கிணற்றில் கட்டிட மேஸ்திரி பிணம்

வீட்டைவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை போலீசார் விசாரணை
கிணற்றில் கட்டிட மேஸ்திரி பிணம்
Published on

நெமிலி:

பாணாவரம் அடுத்த அரசங்குப்பம் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் வீர பாண்டியன் (வயது 37). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

வீர பாண்டியன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.இதனையடுத்து நேற்று கீழ்வீதி கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் உடல் மிதப்பதாக நெமிலி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்ததில் இறந்த நபர் வீரபாண்டியன் என்பது தெரியவந்தது.

உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com