என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • ஆயிரக்கணக்கான பணம் கொள்ளை
    • கைரேகை நிபுணர்களுடன் போலீசார் விசாரணை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திருமயத்தில் ஊமையன் கோட்டை, மறவன் கோட்டை எனப்படும் கோட்டை உள்ளது. 1676 ஆம் வருடம் இராமநாதபுரம் சேதுபதி மன்னரால் கடடப்பட்ட இந்த கோட்டை இந்திய அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்றது. இந்த கோட்டையின் கீழ் புறத்தில் கால பைரவர் கோயில் உள்ளது. இந்த கோட்டையின் காவல் தெய்வதாக பைரவர் விளங்குவதால் கோட்டை பைரவர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்திலேயே வடக்கு பார்த்த ஒரே பைரவர் கோயில் இதுதான். கோயிலுக்கு முன்பும் செல்லும் சாலையில் செல்வோருக்கு இவர் பாதுகாப்பாக விளங்குவதாக மக்களின் நம்பிக்கை. இதன் காரணமாக இந்த கோயிலை கடந்த செல்வோர் தங்களது வாகனங்களை நிறுத்தி, பைரவரை பாதுகாவலாக அழைத்து வேண்டிக்கொண்டு உண்டியல்களில் காணிக்கை செலுத்துவது வழக்கம். தினமும் இது போன்று ஆயிரக்கணக்கானவர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்தி காணிக்கை செலுத்துவர். இந்நிலையில் இந்த கோயிலை திறப்பதற்காக வழக்கம் போல கோயில் அர்ச்சகர் வந்துள்ளார். அப்போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து அவர் திருமயம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மாதம் ஒருமுறை திறக்கப்படும் இந்த உண்டியலை, மர்ம ஆசாமிகள் உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளதால் ஆயிரக்கணக்கான ரூபாய் கொள்ளை போய் இருக்கலாம் என்று தெரிகிறது. கோட்டை பைரவல் கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • ஆஸ்திரேலிய தமிழ் நண்பர்கள் உதவி
    • தெருக்களில் குப்பைகள் கொட்ட கூடாது என்று அறிவுறுத்தல்

    கந்தர்வகோட்டை, 

    கந்தர்வகோட்டை ஊராட்சியில் குப்பைகளை சேகரித்து தூய்மை காவலர்களிடம் வழங்குவதற்கு ஏதுவாக ஆஸ்திரேலியா நாட்டில் வாழும் தமிழக நண்பர்கள் குழு சார்பில் பிளாஸ்டிக் கூடைகள் வழங்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி யாதவர் தெருவில் 50 குடும்பங்களுக்கு இல்லங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மை காவலர்களிடம் வழங்குவதற்கு ஏதுவாக, ஆஸ்திரேலியா நாட்டின் தமிழக நண்பர் குழு சார்பில் சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூடைகளை திமுக நகரச் செயலாளர் ராஜா குடும்பத் தலைவிகளிடம் வழங்கி குப்பைகளை சாலைகளிலோ அல்லது பொது இடத்தில் கொட்டாமல், கூடைகளில் சேகரித்து தெருவிற்கு வாகனங்களில் வரும் தூய்மை காவலர்களிடம் வழங்கி ஊராட்சியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர் வினோதா சாமிநாதன், சமூக ஆர்வலர் அறம் வளர் நம்பி, பாமக ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • உழவர் சந்தை முன்பு போராட்டம்
    • தனிநபருக்கு கடைகள் வாடகைக்கு விடுவதாக குற்றச்சாட்டு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்த வரும் விவசாயிகள், நகராட்சியின் செயல்பாட்டை கண்டித்து இன்று விற்பனையை கைவிட்டு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.புதுக்கோட்டை சந்தைபேட்டை, திலகர் திடலில் தமிழக அரசின் உழவர் சந்தை உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில், கடந்த 2000 ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உழவர் சந்தையில் 104 கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கடைகளின் மூலமாக விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த விளை பொருட்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெற்று வருகின்றனர். இதனைவேளாண் விற்பனை துணை இயக்குனரகம் நிர்வகித்து வருகிறது.இந்த உழவர் சந்தையில் விவசாயிகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் ஆனால் விதிமுறையை மீறி, புதுக்கோட்டை உழவர் சந்தையில் உள்ள கடைகள், தனிநபர்கள் வியாபாரம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் உழவர் சந்தைக்கு வெளியில் இருபுறமும் வியாபாரிகள் கடைகள் அமைத்து விற்பனை செய்வதற்கு நகராட்சி அனுமதி அளித்துள்ளது. உழவர் சந்தைக்கு வெளியில் வியாபாரம் செய்பவர்களிடம் தரை வாடகையை ஒப்பந்ததாரர் வசூலித்து வருகிறார்.இதனால் உழவர் சந்தையில் கடை நடத்தி வரும் விவசாயிகள் தங்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்படுவதாக நகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்து உள்ளனர். இருப்பினும் வேளாண் துறையும், நகராட்சி நிர்வாகமும் இதனை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மேலும சிலர் உழவர் சந்தைக்கு வெளியில் தற்காலிக கடைகளை அமைக்க தொடங்கி உள்ளனர். இதனை கண்டு ஆத்திரம் அடைந்த உழவர் சந்தையில் விற்பனை செய்யும் விவசாயிகள் இன்று திடீர் என விற்பனையை கைவிட்டு தர்ணா போராட்டத்தில் குதித்தனர். அப்போது அவர்கள் வேளாண்துறையையும், நகராட்சியையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். விவசாயிகளின் இந்த திடீர் தர்ணா போராட்டத்தினால் உழவர் சந்தையில் விற்பனை முடங்கியது. இதனால் காய், கனி உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்ற த்துடன் திரும்பினர்.

