என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    83 குழந்தைகள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடனமாடி உலக சாதனை
    X

    குழந்தைகள் நடனமாடியதை படத்தில் காணலாம்.

    83 குழந்தைகள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடனமாடி உலக சாதனை

    • 13½ மணி நேரம் நடந்தது
    • 83 சிறுமிகள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஸ்ரீ உடற்பயிற்சி மற்றும் நடன குழுவின் சார்பில் 83குழுந்தைகள் மற்றும் சிறுமியர் அடுத்தடுத்து பல்வேறு பாடல்களுக்கு தொடர்ச்சியாக 13½ மணிநேரம் நடனமாடி உலக சாதனை படைத்துள்ளனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டையில் ஸ்ரீ உடற்பயிற்சி மற்றும் நடன குழு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.மொத்தமாக 80க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளும், குழந்தைகளும் நடன கலை பயின்று வருகின்றனர்.

    இந்தக் குழுவின் சார்பில் உலக சாதனை படைக்கும் முயற்சியாக, 83 சிறுமிகள் மற்றும்குழந்தைகள் இணைந்து தொடர்ச்சியாக 13½ மணி நேரம் தொடர்ச்சியாக நடனமா டினர். தனித்தனியாகவும், குழுவாக சேர்ந்து பல்வேறு பாடல்களுக்கு நடனமாடி உலக சாதனை படைத்தனர். இந்த சாதனையை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்தது.

    Next Story
    ×