என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள்.
ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்
- குப்பைகள் வாராமல் தேங்கி உள்ளது
- போனஸ் வழங்க வலியுறுத்தல்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் இன்று காலை திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்தத்தால் அரக்கோணம் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் வாராமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கின்றது.
இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் துர்நாற்றம் மிகுதியால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கேட்டபோது:-
அரக்கோணம் நகராட்சி தங்களுக்கு சம்பளத்தை குறித்த நேரத்தில் வழங்குவதில்லை இதுகுறித்து அதிகாரியிடம் பலமுறை தெரிவித்தும் மெத்தன போக்கை கடைபிடித்து வருகிறார்கள்.
சம்பளம் காலதாமதம் வருவதால் தங்கள் குடும்பத்தை நடத்த சிரமமாய் இருப்பதாகவும் மேலும் தங்களுக்கு தீபாவளி பண்டிகை நெருங்கி நிலையில் போனஸ் வழங்க வேண்டும்.
தாங்கள் வேலை செய்வதற்கு தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.