    தர்ணா போராட்டம் குறித்து ராஜாங்கம் என்ற விவசாயி கூறும்போது.... உழவர் சந்தையின் உள்ளே ஒரு பால்கடை இருக்கும் பட்சத்தில், தற்போது வெளியிலும் ஒரு பால்கடை அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பால், டீ குடிக்க வருபவர்கள் அதிகளவு இந்த பகுதியில் திரளுகின்றனர். மேலும் வெளியில் அதிகளவு கடைகள் போட்டு கொள்ள நகராட்சி அனுமதித்து வருவதால், பொதுமக்கள் உழவர் சந்தைக்கு உள்ளே வந்து செல்வதில் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது என்று குற்றம்சாட்டினார்.விவசாயி பரமசிவம் கூறும்போது.... தனி நபர்களுக்கு கடைகளை வாடகைக்கு விடக்கூடாது. வெளியில் அதிகளவு கடைகளை அனுமதிக்க கூடாது, விவசாயிகளுக்கே முன்னுரிமை தர வேண்டும் என்று ஒவ்வொரு முறை புகார் அளிக்கப்படும் போது, சரி செய்து விடுகிறோம் என்று அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தான் இன்று விற்பனையை கைவிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு ஒரு முடிவு தெரியாமல் நாங்கள் விடுவதாக இல்லை என்று அவர் தெரிவித்தார்.விவசாயிகளின் போராட்டத்தை ெதாடர்ந்து உழவர் சந்தைக்கு முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர். போராட்ட த்தில் ஈடுபட்ட விவசாயி களிடம் நகராட்சி அதிகாரிகளும், போலீசா ரும் பேச்சு வார்த்தை நடத்தினர். விவசாயிகளின் இந்த திடீர் தர்ணா போரா ட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பை நிலவியது.

    • கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது
    • முன்னதாக யாகசாலை பூஜை நடைபெற்றது

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை அருகே வலம்புரி பால விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுக்கா புதுப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ வலம்புரி பால விநாயகர் பாலமுருகன் சிவலிங்கம் மற்றும் நவகிரகங்களுக்கு நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோவில் அருகே யாக சாலை அமைத்து இரண்டு கால பூஜைகள் நடைபெற்றது. பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நீர் கலசங்களில் வைத்து கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து புனித நீர் கோயில் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் புதுப்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • நிவாரணம் வழங்க கோரிக்கை
    • காலம் தவறிய மழையால் பாதிப்பு

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதிகளில் உள்ள பாளையூர் குளவாய்ப்பட்டி. மணியம்பலம். கத்தக்குறிச்சி. களங்குடி. வல்லத்தி. ராக்கோட்டை. திருவரங்குளம். பெரியநாயகிபுரம். வம்பன். கொத்த கோட்டை. தெட்சிணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் காலம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். மாவட்ட வேளாண் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் தமிழக அரசு நிவாரணத்தை விரைந்து வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பேரணியுடன் தொடங்கியது
    • முக்கிய வீதிகளில் ஊர்வலம்

