என் மலர்
புதுக்கோட்டை
கறம்பக்குடியில் மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:
கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் கறம்பக்குடி தென்கர், அக்ரகாரம், திருமணஞ்சேரி, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த ராமன் (வயது 45), கார்த்திக் (26), அறிவழகன் (58) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விராலிமலை அருகே டயர் வெடித்ததில் கார் கவிழ்ந்து 3 பேர் பலியானார்கள். இந்த விபத்து மீட்பு பணியில் இருந்த போலீஸ் ஜீப் மீது மற்றொரு கார் மோதியது.
விராலிமலை:
மதுரை மாவட்டம் ஆத்திகுளம் சித்து தெருவைச் சேர்ந்தவர் பைசல்கனி (வயது 45). இவர், அவரது சகோதரர் முகமது ரிசாத் (38) மற்றும் இவர்களது நண்பர்களான திண்டுக்கல் நிலக்கோட்டையை சேர்ந்த அபுபக்கர் (49), மதுரை கோரிப்பாளையம் பத்துநோன்பு சாவடியை சேர்ந்த முகமது சபியுல்லா (44) ஆகிய 4 பேரும் நேற்று காரில் மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
காரை முகமது சபியுல்லா ஓட்டினார். கார் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கொடும்பாளூர் குக்குடிப்பட்டியில் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்து, கார் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பைசல் கனி, முகமது ரிசாத், அபுபக்கர் ஆகிய 3 பேர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். முகமது சபிபுல்லா படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முகமது சபியுல்லாவை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையில் போலீசார் தாங்கள் வந்த ஜீப்பை சாலையோரத்தில் நிறுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் போலீஸ் ஜீப் மீது வேகமாக மோதியது. இதில் காரில் வந்த 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. போலீஸ் ஜீப்பில் யாரும் இல்லாததால், போலீசார் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சையை டாக்டர்கள் புறக்கணித்தனர்.
புதுக்கோட்டை:
ஆயுர்வேத டாக்டர்களும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தற்கு நாடு முழுவதும் அலோபதி டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் கடந்த 8-ந் தேதி இந்திய மருத்துவ சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்து போராட்டம் நடத்தப்படும் என இந்திய மருத்துவ சங்கத்தினர் அறிவித்திருந்தனர். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் நேற்று புறநோயாளிகள் சிகிச்சை பணியை டாக்டர்கள் புறக்கணித்தனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புறநோயாளிகள் யாருக்கும் சிகிச்சை அளிக்கவில்லை. புதுக்கோட்டையில் தனியார் மருத்துவமனைகளில் முன்பு போராட்டம் தொடர்பான அறிவிப்பு சுவரொட்டியை ஒட்டி வைத்திருந்தனர். புதிய பஸ் நிலையம் அருகே ஒரு மருத்துவமனை முன்பு நுழைவு வாயில் கதவு சாத்தப்பட்டிருந்தது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகளுக்கு டாக்டர்கள் போராட்டம் குறித்து அங்கிருந்த ஊழியர்கள் எடுத்துரைத்தனர். இதனால் சில நோயாளிகள் உரிய சிகிச்சை பெறமுடியாமல் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.
அரசு மருத்துவமனைகள் வழக்கம் போல இயங்கின. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசு டாக்டர்கள் கருப்பு பட்டை அணிந்திருந்தனர். தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைகள், கொரோனா சிகிச்சையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. போராட்டம் குறித்து இந்திய மருத்துவ சங்க மாவட்ட தலைவர் டாக்டர் சலீம் கூறுகையில், 'புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 85 தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்கில் புறநோயாளிகள் சிகிச்சை பணியை டாக்டர்கள் மேற்கொள்ளப்படவில்லை. 250-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். மாவட்டத்தில் அரசு மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆதரவு தெரிவித்தனர்' என்றார்.
விராலிமலை அருகே வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,
விராலிமலை:
விராலிமலை தாலுகா பூதகுடி இ.மேட்டுப்பட்டி அருகே உள்ள திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சாலை ஓரத்தில் நடந்து சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி அருகே டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி:
வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சார்பில் ஆலங்குடி சந்தைப்பேட்டையிலிருந்து கலைஞர் சாலை வழியாக ஊர்வலமாக ஆலங்குடி வடகாடு முக்கம் வந்தடைந்தனர்.
