என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடமாடும் சிகிச்சை வாகனத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த வாரம் நடந்த அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில், 6 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தை களின் இருப்பிடங்களுக்கே சென்று தசைப்பயிற்சி மற்றும் பல்நோக்கு மறுவாழ்வு சிகிச்சை அளிப்பதற்காக ரூ.18 லட்சம் மதிப்பிலான நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனத்தை ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

    இதனை அமைச்சர் காந்தி கொடியசைத்து வாகனத்தை பய ன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், நகரமன்ற உறுப்பினர் வினோத் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • ரோந்து பணியில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜா சப் இன்ஸ்பெக்டர் தீபன் சக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் நேற்று பூண்டி கிராமம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அங்குள்ள பச்சையம்மன் கோயில் அருகே நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கஞ்சா விற்பனை செய்பவர் என்று தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • உடல்நிலை சரியில்லாததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    வாலாஜா கணபதி நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது கீதா (48). இவர் தெரு, தெருவாக சென்று துணி வியாபாரம் செய்து வந்தார்.சமீப நாட்களாக இவர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    ஆனாலும் நோய் முற்றிலும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த கீதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயிகள் வலியுறுத்தல்
    • 300 ஏக்கர் நெற்பயிர் மழை வெள்ளத்தில் மூழ்கியது

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பனப்பாக்கம், ஜாகீர்தண்டலம், பெருவளையம் உள்ளிட்ட பகுதிகளில் 300 ஏக்கர் நெற்பயிரில் மழைநீர் தேங்கி பயிர்கள் சேதமடைந்தன. உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த 9-ந் தேதி இரவு மாண்டஸ் புயல் கரையை கடந்த போது ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், நெமிலி வட்டத்தில் கனமழை பெய்தது.

    கனமழையால் நெமிலி வட்டத்தில் உள்ள ஏரிகள், குளம், குட்டைகள் நிரம்பின. மேலும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆறு, கல்லாற்றில் அதிகளவில் தண்ணீர் வெள்ளமாக சென்றது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது.

    இதனால் பனப்பாக்கம், ஜாகீர்தண்டலம், பெருவளையம், சிறுவளையம், கல்பலாம்பட்டு, வெளியநல்லூர் மற்றும் பிள்ளைப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 300 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் முழ்கி சேதமடைந்தன. விளை நிலங்களில் தேங்கிய மழைநீர் வடிய வழியில்லா ததால் பயிர்கள் அழுகும் நிலை காணப்படுகின்றது.

    நீரில் முழ்கி நெற்பயிர்கள் சேதமடைந்ததால் வருவாய் துறையினர் முறையான கணக்கெடுத்து தமிழக அரசிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
    • நீர் நிலைகளுக்கு சிறுவர்கள், பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பாலாறு அணைக்கட்டில் வினாடிக்கு 3,686 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாலாற்றில் இருந்து காவேரிப்பாக்கம், தூசி ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    மேலும் ஆந்திர மாநில வன பகுதியில் பெய்து வரும் கன மழையின் காரணமாக தமிழக ஆந்திர எல்லை பகுதியான புல்லூர் அணையில் இருந்து நீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருவதால் வாணியம்பாடி, வேலூர் வழியாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் வாலாஜா அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 3,686 கன அடி விதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மேலும் தொடர்ந்து பரவலாக மிதமான மழை பெய்து வருவதால் பாலாற்றில் மேலும் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்பதால் பாலாற்றின் கரையோரம் உள்ள 30 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதிக கன அடி நீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே நீர்நிலைகளுக்கு சிறுவர்கள் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரித்துள்ளார்.

    • விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என உறுதி
    • ஏராளமானேர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆய்வு செய்தார்.

    மேலபுலம் ஊராட்சியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து மேலபுலம் - சமத்துவபுரம் குடியிருப்பில் மழைநீர் தேங்கியுள்ளதை பார்வையிட்டார்.

