search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீ பரமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    ஸ்ரீ பரமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
    • கொட்டும் மழையில் ஏராளமானோர் தரிசனம்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த வேலூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை உடனுறை ஸ்ரீ பரமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அரக்கோணம் ஒன்றியம் வேலூர் கிராமத்தில் சுமார் 1747 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ பரமேஸ்வரர் ஆலயம் 2-ம் நந்திவர்மன் என்ற அரசனால் கட்டப்பட்டது. இந்த ஆலயம் மிகவும் பழமையான ஆலயமாகும் இதனை கிராம பொதுமக்கள் சீர் செய்து கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    8-ந் தேதி விக்னேஸ்வர பூஜையும் மற்றும் கணபதி பூஜை உடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் இரண்டு நாள் காலை மாலை யாக பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று காலை யாகசாலை பூஜை முடிவுற்றவுடன் அலங்கரிக்கப்பட்ட கலசங்களில் சேகரிக்கப்பட்ட புனித நீர் கோபுரத்தின் மீது கொண்டு செல்லப்பட்டு கலசத்தின் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை உடனுறை ஸ்ரீ பிரமேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    மதியம் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது.

    கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் அருள் சித்தர் அன்பு செழியன் முன்னிலையில் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சாமந்தி பார்த்திபன், கவுன்சிலர் சுமதி முனுசாமி, ஆலய உறுப்பினர்கள் சரவணன், ரமேஷ் மோகன்வேல், மோகன், பாஸ்கரன், குமார், நாகப்ப ரெட்டி, ராஜ்குமார், பாண்டியன் நாட்டார், கோவிந்தசாமி, பாபு மற்றும் விழா குழுவினர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    மழை பெய்தாலும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×