பின்னர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கட்சியின் ஒன்றியச்செயலாளர் பாஸ்கரன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக ஒன்றியச்செயலாளர் மணிமேகலை ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினர். வேளாண் திருத்த சட்டங்களை ரத்துசெய், சுற்றுச்சூழல் திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னெடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட செயலாளர் தினேஷ்குமார், நகர செயலாளர் சரவணன், முருகேசன் உள்பட 70 பேருக்குமேல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை அருகே அக்காளுக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு தங்கையுடன் திருமணம் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராஜ்குமார் (வயது 30). இவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா மருங்குப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவரின் மூத்த மகளுக்கும் திருமணம் செய்ய உறவினர்களால் நிச்சயம் செய்யப்பட்டு, நேற்று திருமணம் செய்துவைக்க முடிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து ஆலங்குடியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதையடுத்து கோவில் முன்பு விளம்பர பேனர்கள் போன்றவை மணமக்கள் வீட்டார்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மணப்பெண் திடீரென மாயமானதாக மணமகன் வீட்டாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாப்பிள்ளையின் உறவினர்கள் மருங்கப்பள்ளம் சென்று பெண் வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண் வீட்டார், அவளுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று கூறினர். பின்னர் பெண் வீட்டார் பெண்ணின் தங்கை ஆசிபாவுக்கு 19 வயது ஆகிறது. எனவே ராஜகுமாருக்கு, ஆசிபாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்கு இணங்கிய மணமகன் வீட்டார் அவர்கள் சொன்னபடி இருவருக்கும் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து கோவிலில் வைக்கப்பட்டிருந்த திருமண பேனர்களை அவிழ்த்து எடுத்தனர். பின்னர் ராஜ்குமாருக்கும், ஆசிபாவுக்கு திருமணம் நடைபெற்றது. நிச்சயிக்கப்பட்ட பெண் மாயமானதை அடுத்து, தங்கைக்கு அடித்தது திடீர் யோகம் என உறவினர்கள் கூறி மணமகள் ஆசிபாவை வாழ்த்தி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தண்ணீர் வருவதை அறிய எளிமையான கருவியை கண்டுபிடித்த அறிவியல் ஆசிரியர் பாலமுருகனை சக ஆசிரியர்களும் பொதுமக்களும் பாராட்டினார்கள்.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை அருகில் உள்ள அண்டனூர் கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் பாலமுருகன். இவர் ஒரு தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது ஊர் கிராம ஊராட்சி ஆக இருப்பதால் பல்வேறு காரணங்களினால் ஊராட்சியின் மூலம் வினியோகம் செய்யப்படுகின்ற குடிதண்ணீர் எந்த நேரத்தில் வரும் என்பது தெரியாத நிலை இருந்தது. சில நேரங்களிலும், இரவு நேரங்களிலும் தண்ணீர் வருவது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் வீட்டு வாசலில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கும்.
இதனை கண்ட அறிவியல் ஆசிரியர் தண்ணீர் வீணாவதை தடுக்க என்ன செய்வது என்று யோசித்தார். அப்போது தண்ணீர் குழாயை மூடுவதற்கு பயன்படுத்தப்படும் மூடியில் சிறு துளையிட்டு அதில் ஒரு விசிலை பொருத்தினார். தண்ணீர் வருவதற்கு முன் குழாயில் காற்று நிரம்பி இருக்கும். இந்த விசில் பொருத்திய மூடியை குழாயில் போட்டு மூடி விட்டாள் குழாயில் தண்ணீர் வந்தவுடன் அதில் உள்ள காற்று வெளியேறி விசில் அடிக்க ஆரம்பித்து விடும். இப்போது தண்ணீர் வரப்போவதை நாம் அறிந்துகொள்ள முடியும் இதன் மூலம் தண்ணீர் வீணாவது தடுக்கப்படும். இந்த எளிமையான கருவியை கண்டுபிடித்த அறிவியல் ஆசிரியர் பாலமுருகனை சக ஆசிரியர்களும் பொதுமக்களும் பாராட்டினார்கள்.

மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே சேப்பிளான்தோப்பு பகுதியை சேர்ந்தவர் போஸ் என்ற போஸ் மணி (வயது 34), கூலித்தொழிலாளி. இவரது மனைவி அமுதா. இவர் கட்டிட பணியில் சித்தாள் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் போஸ் மணி மதுகுடிப்பதற்காக பணம் கேட்கும்போது அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இதேபோல கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ந் தேதி அவர்களுக்குள் வாக்குவாதமாகி தகராறு ஏற்பட்டது. அன்றைய தினம் இரவில் அமுதாவின் தலை மீது கல்லை தூக்கி போஸ் மணி போட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 13-1-2015 அன்று இறந்தார். மேலும் சம்பவத்தன்று அக்கம்பக்கத்தினருக்கு போஸ் மணி, கொலை மிரட்டல் விடுத்திருந்தார். மனைவியை கொலை செய்தது மற்றும் மற்றவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போஸ் மணியை கைது செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டாக்டர் சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார்.