    மேலபுலம் அரசினர் நடுநிலைப் பள்ளியில் உள்ள நிவாரண முகாமில் தங்கி உள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். கீழ்வீதி ஊராட்சியில் மழையால் விவசாய நிலங்கள் சேதமடைந்ததை பார்வையிட்டார். விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

    இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு ஒன்றிய செயலாளர் ரவீந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதமுத்து மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது
    • இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் அது சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் மட்டுமே உள்ளது.

    இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்றனர். கடந்த 3 நாட்களாக மாண்டாஸ் புயலின் தாக்கத்தால் தொடர் கனமழை பெய்தது.

    இதனால் கார்த்திகை மாதம் சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். ஏக்கருக்கு 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து நடவு செய்த விவசாயிகள் தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முழுவதுமாக சேதம் அடைந்துள்ளது.

    இதனால் மீண்டும் நாற்று விட்டு நடவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

    எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பிடு வழங்க வேண்டும் என இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    சம்பா சாகுபடிக்காக சுமார் 4000 ஏக்கர் நெற்பயிர்கள் நடவு செய்து நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
    • கொட்டும் மழையில் ஏராளமானோர் தரிசனம்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த வேலூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை உடனுறை ஸ்ரீ பரமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அரக்கோணம் ஒன்றியம் வேலூர் கிராமத்தில் சுமார் 1747 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ பரமேஸ்வரர் ஆலயம் 2-ம் நந்திவர்மன் என்ற அரசனால் கட்டப்பட்டது. இந்த ஆலயம் மிகவும் பழமையான ஆலயமாகும் இதனை கிராம பொதுமக்கள் சீர் செய்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    8-ந் தேதி விக்னேஸ்வர பூஜையும் மற்றும் கணபதி பூஜை உடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் இரண்டு நாள் காலை மாலை யாக பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை யாகசாலை பூஜை முடிவுற்றவுடன் அலங்கரிக்கப்பட்ட கலசங்களில் சேகரிக்கப்பட்ட புனித நீர் கோபுரத்தின் மீது கொண்டு செல்லப்பட்டு கலசத்தின் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை உடனுறை ஸ்ரீ பிரமேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    மதியம் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது.

    கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் அருள் சித்தர் அன்பு செழியன் முன்னிலையில் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சாமந்தி பார்த்திபன், கவுன்சிலர் சுமதி முனுசாமி, ஆலய உறுப்பினர்கள் சரவணன், ரமேஷ் மோகன்வேல், மோகன், பாஸ்கரன், குமார், நாகப்ப ரெட்டி, ராஜ்குமார், பாண்டியன் நாட்டார், கோவிந்தசாமி, பாபு மற்றும் விழா குழுவினர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    மழை பெய்தாலும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அரக்கோணம் அருகே உள்ள கணபதிபுரம் ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறி அப்பகுதி குடியிருப்புகளை சூழ்ந்தது.
    • அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம், வருவாய்த் துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருடன் அங்கு சென்றார்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே உள்ள கணபதிபுரம் ஏரி நிரம்பி, உபரி நீர் வெளியேறி அப்பகுதி குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனால் வெளியே வர முடியாமல் தவித்த 25 பேரை வருவாய் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

    அரக்கோணம் அருகே உள்ள கணபதிபுரம் ஏரி மாண்டஸ் புயல் மழையால் நிரம்பியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், வெளியேறிய உபரிநீர் ஏரிக்கு அருகில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்தது. இதில் அங்கு வசித்து வந்த மக்கள் வெளியேற முடியாமலும், வீட்டினுள் இருந்து தண்ணீரை வெளியேற்ற முடியாமலும் அவதிக்குள்ளாயினர்.

    இது குறித்து அறிந்த அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம், வருவாய்த் துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருடன் அங்கு சென்றார்.

    தொடர்ந்து குடியிருப்புகளில் சிக்கியவர்களை மீட்புத் துறையினர் கயிறு கட்டி 25 பேரை பத்திரமாக மீட்டனர்.

