என் மலர்
புதுக்கோட்டை
- பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன
- பரிசளிப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியை குப்பை இல்லாத நகராட்சியாக மாற்றும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் பள்ளி மாணவ , மாணவியர்களுக்கான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது.கடந்த 14 நாட்களாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற்று வந்த விழிப்புணர்வு போட்டியில் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை எவ்வாறு பிரிப்பது, பிரித்த குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது.
விழிப்புணர்வு போட்டியில் கலந்து கொண்டு வென்ற மாணவ , மாணவியர்களுக்கு நகராட்சி அலுவலகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாணவ, மாணவியர்களுக்கு நகர்மன்றத் தலைவர் ஆனந்த் சான்று மற்றும் பரிசுகளை வழங்கினார்.நகராட்சி ஆணையர் லீமாசைமன், நகர்மன்றத் துணைத் தலைவர் முத்து உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சடையம்பட்டியில் நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- நெல்மூட்டைகளை விற்க்க முடியாமல் தவிப்பு
புதுக்கோட்டை:
பொன்னமராவதி அருகே சடையம்பட்டியில் நெல்கொள்முதல்நிலையம் திறக்கவேண்டும் என ஊர் பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதை ெதடர்ந்து. மரவாமதுரை ஊராட்சித்தலைவர் அடைக்கன் தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். இதில் கூறியுள்ளதாவது:-
மறாவமதுரை ஊராட்சி சடையம்பட்டி கிராமத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக நெல் கொள்முதல் நிலையம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. இதனால் இப்பகுதியில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் பெரிதும் பயன்பட்டு வந்தனர். அனால் தற்போது எல்லா பகுதிகளிலும் நெல்கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. ஆனால் எங்கள் ஊரில் உள்ள (சடையம்பட்டி) நெல் கொள்முதல் நிலையத்தை செயல் பாட்டுக்கு கொண்டுவரவில்லை. பொன்னமராவதி தாலுகாவில் முதன் முதலாக தொடங்கப்பட்ட நெல்கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறந்து மறவாமதுரை ஊராட்சியில் உள்ள 20க்கும்மேற்பட்டி கிராம மக்கள் ஓலியமங்களம், மேலத்தானியம், எம்.உசிலம்பட்டி, காரையூர், சேரனூர் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்து வைத்துள்ள நெல்மூட்டைகளை விற்க்க முடியாமலும் தனியார் வியபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கும், தள்ளப்பட்டுள்ளன.
எனவே சடையம்பட்டி கிராமத்தில் நெல்கொள்முதல் நிலையம் மீண்டும் திறந்து விவசாயிகளின் வாழ்வில் வளம்பெற ச்செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
புதுக்கோட்டை:
அறந்தாங்கி தாலுகா பெருங்காடு கிராமத்தில் அமைந்து அருள்பாளித்துவரும் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று அப்பகுதி கிராமத்தார்களால் கும்பாபிஷேகம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
அதன்படி யாகசாலை அமைத்து கடந்த 11ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 2 நாட்களாக மூன்று கால யாகபூஜை சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று நான்காம்காலயாக பூஜை முடிவுற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.
கடம்புறப்பாடானது கோயிலை வலம் வந்து பின்பு கோபுர கலசத்தை அடைந்தது. அதனை தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி அய்யர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக்கான திரண்டிருந்த அப்பகுதியைச்சுற்றியுள்ள பொதுமக்கள் ஆன்மீக மெய்யன்பர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அம்மன் அருள்பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 50க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- தூய்மைக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மற்றும் அன்னவாசல் பேரூராட்சி சார்பில் தூய்மைக்கான மக்கள் இயக்க செயல்பாடுகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அன்னவாசலில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். இதில் அன்னவாசல் அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று மக்கள் இயக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கீர மங்கலம் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
அன்னவாசல் அரசு மகளிர் பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி கடைவீதி, கூட்டுறவு சொசைட்டி வழியாக வளமீட்பு பூங்காவில் நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு குப்பைகளை மக்கும் மக்காதவை என பிரித்தெடுக்கும் முறைகள் குறித்து அறிந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கீரமங்கலம் பேரூராட்சி தலைவர் சிவகுமார், வார்டு உறுப்பினர்கள் ,அலுவலகர்கள் ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- மகளை தாக்கிய தந்தை கைது செய்யப்பட்டார்
- அக்கிரி கல்லூரியில் படித்து வருகிறார்.
புதுக்கோட்டை:
பொன்னமராவதி பெருமாள் கோயில் வீதியைச்சேர்ந்த அழகர் மகன் அன்புநாதன்(வயது 51) இவர் குழிபிறை தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரோஜா(45).இவர்களது மகள் மோனிகா(19). கோயமுத்தூரில் அக்கிரி கல்லூரியில் படித்து வருகிறார்.
கணவன், மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 மாதமாக ஒரே வீட்டில் தனித்தனியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரிக்கு பணம் கட்டுவதற்கு மோனிகா தனது தந்தையான அன்புநாதனிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு பணம் தரமுடியாது என்னிடம் ஏன் கேட்கிறாள் என்று சொல்லி மகளை தாக்கியுள்ளார். இதில் மோனிகாவிற்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து பொன்னமராவதி போலீசில் மோனிகா புகார் செய்ததன் பேரில் சப்.இன்ஸ்பெக்டர் ரகுராமன் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் அன்புநாதனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- ஆதரவற்ற விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கால்நடை துறை சார்பில் வெள்ளாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
- விழாவில் 100 பயனாளிகளுக்கு தலா ரூ.17,500 மதிப்புள்ள 5 வெள்ளாடுகள் ஒவ்வொரு பயனாளிக்கும் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் ஆதரவற்ற விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட கால்நடை துறை சார்பில் வெள்ளாடுகள் வழங்கும் விழா புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
விழாவில் 100 பயனாளிகளுக்கு தலா ரூ.17,500 மதிப்புள்ள 5 வெள்ளாடுகள் ஒவ்வொரு பயனாளிக்கும் வழங்கப்பட்டது.
விழாவில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை கலந்து கொண்டு பயனாளிகளுக்கு முழு மானியத்தில் வெள்ளாடுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை ஒன்றிய குழு தலைவர் கார்த்திக், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் ஐயா, நகரச் செயலாளர் ராஜா, கால்நடை துறை மருத்துவர்கள் செந்தில்குமார், பிரசாத், செந்தில் ராஜன், தினேஷ்குமார், மகேஸ்வரி, கவின் குமார் மற்றும் கால்நடை துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்தது
- சாலையின் நடுவே இறந்து கிடந்தது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதி சாலையில் பொன்னமராவதியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 4 முதல் 5 வயது வரை மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று சம்பவ இடத்திலேயே பலியானது. சாலையின் நடுவே இறந்து கிடந்த புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு உடற்கூறு ஆய்விற்கு பின்னர் வனத்துறை பகுதியில் புதைத்தனர். சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சற்று கவனமாக வாகனத்தி ஓட்டி வன விலங்குகளை காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.
- இரும்பு குழாயால் பெயிண்டர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
- சைக்கிளுக்கு காற்று அடிப்பதற்காக சென்றவர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தை சேர்ந்தவர் குமாரவேல் (வயது50). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியான இவருக்கு விஜயா என்ற மனைவியும், சூர்யா என்ற மகனும், பார்க்கவி என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று தனது சைக்கிளுக்கு காற்று அடிப்பதற்காக அருகில் சென்ற குமாரவேல், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். அப்போது அங்கே ஒரு வீட்டின் திண்ணையில் ரத்த காயங்களுடன் குமாரவேல் கிடந்துள்ளார். சைக்கிள் கீழே சாய்ந்து கிடந்தது. அதன் அருகில் இரும்பு குழாய் ஒன்று கிடந்தது.
இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். அங்குவந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குமாரவேலை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்பு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலீசார் குமாரவேலை யாரும் கொலை செய்து உடலை இங்கே வீசி விட்டு சென்றனரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொன்னமராவதியில் கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றது
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் புத்தக திருவிழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சியாக பொன்னமராவதியில் கலை இலக்கியப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 5-வது புத்தக திருவிழா வரும் 29-ந் தேதி முதல் ஆகஸ்ட் 7-ந் தேதி வரை புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடைபெற உள்ளது.