இதில் மனைவி அமுதாவை கொலை செய்ததற்கு ஆயுள்தண்டனையும், அபராதமாக ரூ.20 ஆயிரமும், அபராத தொகை கட்டத்தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் போஸ்மணிக்கு விதித்து இதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
மேலும் அவரது 3 குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார். இதைத்தொடர்ந்து போஸ்மணியை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைக்க பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

பொது மக்கள் குடிநீர் குழாயடியில் காத்திருக்கும் நிலைக்கு தீர்வாக கந்தர்வக்கோட்டையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் புதிய முறையை கண்டுபிடித்துள்ளார்.
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் 3 நாட்களுக்கு ஒரு முறையும், ஒரு சில பகுதிகளில் வாரம் ஒரு முறையும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் எப்போது வரும் என்ற நேரக்கணக்கீடு எதுவும் கிடையாது. மேலும் அடிக்கடி குழாயில் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுவதும் இயல்பு. இதனால் பொது மக்கள் குடிநீர் குழாயடியில் காத்திருக்கும் நிலை இன்றளவும் உள்ளது.
இதற்கு தீர்வு காண கந்தர்வக்கோட்டையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் பாலமுருகன் புதிய முறையை கண்டுபிடித்துள்ளார். அதாவது காவிரி குடிநீர் வரும் குழாயின் மூடியில் விசில் ஒன்றை பொருத்தியுள்ளார். பொதுவாக குழாயில் தண்ணீர் வருவதற்கு முன்பு காற்று வரும். அதன் மூலமாக குடிநீர் வருவதை 15 நிமிடங்களுக்கு முன்னதாக அடிக்கும் விசில் சத்தம் மூலம் பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம்.
எனவே தண்ணீருக்கு நள்ளிரவு வரை காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படுவதோடு, தண்ணீர் வீணாவதும் தடுக்கப்படும் என்றார். இதனை அரசே ஏற்று செயல்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவன ஊழியர் மர்மமரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆதனக்கோட்டை:
பெருங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 38). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் செல்லத்துரை பெருங்களூர் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் பிணமாக கிடந்தார். மேலும் அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் ஆதனக்கோட்டை போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகையிலை பொருட்கள் விற்றவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடகாடு:
வடகாடு அருகே உள்ள புளிச்சங்காடு கைகாட்டி பகுதிகளில் வடகாடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பெட்டிக்கடையில் நெடுவாசல் பகுதியை சேர்ந்த மாசிலாமணி (வயது 45) என்பவர் புகையிலை பொருட்கள் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலத்த மழை பெய்தும் பெரிய குளம் நிரம்பாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கறம்பக்குடி:
கறம்பக்குடி, புதுக்கோட்டை சாலையில் பெரியகுளம் உள்ளது. 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தின் மூலம் அந்த பகுதியில் சுமார் 200 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றுவந்தன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த குளத்திற்கு வரும் வரத்துவாரிகள் அனைத்தும் அடைபட்டு கிடப்பதால் குளத்திற்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் அப்பகுதியில் உள்ளவிவசாய நிலங்கள் தரிசாகவே கிடக்கின்றன.
சிலர் ஆழ்குழாய் கிணற்றின் மூலம் விவசாயம் செய்தபோதும் குளத்தில் தண்ணீர் தேங்காததால் கோடைகாலத்தில் நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கறம்பக்குடி பெரியகுளத்தை தூர்வாரி வரத்து வாரிகளை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதன்பேரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.35 லட்சத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது மதகுகள் மட்டுமே சீரமைக்கப்பட்டது. ஆனால் வரத்துவாரிகள்சீரமைக்கப்படவில்லை. தற்போது, புரெவி புயலால் கனமழை பெய்து அனைத்து பகுதிகளிலும் ஏரி, குளங்கள் நிரம்பியபோதும் வரத்துவாரி அடைப்பால் கறம்பக்குடி பெரியகுளம் தண்ணீர் இன்றி வறண்டே காணப்படுகிறது.
இது குறித்து பெரியகுளம் ஆயக்கட்டு விவசாயிகள் கூறும்போது, வரத்துவாய்கால்களை சரிசெய்யாமல் மதகுகளை புதிதாக கட்டுவதில் பலன் இல்லை என கூறினோம். ஆனால் நிதி ஒதுக்கி வாய்காலை தூர்வாருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் கண்டுகொள்ளவில்லை. தற்போது மழை பெய்தும் குளம் நிரம்பவில்லை. எனவே இனிமேலாவது கறம்பக்குடி பெரியகுளம் வரத்து வரியை தூர்வார வேண்டும் என்றனர்.