என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
    • விழிப்புணர்வுடன் செல்ல போலீசார் அறிவுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காலை திடீரென சாரல் மழை பெய்தது.

    வேலூர் மாநகர பகுதியில் திடீர் மழை காரணமாக காலையில் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற மாணவ மாணவிகள் கடும் அவதியடைந்தனர். பாதாள சாக்கடை பணிகள் முடிவடையாத தெருக்கள் சேறு சகதியுமாக காட்சியளித்தன. வேலூர் மாநகரப் பகுதியில் மழை காரணமாக அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் கடும் பனி கொட்டியது.

    தேசிய நெடுஞ்சாலையில் காலை விடிந்த பிறகும் வாகனங்கள் முகப்பு விளக்கு போட்டபடி சென்றன.

    நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பனிமூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் மெதுவாக சென்றன.

    ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி முதல் நாட்றம்பள்ளி வரையிலும் நெடுஞ்சாலையில் அதிக பனிமூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் விழிப்புணர்வுடன் செல்ல வேண்டுமென போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
    • நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் பவர்கிரிட் மூலம் உயர் மின்கோபுரங்கள் அமைத்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்ப டவில்லை.

    பிரதி மாதம் முதல் வாரத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த வேண்டும்.சாத்தூர், நெமிலி, சென்னச முத்திரம், காவேரிப்பாக்கம், பாகவெளி, உளியூர், சீக்கராஜபுரம், வடகால் கிராமங்களில் உள்ள ஏரி கால்வாய் தூர்வாருதல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

    தாமரைப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கேமராக்கள் பழுதாகி உள்ளன.அதனை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசா யிகள் முன்வைத்தனர்.

    கூட்டத்தில், விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறினார்.

    இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம், கூட்டுறவு சங்கங்க ளின் இணைப்பதிவாளர் சரவணன், வேளாண்மை துணை இயக்குனர் விஸ்வ நாதன், வேளாண்மை அலுவலர் பாபு மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • தனியே வசித்து வந்தார்
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியை சேர்ந்த பாலன் மகன் சக்திவேல் (22) என்பவர் பிளஸ்-2 வரை படித்துவிட்டு பின்பு தனது உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு திருநங்கையாக மாறினார்.

    இதனால் வீட்டை விட்டு தனியே வசித்து வந்த சக்திவேல் நேற்று இரவு வசித்து வந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பாணாவரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிணத்தை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சிறையில் அடைப்பு
    • குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நகரில் உள்ள சீனிவாசன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருண்பாபு (31).

    ராணிப்பேட்டை அருகே உள்ள மாந்தாங்கல் பத்மநாபன் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் என்கிற ரஜினிமுருகன் (27).

    இவர்கள் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகளின் காரணமாக ராணிப்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இவர்கள் 2 பேரின் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரையின் பேரில், ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    • அரக்கோணம் கோட்டாட்சியர் உத்தரவு
    • நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதால் நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில், வேலுார், ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களில், அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

    இங்கு, நெல் கொள்முதல் செய்ததில், முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்தன.இந்த நிலையில் வேலூர் வ சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி அரக்கோணம் அடுத்த சிறுகரும்பூரை சேர்ந்த தி.மு.க பிரமுகர் குமரவேல் பாண்டியன் மேல்பாக்கம் நிர்வாக கிராம அலுவலர் குமரவேல் ஆகியோரை நேற்று கைது செய்தனர். குமரவேல் பாண்டியன் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்ததாக

    போலியாக அடங்கல் சீட்டு கிராம நிர்வாக அலுவலர் குமரவேல் வழங்கியுள்ளார்.

    இதனால் அவர்கள் கைத செய்யப்பட் டுள்ளனர். இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் குமரவேலை தற்காலிகமாக பணியிட நீக்கம் செய்வதாக அரக்கோணம் கோட்டாட்சியர் பாத்திமா உத்தரவிட்டுள்ளார்.

    • பச்சை காய்கறி, கீரைகளை சாப்பிட அறிவுரை
    • ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கலவை:

    கலவை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கண்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    ஆசிரியர் சனாவுல்லா முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கண் சிகிச்சை நிபுணர் இளவரசன் கலந்துகொண்டு கண் பார்வை குறைபாடு, கணினியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து விளக்கி, இயற்கை முறை பச்சை காய்கறிகள், கீரை, கேரட் போன்ற வற்றை அதிக அளவு சாப்பிட வேண்டும் என்றும் கூறினார் இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • 1½ டன் சிக்கியது
    • வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்

    காவேரிப்பாக்கம்:

    பாணாவரம் பகுதியில் அமைந்துள்ள சோளிங்கர் ரெயில் நிலையத்தில் அடிக்கடி நின்று செல்லும் ரெயில்களில் ரேசன் அரிசி கடத்தி செல்கின்றனர்.

    இந்த நிலையில் சோளிங்கர் ரெயில் நிலையம் வழியாக சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரேசன் அரிசி கடத்துவதாக ராணிப்பேட்டை மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் இளஞ்செழியனுக்கு தகவல் கிடைத்தது.

