என் மலர்
நீங்கள் தேடியது "Therapeutic vehicle"
- அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடமாடும் சிகிச்சை வாகனத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் கடந்த வாரம் நடந்த அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில், 6 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தை களின் இருப்பிடங்களுக்கே சென்று தசைப்பயிற்சி மற்றும் பல்நோக்கு மறுவாழ்வு சிகிச்சை அளிப்பதற்காக ரூ.18 லட்சம் மதிப்பிலான நடமாடும் சிகிச்சை பிரிவு வாகனத்தை ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதனை அமைச்சர் காந்தி கொடியசைத்து வாகனத்தை பய ன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், நகரமன்ற உறுப்பினர் வினோத் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.






