங்கடாபுரம் சாலையோரம் 5 ஏக்கரில் தானிய சேமிப்புக் கிடங்கு, உலர்களம், கச்சாரோடு ஆகியவை அமைய உள்ளது.
மேற்கண்ட பணிகள் நடைபறுவதற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தை சிறப்பு கண்காணிப்பு அலுவலர் வி.சம்பத் ஐஏஎஸ் நேற்று வருவாய் துறை, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.
அப்போது, அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கிய கண்காணிப்பு அலுவலர், மேற்கண்ட பணிகள் தொடங்குவதற்கு வசதியாக இப்பகுதியில் உள்ள அரசு நிலங்களை யாரேனும் ஆக்கிரமித்து இருந்தால் அதை வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை துறை அதிகாரிகள் இணைந்து, உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
ஆய்வின் போது சோளிங்கர் தாசில்தார் கணேசன், காவேரிப்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம், பிடிஓ தண்டாயுதபாணி, ஊராட்சி மன்றத் தலைவர் அர்ஜுனன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- அமைச்சர் காந்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்
- மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் புத்தக கண்காட்சி நடத்தி வாசிப்பாளர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள், இளைஞர்கள், மாணவ- மாணவிகள் ஆகியோர் அதிகப்படியான புத்தகங்களை வாங்கி பயன் பெறும் வகையில் புத்தக கண்காட்சி வாலாஜா அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று தொடங்கி 22-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன் அனைவரும் வரவேற்றார். ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை பார்வையிட்டார்.
இந்த கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட சிறப்பு நூல் அரங்கங்கள், மிகச் சிறந்த அரியவகை நூல் தொகுப்புகள், ரூ.10 முதல் ரூ.1000 வரை அனைத்து நூல்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி, நூல்கள் வாங்குபவர்களுக்கு தினமும் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படுகிறது. அனைத்து நாட்களிலும் மாலை 5 மணி அளவில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், மகளிர் சிறப்பு நிகழ்ச்சிகள், புகழ்பெற்ற பேச்சாள ர்களின் நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், நூல் வெளியீட்டு விழாக்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தி னர்களின் கருத்தரங்குகள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கதை சொல்லும் போட்டிகள், போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றியக்குழு தலைவர்கள் வெங்க ரமணன், புவனேஸ்வரி சத்தியநாதன், அனிதா குப்புசாமி, வடிவேல், கலைக்குமார், நகரமன்ற தலைவர்கள் ஹரிணி தில்லை, சுஜாதா வினோத், தேவி பென்ஸ் பாண்டியன், முகமது அமீன், தமிழ்செல்வி அசோகன், பேரூர் தலை வர்கள், தென்கடப்ப ந்தாங்கல் ஊராட்சிமன்ற தலைவர் பிச்சமணி, கல்லூரி முதல்வர் பூங்குழலி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, நகரமன்ற துணை தலைவர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் திட்ட இயக்குனர் லோகநாயகி நன்றி கூறினார்.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
- 25-க்கும் மேற்பட்டடோர் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கான ஆலோசனை குழு கூட்டம் காவேரிப்பாக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. அட்மா தலைவர் அனிதாகுப்புசாமி தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் முன்னிலை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் மொபேஷ்முருகன் வரவேற்றார்.
கூட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர்கள் உதவியுடன் செயல்படுத்தப்படுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்கள் குறித்து வேளாண்மை உதவி இயக்கு னர் சண்முகம் விளக்கி கூறினார்.
தோட்டக்கலை துறையில் நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து தோட்டக்கலை உதவி அலுவலர் பாண்டியன் கூறினார்.
இதனைத் தொடர்ந்து வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை குறித்து குரு சர்மா விவசாயிகள் மத்தியில் எடுத்துரைத்தார்.
இதில் 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலா ளர்கள் உதயகுமார், கிருஷ்ணராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.






