என் மலர்
நீங்கள் தேடியது "Ganja teenagers arrested"
- போலீசார் சோதனையில் சிக்கினர்
- 2.5 கிலோ போதைபொருள் பறிமுதல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த சீனிவாசன் பேட்டையைச் சேர்ந்த முருகன் (எ) ரஜினி முருகன் (27) அதே பகுதியைச் சேர்ந்தவர் அருண் பாபு (31).
இவர்கள் இருவரும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் ராணிப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது ரஜினிமுருகன், அருண்பாபு இருவரும் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






