என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "350 கர்ப்பிணிகள்"

    • அமைச்சர் காந்தி சீர்வரிசை பொருட்கள் வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஆற்காடு அடுத்த திமிரி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்து, ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 350 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை, ஏழு வகையான உணவுகளையும் வழங்கி வாழ்த்தினார்.

    முன்னதாக கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போடப்பட்டிருந்த கோலம் மற்றும் ஊட்டச்சத்து குறித்த கண்காட்சி அரங்கினையும் பார்வையிட்டார்.

    இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஆற்காடு தொகுதி ஜே.எல். ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., ஒன்றியக் குழு தலைவர்கள் திமிரி அசோக், ஆற்காடு புவனேஸ்வரி சத்தியநாதன், திமிரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரமேஷ், ஆற்காடு நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், மேல்விஷாரம் நகரமன்ற தலைவர் எஸ்.டி.முகமது அமீன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ×