என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
ஆலங்குடி அருகே டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி:
வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சார்பில் ஆலங்குடி சந்தைப்பேட்டையிலிருந்து கலைஞர் சாலை வழியாக ஊர்வலமாக ஆலங்குடி வடகாடு முக்கம் வந்தடைந்தனர்.
பின்னர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கட்சியின் ஒன்றியச்செயலாளர் பாஸ்கரன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக ஒன்றியச்செயலாளர் மணிமேகலை ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினர். வேளாண் திருத்த சட்டங்களை ரத்துசெய், சுற்றுச்சூழல் திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னெடுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட செயலாளர் தினேஷ்குமார், நகர செயலாளர் சரவணன், முருகேசன் உள்பட 70 பேருக்குமேல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Next Story






