என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலியாகினர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்திருந்தாலும் இறப்பு எண்ணிக்கை அவ்வப்போது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அரசால் வெளியிடப்பட்ட பட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் பலியாகியிருந்தனர். இதனால் மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் நேற்று புதிதாக 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து678 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 79 பேர் பூரண குணமடைந்தனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 809 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு தற்போது 554 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குழந்தை திருமணம் நடந்தால் சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருகிறது. 18 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பெற்றோர், திருமணம் செய்து வைப்பதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்துள்ளன. குழந்தைகள் திருமணத்தை தடுக்க சைல்டு லைன் அமைப்பினர் மற்றும் போலீசார் குழு அமைத்து பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் கொரோனா ஊரடங்கின் போது குழந்தை திருமணங்கள் தொடர்பாக அதிக அளவில் புகார்கள் வந்தன. இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலீசார் சென்று அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-
இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் நேற்று வரை புதுக்கோட்டை மாவட்டத்தில் 54 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பாத சிறுமிக்கும், 21 வயது நிரம்பாத வாலிபருக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும். குறிப்பிட்ட சமூகத்தினர் தங்களது உறவு முறை விட்டுவிடக்கூடாது என்பதற்காக 18 வயது நிரம்பாத சிறுமிக்கு உறவுமுறை வாலிபருக்கு திருமணம் செய்து வைப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
இதனால் குழந்தை திருமணம் தொடர்பாக தகவல் வந்த உடனே விரைந்து சென்று திருமணத்தை நிறுத்தியுள்ளோம். குழந்தை திருமணம் நடந்தால் சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். கடந்த மாதத்தில் மட்டும் 8 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 604 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 92 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் `டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து730 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு மாவட்டத்தில் மேலும் ஒருவர் பலியாகினார். இதனால் இறப்பு எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது. அரிமளம் ஒன்றியத்தில் நேற்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு கடன் வாங்கி கொடுப்பதை விட அவர்கள் சுயதொழில் செய்து முன்னேறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என திட்டமிட்டோம்.
புதுக்கோட்டை:
கொரோனாவின் அடுத்தடுத்த அலைகள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை நிர்கதியாக்கி விட்டது. வாழ்வாதாரம் இழந்த பலர் கடன் சுமைக்கு ஆளாகி வாழ்வை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். அதுபோன்ற முடிவு எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தி வரும் அரசு, மனநல ஆலோசனைகள் வழங்கி அவர்களின் வாழ்வை மீட்டெடுக்கும் முயற்சியையும் மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே நிதி நிறுவனம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் பெற்ற பலர் தவணைத் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் அவமானங்களை சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு உரிய பயிற்சியுடன் கூடிய தொழிலை கற்றுக்கொடுத்து, நிரந்தர வருவாயை ஈட்டித்தரும் பணியில் மாநில அரசு செயல்படுகிறது.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடனில் தத்தளிக்கும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வாழை நாரில் இருந்து கூடை தயாரிக்கும் தொழிலை கற்றுக்கொடுத்து நிரந்தர வருவாயை ஏற்படுத்தி தந்திருக்கிறது. இது குறித்து மாநில அளவிலான ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை பயிற்சியாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது:-
இதைத்தொடர்ந்து மகளிருக்கு தினமும் ரூ.200 முதல் 350 வரை ஊதியம் கிடைக்கும் வகையில் அவர்கள் சொந்த ஊரிலேயே வேலையை செய்து வருமானம் பெறுவதுடன் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் பணி பாதுகாப்பும் சுகாதார பாதுகாப்புக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வடகாடு, ஆதனக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இவர்கள் தயாரிக்கும் கூடைகள் கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது 27 செ.மீ. அகலமும், 19 செ.மீ. உயரமும் கொண்ட கூடையை தயாரித்து வருகின்றனர். இந்த கூடைகள் முடைவதற்கான நார்ப் பொருள்கள் திருநெல்வேலி மற்றும் சோழவந்தான் ஆகிய பகுதிகளில் வாங்கப்படுகிறது.
பெண்களுக்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கிறோம். அதைத் தொடர்ந்து அவர்கள் 200 ரூபாய் சம்பாதிக்கும் தகுதியை பெற்று விடுகின்றனர். டிரீஸ் தொண்டு நிறுவனத்தின் மூலம் கூடை பின்னும் பெண்களுக்கு வாரம் ஒரு முறை ஊதியம் வழங்கப்படுகிறது. பெண்கள் சுயதொழில் மூலம் வருமானம் பெற்று சொந்தக்காலில் நிற்கும் தன்னம்பிக்கையை நாங்கள் வளர்த்து வருகிறோம் என்றார்.