    மீட்கப்பட்டவர்கள் கணபதிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான பொருள்களை தாசில்தார் சண்முகசுந்தரம் தலைமையிலான வருவாய்த் துறையினர் வழங்கினர்.

    • ஆற்காடு அடுத்த பூங்கோடு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலாற்றங்கரையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த பூங்கோடு பகுதியில் உள்ள ஆற்காடு-கலவை சாலையில் வந்தவாசியில் இருந்து 30-க்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று ஆற்காடு வழியாக வேலூர் நோக்கி வந்துகொண்டிருந்தது.

    ஆற்காடு அடுத்த பூங்கோடு அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் பாலாற்றங்கரையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பாலாற்றில் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. பஸ் கவிழ்ந்த இடத்தில் தண்ணீர் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட 9 பயணிகள் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஆற்காடு தாலுகா போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

    • ஸ்ரீ புரம் சக்தி அம்மா, ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் பங்கேற்பு
    • ஐம்பெரும் விழா தொடங்கி நடைபெற்றது

    வாலாஜா:

    வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் 18வது ஆண்டு வருஷாபிஷேக விழா, பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 62 வது ஜெயந்தி விழா, தீர்த்தக்குளம் திறப்பு விழா, ஸ்தல வரலாறு நூல் வெளியீட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை அடங்கிய ஐம்பெரும் விழா கடந்த 9ம்தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று 11-ம் தேதி முடிய நடைபெற்றது.

    விழாவில் மூன்றாம் நாளான நேற்று மஹா கணபதி பூஜை, அஷ்டதிக் பாலகர் பூஜை, வருண பூஜை, கங்கா பூஜை ஆகியவை நடைபெற்றது. பின்னர் 62 தம்பதி பூஜையும், நாதஸ்வர கலைஞர்களின் இசை விழாவும் நடைபெற்று வஸ்திர தானம் வழங்கப்பட்டது.விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூர், ஸ்ரீ புரம் தங்க கோவில் சக்தி அம்மா கலந்து கொண்டு 21 அடி உயர விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடர், மூலவர் தன்வந்திரி பெருமாள் ஆகியோருக்கும், கருட கங்கா ஸ்ரீ தன்வந்திரி சஞ்சீவினி தீர்த்த குளத்திலும், கருடருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தி தீர்த்தக்குளத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளை வாழ்த்தியும், பக்தர்களுக்கு அருளாசி வழங்கியும் பேசினார்.

    பூஜைகள் மற்றும் தீர்த்தக்குள திறப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவர் தன்வந்திரி மற்றும் பரிவார தெய்வங்களையும் தரிசனம் செய்து பிரசாதமும், பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர்.

    விழாவில் ரத்தினகிரி பாலமுருகனடிமை ஸ்வாமிகள், பெங்களூர் மதுசூதனானந்த ஸ்வாமிகள், ஆற்காடு தொழிலதிபர் ஜெ.லட்சுமணன் உள்பட ஆன்மீக பெரியோர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், சுற்றுப்புற கிராம நிர்வாகிகள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    • டிரான்ஸ்பார்மர் பக்கத்தில் கட்டி வைத்திருந்த போது பரிதாபம்
    • மின்சாரத்தை நிறுத்தி மாட்டின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த துரை பெரும்பாக்கம் கிராமத்தில் துரைசாமி என்பவருடைய பசுமாடு நேற்று அவர் வீட்டின் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் பக்கத்தில் கட்டி வைத்திருந்தார்.

    அப்பொழுது எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின் கம்பியில் இருந்து பசு மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து பரிதாபமாக இருந்தது. துரைசாமி மாட்டை பார்த்து கதறி அழுதார்.

    உடனடியாக காவேரிப்பாக்கம் மின் வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் மின்சாரத்தை நிறுத்திவிட்டு பசுமாட்டை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×