என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டையில் திடீர் மழை, கொட்டும் பனியால் பொதுமக்கள் அவதி
    X

    ராணிப்பேட்டையில் திடீர் மழை, கொட்டும் பனியால் பொதுமக்கள் அவதி

    • போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
    • விழிப்புணர்வுடன் செல்ல போலீசார் அறிவுறுத்தல்

    ராணிப்பேட்டை:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று காலை திடீரென சாரல் மழை பெய்தது.

    வேலூர் மாநகர பகுதியில் திடீர் மழை காரணமாக காலையில் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற மாணவ மாணவிகள் கடும் அவதியடைந்தனர். பாதாள சாக்கடை பணிகள் முடிவடையாத தெருக்கள் சேறு சகதியுமாக காட்சியளித்தன. வேலூர் மாநகரப் பகுதியில் மழை காரணமாக அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் கடும் பனி கொட்டியது.

    தேசிய நெடுஞ்சாலையில் காலை விடிந்த பிறகும் வாகனங்கள் முகப்பு விளக்கு போட்டபடி சென்றன.

    நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பனிமூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் மெதுவாக சென்றன.

    ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி முதல் நாட்றம்பள்ளி வரையிலும் நெடுஞ்சாலையில் அதிக பனிமூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் விழிப்புணர்வுடன் செல்ல வேண்டுமென போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×