கொரோனாவின் அடுத்தடுத்த அலைகள் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை நிர்கதியாக்கி விட்டது. வாழ்வாதாரம் இழந்த பலர் கடன் சுமைக்கு ஆளாகி வாழ்வை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். அதுபோன்ற முடிவு எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தி வரும் அரசு, மனநல ஆலோசனைகள் வழங்கி அவர்களின் வாழ்வை மீட்டெடுக்கும் முயற்சியையும் மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே நிதி நிறுவனம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கடன் பெற்ற பலர் தவணைத் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் அவமானங்களை சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு உரிய பயிற்சியுடன் கூடிய தொழிலை கற்றுக்கொடுத்து, நிரந்தர வருவாயை ஈட்டித்தரும் பணியில் மாநில அரசு செயல்படுகிறது.
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடனில் தத்தளிக்கும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வாழை நாரில் இருந்து கூடை தயாரிக்கும் தொழிலை கற்றுக்கொடுத்து நிரந்தர வருவாயை ஏற்படுத்தி தந்திருக்கிறது. இது குறித்து மாநில அளவிலான ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை பயிற்சியாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் தொண்டு நிறுவனங்களில் 1,560 மகளிர் சுய உதவி குழுக்கள் சுமார் 35,000 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களுக்கு குழுவை வழி நடத்துவது, வழிகாட்டுவது, கடன் உதவி போன்ற உதவிகள் செய்து வந்தோம். ஆனால் அவர்கள் கடன் வாங்கும்போது இருக்கும் ஆர்வம் திருப்பி செலுத்தும்போது இருப்பதில்லை. காரணம் வாங்கிய கடனை ஏதாவது ஒரு வகையில் செலவு செய்து விடுகின்றனர்.
இதையும் படியுங்கள்...கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் விவரங்களை இணைப்பது எப்படி?- பொது சுகாதாரத்துறை விளக்கம்
இந்த நிலையில் மகளிர் சுயஉதவிக் குழுவிற்கு கடன் வாங்கி கொடுப்பதை விட அவர்கள் சுயதொழில் செய்து முன்னேறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என திட்டமிட்டோம். அதன்படி வாழை நார் மூலம் கூடை தயாரித்து அதை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான ஆர்டர் கிடைத்தது. அதற்கு முதலில் பெங்களூரில் உள்ள நிறுவனத்தில் 2015ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தோம்.இதைத்தொடர்ந்து மகளிருக்கு தினமும் ரூ.200 முதல் 350 வரை ஊதியம் கிடைக்கும் வகையில் அவர்கள் சொந்த ஊரிலேயே வேலையை செய்து வருமானம் பெறுவதுடன் இந்த கொரோனா பேரிடர் காலத்தில் பணி பாதுகாப்பும் சுகாதார பாதுகாப்புக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த தொழில் செய்யும்போது சுயதொழில் என்றால் என்ன? அதில் என்ன வருமானம் கிடைக்கும் என்பதை அவர்களது உறவினர்களும் அறிந்து கொள்ள முடிந்தது. இதனால் சுயஉதவிக்குழு பெண்களின் கணவர்களும் இந்த தொழிலை கற்றுக்கொண்டு வேலை செய்து குடும்ப வருமானத்தை ஈட்டுகின்றனர். அத்துடன் இந்த குழுவினர் கடனில் சிக்கித் தவிக்காமல் சொந்தக்காலில் நிற்கக்கூடிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

வடகாடு, ஆதனக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இவர்கள் தயாரிக்கும் கூடைகள் கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது 27 செ.மீ. அகலமும், 19 செ.மீ. உயரமும் கொண்ட கூடையை தயாரித்து வருகின்றனர். இந்த கூடைகள் முடைவதற்கான நார்ப் பொருள்கள் திருநெல்வேலி மற்றும் சோழவந்தான் ஆகிய பகுதிகளில் வாங்கப்படுகிறது.
பெண்களுக்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கிறோம். அதைத் தொடர்ந்து அவர்கள் 200 ரூபாய் சம்பாதிக்கும் தகுதியை பெற்று விடுகின்றனர். டிரீஸ் தொண்டு நிறுவனத்தின் மூலம் கூடை பின்னும் பெண்களுக்கு வாரம் ஒரு முறை ஊதியம் வழங்கப்படுகிறது. பெண்கள் சுயதொழில் மூலம் வருமானம் பெற்று சொந்தக்காலில் நிற்கும் தன்னம்பிக்கையை நாங்கள் வளர்த்து வருகிறோம் என்றார்.
