என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநில தோட்ட க்கலை அபிவிருத்தி திட்டம்"

    • பதிவு செய்ய தெரியாதவர்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    தோட்டக்கலைத் துறையின் மூலமாக மானியங்கள் பெறுவதற்கு இணைய வழி பதிவு அவசிய மாக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம், தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மாநில தோட்ட க்கலை அபிவிருத்தி திட்டம் மற்றும் மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டம் மூலமாக மானியங்கள் பெறுவதற்கு இணைய வழி மூலம் பதிவு செய்ய கட்டாயமா கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    http://www.tnhorticulture.tn.gov.in அல்லது tnhortnet/login.php என்ற இணையதளம் மூலம் விவசாயிகள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் இணைய வழியில் பதிவு செய்ய தெரியாத விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. 

    ×