அதன்ஒரு பகுதியாக பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளியில், பொன்னமராவதி வட்டார அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கலை இலக்கியப்போட்டிகள் நடபெற்றது. மூன்று பிரிவுகளாக பேச்சுப் போட்டி, கவிதை போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சதாசிவம், தமிழநாடு அறிவியல் இயக்க முன்னாள் மாநிலப் பொருளாளர் பிரபாகரன், மாநில செயலர் பாலகிருஷ்ணன், வட்டாரவள மைய மேற்பார்வையாளர் நல்லநாகு, தலைமையாசிரியர் தமிழ்செல்வன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க பொன்னமராவதி ஒன்றியத் த லைவர் அறிவுடைநம்பி, செயலர் ராசு, சுற்றுவட்டாரப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
- உள்ளாட்சி அமைப்புகள் இடைத் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.
- போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட த்தில் தேர்தல் நடைபெற்ற 7 உள்ளாட்சிப் பதவிகளுக்கு புதுக்கோட்டை, அறந்தாங்கி, அரிமளம், அன்னவாசல் ஆகிய ஊராட்சி ஒன்றி யங்களில் வாக்குகள் எண்ண ப்பட்டன. இதில் மாவட்ட ஊராட்சிக்குழு 7-வது வார்டில் தி.மு.க.வைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. வசம் இருந்த இடத்தை இடைத்தேர்தலில் தி.மு.க. கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிராம ஊராட்சி தலைவர் தேர்தலில் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் வெட்டுகாடு (பொது) ஊராட்சி மன்ற தலைவராக ஆரோக்கியசாமி வெற்றி பெற்றார். அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் மேலப்பட்டு (பொது) ஊராட்சி மன்ற தலைவராக அயூப்கான் வெற்றி பெற்றார். அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் நெடுங்குடி(பொது) ஊராட்சி மன்ற தலைவராக வெள்ளைச்சாமி வெற்றி பெற்றார். குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் தென்னங்குடி(பொது) ஊராட்சி மன்ற தலைவராக செல்லமணி வெற்றி பெற்றார். புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் தொண்டமான் ஊரணி (பொது) ஊராட்சி மன்ற தலைவராக தாமரைச்செல்வி வெற்றி பெற்றார். கல்லூர் கிராம ஊராட்சி வார்டு எண் 6க்கு பூமதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். செங்கீரை கிராம ஊராட்சியில் வார்டு எண் 5க்கு சாத்தையா வெற்றி பெற்றார். மிரட்டுநிலை கிராம ஊராட்சிக்கு வார்டு எண் 1க்கு பாண்டிசெல்வி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வன்னியம்பட்டி கிராம ஊராட்சி வார்டு எண் 1க்கு சின்னப்பொண்ணு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்
- நிலத்தடி நீர் பராமரிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடந்தது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ், மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் பராமரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் ரிச்சா குப்தா, அறிவியல் ஆேலாசகர் (நீர்வள ஆதாரம்) சுமன் சின்கா ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், நீர் வளத்தை பெருக்கிடபும், குடிநீர் ஆதாரங்களை மேம்பாடுசெய்திடவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து, அரிமளம் ஊராட்சி ஒன்றியம், கடையங்குடி ஹோல்ஸ் வொர்த் அணைக்கட்டு, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், திருவுடையார்பட்டி தடுப்பணை, புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூர் கிராமத்தில் வேளாண் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பண்ணைக்குட்டை, அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், பரம்பூர் ஊராட்சி பிலியம்பட்டியில் மேம்படுத்தப்பட்டுள்ள குடிநீர் ஊரணி ஆகியவற்றையும் இக்குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.
- விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- கள்ளச்சாராயம் குறித்து நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சைபர் கிரைம் பொறுப்பு மதுவிலக்கு அமலாக்க பிரிவு நகர உட்கோட்ட காவ ல் துணை கண்காணிப்பாளர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கலால் துறை அலுவலர்கள் இணைந்து கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபான பாட்டில்கள் தடுப்பு விழிப் புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி கொடியசைத்து து வக்கி வைத்தார். ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் குணமதி புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் மாணவர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.