மீமிசல் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
கோட்டைப்பட்டினம்:
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள ஆத்திவயல் பகுதியை சேர்ந்தவர் ஈசாக். இவரது மகன் சுரேஷ் (வயது 37). இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோட்டைப்பட்டினம் நோக்கி நேற்று வந்து கொண்டிருந்தார். ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள யாக்கூப் ஹசன்பேட்டை அருகே வந்த போது எதிரே கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் கார்த்திக் (23) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும், சுரேஷ் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் தலையில் பலத்த காயமடைந்த சுரேஷ், சம்பவ இடத்திலேயே பலியானார். கார்த்திக் படுகாயம் அடைந்தார். விபத்தை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து படுகாயமடைந்த கார்த்திக்கை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கோட்டைப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி அருகே அரசு பள்ளியில் 35 மடிக்கணினிகள் திருட்டு போயின. மற்றொரு பள்ளியிலும் மர்ம நபர்கள் கை வரிசை காட்டினர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 664 மாணவர்கள் படித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி மூடப்பட்டுள்ளது. தற்போது, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக வேதியியல் ஆய்வகத்தில் 35 மடிக்கணினிகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் நேற்று பள்ளியின் தலைமை ஆசிரியர் மலையப்பன் வேதியியல் ஆய்வகத்திற்கு சென்றபோது அங்கு வைக்கப்பட்டிருந்த 35 மடிக்கணினிகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, சுப்பிரமணியபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஒரு அறையில் வேறொரு பூட்டு போடப்பட்டு இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த மெக்கானிக்கல் பொருட்களை திருடி விட்டு வேறொரு பூட்டால் அந்த அறையை பூட்டி விட்டு சென்றிருப்பது தெரிய வந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பள்ளிகளில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் திராவிடசெல்வம் நேற்று அந்த பள்ளிகளின் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்.
மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவரங்குளம்:
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அழகப்பா நகரில் வசித்து வந்தவர் கருப்பையா (வயது 48). இவர், திருவரங்குளம் அருகே உள்ள வல்லத்திராக்கோட்டை மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது இப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. இதனால், மின் பாதையில் ஏற்பட்ட பழுதை மின் வாரிய ஊழியர்களுடன் சென்று மின்மாற்றியில் ஏறி கருப்பையா பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனே, சக ஊழியர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து வல்லத்திராக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் திருட்டை அரங்கேற்றி உள்ளனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த சுப்பிரமணியபுரத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் வேதியியல் ஆய்வக அறையில் 2019-2020 ஆம் ஆண்டிற்கு மாணவர்களுக்கு வழங்குவதற்கான லேப்-டாப்கள் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் கடந்த மே மாதம் ஒன்பதாம் தேதி முதல் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே நடப்பு கல்வியாண்டுக்காக மாணவர்களுக்கு புத்தகம் வழங்கும் பணிக்காக பள்ளி திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
அதன்படி நேற்று பள்ளியின் தலைமையாசிரியர் மலைச்சாமி பள்ளிக்கு சென்றார். பின்னர் அவர் ஒவ்வொரு அறையாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் லேப்-டாப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வேதியியல் ஆய்வக அறையின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தமிழக அரசின் 35 லேப்டாப்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவர் இச்சம்பவம் குறித்து நாகுடி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து லேப் டாப்புகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். இதேபோல் சுப்பிரமணியபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள இயற்பியல் ஆய்வகத்தில் வைக்கப்பட்டிருந்த ட்ரில்லிங் மெஷின், தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட ரூ.17 ஆயிரம் மதிப்பிலான பொருட்களையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இச்சம்பவம் குறித்து அப்பள்ளியின் தலைமையாசிரியர் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள் இந்த திருட்டை அரங்கேற்றி உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 130 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 631 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகினர். இதனால் மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 297 ஆக உயர்ந்துள்ளது. அரிமளம் பகுதியில் 7 பேருக்கு நேற்று புதிதாக தொற்று ஏற்பட்டிருந்தது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
புதுக்கோட்டை நகரில் ஊரடங்கை மீறி திறந்த கடைகளுக்கு அபராதம் விதித்து ரூ.18 ஆயிரம் வசூலித்தனர்.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தன. இந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட கடைகளை தவிர வேறு கடைகள் திறக்கப்பட்டுள்ளதா? என புதுக்கோட்டை நகர கடைவீதியில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஊரடங்கில் அனுமதிக்கப்படாத ஜவுளி கடைகள், நகைக்கடைகள் திறந்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த ஆய்வின் போது ஊரடங்கை மீறி திறந்த கடைகளுக்கு அபராதம் விதித்து ரூ.18 ஆயிரம் வசூலித்தனர்.
பொன்னமராவதி லயன்ஸ் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
பொன்னமராவதி:
பொன்னமராவதி லயன்ஸ் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு லயன்ஸ் சங்கத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முகாமை வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் பொதுமக்களுக்கு தடுப்பூசியை செலுத்தி தொடங்கி வைத்தார். இதில் மருத்துவர் அருண் மற்றும் காரையூர் வட்டார சுகாதார மருத்துவக்குழுவினர் பங்கேற்று 195 பேர்களுக்கு தடுப்பூசியை செலுத்தினர். இதில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கறம்பக்குடி அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:
கறம்பக்குடி அருகே மழையூர் பகுதியில் உள்ள காட்டாற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில் மழையூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அப்போது மேல மஞ்சக்கரையில் மாட்டுவண்டியில் ஒருவர் மணலுடன் சென்று கொண்டிருந்தார். அவரை போலீசார் நிறுத்தி விசாரணை நடத்தியபோது அவர், கீழபுலவன்காட்டைச் சேர்ந்த நாகராஜன் (வயது 43) என்பதும், மாட்டு வண்டியில் மணல் கடத்தி சென்றதும் தெரிய வந்தது. அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர். மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.