என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டை விநாயகர் கும்பாபிஷேகம்
- கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது
- முன்னதாக யாகசாலை பூஜை நடைபெற்றது
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை அருகே வலம்புரி பால விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுக்கா புதுப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ வலம்புரி பால விநாயகர் பாலமுருகன் சிவலிங்கம் மற்றும் நவகிரகங்களுக்கு நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோவில் அருகே யாக சாலை அமைத்து இரண்டு கால பூஜைகள் நடைபெற்றது. பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட நீர் கலசங்களில் வைத்து கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து புனித நீர் கோயில் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டுச் சென்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் புதுப்பட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.