    புதுக்கோட்டை,

    அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10-ஆவது மாநில மாநாடு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது.அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் 10-வது மாநில மாநாட்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் இருந்து பல வாகனங்களில் ஆயிரக்கணக்கான விவசா யத் தொழிலாளர்களும், செம்படைத் தோழர்கள் நேற்று புதுக்கோட்டையில் குவிந்தனர். புதுக்கோட்டை பால்பண்ணை ரவுண்டா னாவில் தொடங்கிய பேரணியை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.ச ண்முகம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    சீருடை அணிந்த பெண்களின் கொடி அணிவகுப்பு, சீருடை ஆண்களின் கொடி அணிவகுப்பு, செண்டை மேளம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆட்டக்கலைகள், வாண வேடிக்கைகள், கொள்கை முழக்கங்களுடன் தொடங்கி ய இப்பேரணியானது திலகர்திடல், பழநியப்பா முக்கம், மேல ராஜவீதி, தெற்கு நான்காம்வீதி, அண்ணாசிலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. பேரணியில் அகில இந்திய, மாநிலத்தலைவர்களைத் தொடர்ந்துமாவட்ட வாரியாக பல்லாயிர க்கணக்கானோர் அணி வகுத்து வந்தனர். பேரணி யானது பொதுக்கூட்டம் நடைபெறும் சின்னப்பா பூங்காவில் நிறைவடைந்தது.பொதுக்கூட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர் தலைமை வகித்தார். அகில இந்தியத் தலைவர் ஏ.விஜயராகவன் சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிஷ்ணன், சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் பி.வெங்கட் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநில செயலாளர் எம்.சின்னதுரை எம்எல்ஏ. சிபிஎம் மாவ ட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், வி.தொ.ச. மாநில செயலாளர் அ.பழநிசாமி, துணைத் தலைவர் பி.வசந்தாமணி உள்ளிட்டோர் பேசினர்.

    முன்னதாக மாநில பொருளாளர் எஸ்.சங்கர் வரவேற்க, வரவேற்புக்குழு பொருளாளர் கி.ஜெய பாலன் நன்றி கூறினார். பொதுக்கூட்டத்தில் ஆலங்குடி விடியல் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    • வேளாண் இயக்குனர் நேரில் ஆய்வு
    • பயிர்களை பாதுகாக்க அறிவுரை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவ ட்டம், ஆவுடையார்கோவில் வட்டாரம், பூவலூர் கிராமத்தில் மழையினால் சம்பா பருவத்தில் சாகுபடி செய்த பயிர்களில், அறு வடை நிலையிலிருந்த நெற்பயிர்கள் பாதிப்ப டைந்துள்ளதை, வேளா ண்மைத்துறை இயக்குநர் ஆ.அண்ணா துரை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது, வேளாண்மைத்துறை இயக்குநர் தெரிவித்ததாவது, புதுக்கோட்டை மாவட்ட த்தில் பெய்த மழையினால் சம்பா பருவத்தில் சாகுபடி செய்த பயிர்களில் அறு வடை நிலையிலிருந்தநெற்ப யிர்கள் பாதிப்படைந்து ள்ளதை நேரில்பார்வை யிட்டு ஆய்வு செய்யப்பட்டது.இரண்டு நாட்களில் பெய்த மழையினால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் பயிர் சாய்ந்து உள்ளது. இதன்மூலம் ஏற்படும் பாதிப்பூகளிலிருந்து நெல் மணிகளை பாதுகாக்கும் வகையில், பள்ளமான வயல்களில் தேங்கியுள்ள நீரினை வடிகால் அமைத்து வடித்து, நெல் மணிகள் நனைந்து முளைக்காமல் இருக்க, வயலினை காயவிட்டு, அறுவடை பணிகள் மேற்கொள்ள விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தி ற்கு 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயறுவகை பயிர், உளுந்து பயிர் சாகுபடி செய்தி இலக்கு வழங்கப்பட்டுள்ளது. நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி செய்திட 50 சதவீத மானிய விலையில் சான்று பெற்ற விதைகள் மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.எனவே நெல் அறுவடை முடிந்த வயல்களில் சாகுபடி செய்து அதிக மகசூல் பெற்றிடவும், மேலும் மண்வளம் கா த்திடவும் அறிவுரை வழங்க ப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வேளாண்மை இணை இயக்குனர் மா.பெரி யசாமி, அறந்தாங்கி வரு வாய் கோட்டாட்சியர் சு.சொர்ணராஜ், வேளா ண்மை துணை இயக்குனர் (மாநில திட்டம்) மோக ன்ராஜ், அறந்தாங்கி வேளாண்மை உதவி இயக்குனர் பத்மப்பிரியா, ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் வில்லியம் மோசஸ், வேளாண்மை அலுவலர்கள் பிரவினா, பாக்யா, உதவி வேளா ண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

    • வருடாபிஷேக விழா
    • ஏராளமான பெண்கள் பங்கேற்பு

    ஆலங்குடி, 

    ஆலங்குடி அருகே உள்ள ஆயிப்பட்டி வரசக்தி விநாயகர் செம்முனீஸ்வரர், பெரிய கருப்பர், பத்ரகாளியம்மன் மற்றும் நவகிரகங்களுக்கு 13-ம் ஆண்டு வருடபிஷேக விழாவும், 12-ம் ஆண்டு 108 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. முதலில் விநாயகர் கோவிலில் நடைபெற்ற வருடாபிஷேக விழா நடைபெற்றது. பின்னர் மாலையில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. குத்துவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதற் முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதனையொட்டி சிறப்பு வானவேடிக்கை நடைபெற்றது. திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை மேலக்கோட்டை கிராமத்தார் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.

