தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்

கண்ணீரில் பரிதவிக்கும் விவசாயிகள்கறம்பக்குடியில் தொடர் மழையால் பாதிப்பு
தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
Published on

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில் காவேரி பாசன வாய்ப்பு உள்ளது. இங்கு சுமார் 600 ஏக்கர்களுக்கு மேலாக சம்பா நெல் சாகுபடி செய்துள்ளனர். இது தற்பொழுது அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தன. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் இப்பகுதி விவசாயிகள் தாங்கள் கடன் வாங்கி விவசாயம் செய்த நிலையில் மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி மனவேதனை அடைந்துள்ளனர். மேலும் எங்களின் வாழ்வாதாரமாக இந்த விவசாயமே உள்ளதால் இதுவும் தற்பொழுது மழையால் பாதிக்கப்பட்டு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதால் எங்களுக்கு அரசு ஏக்கருக்கு 25,000 ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com