    அந்த தகவலின் பேரில் நேற்று திடீரென சோளிங்கர் ரெயில் நிலையத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது ரெயிலில் கடத்துவ தற்காக நடைமேடை அருகே முட்புதரில் 25 மூட்டைகளில் மறைத்து வைத்திருந்த சுமார் 1½டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை வாலாஜாபேட்டை யில் உள்ள வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

    இந்த ஆய்வின் போது பறக் கும்படை தனி தாசில்தார் அலுவலக உதவியாளர்கள் சரத்குமார், பாலகி ருஷ்ணன், பாணாவரம் கிராம உதவியாளர் வில்சன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏவின் 45-வது பிறந்த நாளை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி இணைந்து ராணிப்பேட்டை நகரத்தில் உள்ள விசுவாஸ் மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி தலைமை தாங்கினார்.விஸ்வாஸ் பள்ளி தலைவர் கமலா காந்தி வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உணவு அளித்து அவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்.நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • எஸ்.பி. தீபா சத்யன் அறிவுரை
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்

    கலவை:

    கலவை போலீஸ் நிலையத்தில் நேற்று மாலை ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது நிலுவையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து, கலவை போலீஸ் நிலையத்திற்கு அரசால் வழங்கப்பட் டுள்ள பொருட்களையும் பார்வையிட்டார்.

    மேலும் கலவைப் பகுதியில் உள்ள ரவுடிகள் குறித்தும் விசாரித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    போலீஸ் நிலைய கட்டிடம் பழுதடைந்துள்ளதை பார்வை யிட்டு, நிலுவையில் உள்ள வழக்குகளை உடனுக்குடன் முடிக்க வும், போலீஸ் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

    போலீஸ்நிலையத்துக்கு வருபவர்களிடத்தில், எளிமையாக வும், அன்பாகவும் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென போலீசாருக்கு அறிவுரை வழங்கினார். இன்ஸ்பெக்டர் பாரதி தாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், மூர்த்தி, சங்கர் ஆகி யோர் உடன் இருந்தனர்.

    • சாமிக்கு மகாதீபாராதனை நடைபெற்றது
    • போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்

    சோளிங்கர்:

    சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் கார்த்திகை திரு விழா நடைபெற்று வருகிறது.

    கார்த்திகை இரண்டாம் வாரத்தை முன்னிட்டு யோக நரசிம்மர், அமிர்தவல்லி தாயார், யோகா ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடை பெற்றது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தக்கான்குளம் பிரம்மதீர்த்ததில் நீராடி, சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் காலை முதல் மதியம் வரை போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருந்தது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    • ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டது
    • அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்

    வாலாஜா:

    வாலாஜா ஊராட்சி ஒன்றியம் வன்னிவேடு ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளுக்கு நவீன எந்திரங்கள், உழவு கருவிகள், அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இத்துறையின் புதிய அலுவலக கட்டிடம் வன்னிவேடு ஊராட்சியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளதை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் காந்தி கலந்து கொண்டு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வேளாண்மை பொறியியல் துறையின் அலுவலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி பயன்பாட்டிற்கு துவக்கிவைத்தார்.

    இதனைத் தொடந்து அனந்தலையைச் சேர்ந்த 2 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்திற்கான ஆணையினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

    புதிய வேளாண்மை பொறியியல் துறை விரிவாக்க மைய அலுவலக கட்டிடத்தில் உதவி செயற் பொறியாளர் அலுவலகம் மற்றும் உதவி பொறியாளர் இளநிலை பொறியாளர் அலுவலகங்களும் செயல்படும்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நவீன வேளாண் எந்திரங்கள் பெற்றிட அலுவலகத்தினை அணுகலாம். மேலும் அலுவலகம் வாயிலாக வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு மண் அள்ளும் எந்திரம் மற்றும் டிராக்டர்கள் குறைந்த வாடகைக்கு வழங்கப்படுகிறது. இதனையும் இவ்வலுவலகத்தினை விவசாயிகள் அணுகி பயனடையலாம்.

    • நெடுஞ்சாலை பணிக்காக தோண்டப்பட்டது
    • சாலை பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் பேரூராட்சி பஸ் நிலையம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. மேலும் இப் பகுதியில் ஊராட்சி ஒன்றி யம், வேளாண்மை அலுவல கம், பத்திர பதிவு அலுவலகம், போலீஸ் நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற் றும் வங்கிகள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவைகள் அமையப்பெற்றுள்ளன. இத னால் பஜார் வீதி, பஸ் நிலை யம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் பரபரப்பாக காணப்படும்.

    இந்தநிலையில் காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் எதிரே கடந்த சில மாதங்களுக்கு முன், தேசிய நெடுஞ்சாலை பணிக்காக பள்ளம் தோண் டப்பட்டன. ஆனால் பள்ளம் தோண்டிய பிறகு சாலை பணிகள் நடைப்பெறவே இல்லை. இதனால் பள்ளங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி, கொசுக்களின் கூடாரமாக மாறியுள்ளது. இதனால் இங்குள்ள தண்ணீரில் மீன் வளர்ந்து இருப்பதால்பொது மக்கள் தூண்டில் மற்றும் வலைகள் மூலம் மீன் பிடிக்க தொடங்கியுள்ளனர்.

    மேலும் மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த இப்பகுதி யில், போதிய தடுப்பு நடவ டிக்கைகள் எடுக்கப்பட வில்லை. இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் வாகன ஓட்டி கள் விபத்துக்குள்ளாகி வரு கின்றனர்.

    எனவே தேசிய நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள், அனைத்து தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இப்பகுதியில் சாலை பணி களை விரைந்து முடிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். முன்னதாக தடுப்பு நடவடிக் கைகள் மேற்கொள்ள வேண் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×