    • 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
    • வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு

    ஆலங்குடி, 

    ஆலங்குடி அருகே கலிபுல்லா நகரில் உள்ள நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நூலக வளாகத்தில் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த ஓவியப் போட்டியில் கல்லாலங்குடியை சேர்ந்த சுவேதாஸ்ரீ முதலிடமும், கமலி இரண்டாமிடமும், தர்ஷினி மூன்றாமிடமும் பெற்றனர்.ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக வரைந்த மாணவர்களைப் பாராட்டி ஆலங்குடி வாசகர் வட்டத்தலைவர் பாபு ஜான் மற்றும் கவிஞர்.ராமராமநாதன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். விழாவினை நூலகர் ரெங்கசாமி, ஆசிரியர் கருணாகரன், ஆசிரியர் சசிகுமார்,தன்னார்வலர் அரங்குளவன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் தங்களை நூலத்தில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். நூலகர் ரெங்கசாமி நன்றி கூறினார்.

    • வேங்கை வயல் சம்பவத்தில் முதலில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை பாதிக்கப்பட்ட மக்கள் மீது குற்றம் சாட்டுவதாக சென்றது.
    • யாராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தொடங்கி வைத்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது:-

    வேங்கை வயல் சம்பவத்தில் முதலில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை பாதிக்கப்பட்ட மக்கள் மீது குற்றம் சாட்டுவதாக சென்றது. அதன் பிறகு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இருந்த போதிலும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாதது ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

    யாராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தி.மு.க. அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேங்கை வயல் சம்பவம் தொடர்பாக ஏன் கருத்து தெரிவிக்கவில்லை.

    பா.ஜ.க., சங்க பரிவார் அமைப்புகள் வடமாநிலங்களைப் போல தமிழகத்திலும் சாதி,மத முரண்களை கூர்மையாக்கி அரசியல் செய்ய தொடங்கியிருக்கின்றன. எனவே வேங்கை வயல் சம்பவத்தினை இந்த கோணத்திலும் விசாரிக்குமாறு தமிழக அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

    இவர் அவர் கூறினார்.

    மேலும் வேங்கை வயல் சம்பவத்தை கண்டித்து திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என சீமான் கூறியுள்ளது தொடர்பாக கேட்டபோது, சமூகப் பிரச்சனைகளுடன் அரசியலை முடிச்சு போட தேவையில்லை என பதில் அளித்தார்.

    • கண்ணீரில் பரிதவிக்கும் விவசாயிகள்
    • கறம்பக்குடியில் தொடர் மழையால் பாதிப்பு

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில் காவேரி பாசன வாய்ப்பு உள்ளது. இங்கு சுமார் 600 ஏக்கர்களுக்கு மேலாக சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். இது தற்பொழுது அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தன. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் இப்பகுதி விவசாயிகள் தாங்கள் கடன் வாங்கி விவசாயம் செய்த நிலையில் மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி மனவேதனை அடைந்துள்ளனர். மேலும் எங்களின் வாழ்வாதாரமாக இந்த விவசாயமே உள்ளதால் இதுவும் தற்பொழுது மழையால் பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதால் எங்களுக்கு அரசு ஏக்கருக்கு 25,000 ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    • 46 மதுபாட்டில்கள் பறிமுதல்
    • 2500 ரூபாய் பணம் பறிமுதல்

    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் டிஎஸ்பி தீபக் ரஜினி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்அப்போது ஆலங்குடி அருகே உள்ள நடுஇம்னாம்பட்டி தங்கவேல் மக ன் சரவணன் ( வயது 51 )இவர் அரசடிப்பட்டி 4 ரோடு அரசு மதுக்கடை அருகே 46 மது பாட்டில்கள் வைத்து விற்பனை மற்றும் 2500 ரூபாய் ரொக்கமும் போலீசார் பறிமுதல் செய்து கைது செய்தனர்.பின்னர் அவரை ஆலங்குடி காவல் நிலைய அழைத்து வந்தனர்.ஆ லங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்,

    ×