என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • மத்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரிக்கை

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மத்திய அரசை கண்டித்து சீனி கடை முக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கறம்பக்குடி ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் காத்தலிங்கம் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சேசுராசு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் தேவையான கூடுதல் நிதி மத்தியஅரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தொழிலாளர்களுக்கு 200 நாட்களாக உயர்த்த வேண்டும், நாள் ஒன்றுக்கு 600 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும், தொழிலாளர்களின் வருகை பதிவேட்டை காலை 9 மணி என மாற்றி அமைக்க வேண்டும், 100 நாள் வேலைத்திட்ட ஆன்லைன் வருகை பதிவேடு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில விவசாய குழு உறுப்பினர் அரசப்பன் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    • வீரமாகாளியம்மன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றது
    • வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம், வெள்ளி நாணயம் பரிசு

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வம்பன் வீரமாகாளியம்மன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 65 ஆம் ஆண்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. மாஞ்சான்விடுதி மற்றும் கொத்தகோட்டை ஊராட்சி பொதுமக்களால் நடத்தப்படும் இப்பந்தயத்தில் பெரிய மாடு, கரிச்சான் மாடு, தேன் சிட்டு, சிறிய குதிரை, பெரிய குதிரை, புதுப்பூட்டு குதிரை, ஒற்றை மாடு, நடு மாடு, பூஞ்சிட்டு மாடு என்று ஒன்பது வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை பரிசுகள் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட மாடு மற்றும் குதிரை வண்டிகளுக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. பந்தயத்தை வம்பன் முதல் திருவரங்குளம் வரை சாலை இரு பகுதிகளிலும் பொதுமக்கள் நின்று கண்டு களித்தனர்.

    • புதுக்கோட்டை இரும்பாநாடு சுந்தரராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஆவுடையார்கோவில் தாலுகா இரும்பாநாடு கிராமத்தில் உள்ள பூமி நீளா சுந்தரவள்ளி சமேத சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இவ்வாலயத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் ஏற்பாட்டில் பேரில் கடந்த சனிக்கிழமை உபய வேத பாராயணத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது.அதனை தொடர்ந்து 3 நாட்களாக யாக வேள்விகள் நடைபெற்று வந்தது. யாக சாலை பூஜைகள் முடிந்த பின்னர், பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம் புறப்பாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து வாசுதேவ பட்டாசார்யார் தலைமையில் ஆச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.கும்பாபிஷேகத்தைக் காண திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் ஸ்ரீ சுந்தரராஜபெருமாள் சாமி அருள் பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • கார் மோதி விவசாயி பலியானார்.
    • இந்த விபத்து குறித்து செம்பட்டிவிடுதி சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுக்கோட்டை

    செம்பட்டிவிடுதி அருகே உள்ள மணவிடுதி ஊராட்சி மாங்குடியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 56), விவசாயி. இவர் கம்மங்காட்டில் இருந்து மாந்தங்குடிக்கு சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த குளத்தூர் அண்டக்குளத்தை சேர்ந்த அப்துல்சலாம் ஓட்டிச்சென்ற கார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட மூர்த்தி படுகாயம் அடைந்தார். இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மூர்த்தியை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூர்த்தி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து செம்பட்டிவிடுதி சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.




    கோடை உழவு நன்ைம தரும் என புதுக்கோட்டை மேலாண்மை இணை இயக்குனர் ஆலோசனை வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி கோடை உழவு குறித்து கூறும்போது, கோடை மழையை பயன்படுத்தி நிலத்தை நன்கு உழவு செய்வதால் நன்மைகள் பல கிடைக்கும்.கோடை உழவு செய்வதால் மேல் மண் துகள்களாகிறது. இதனால்நி லத்தில் நீர் இறங்கும் திறன் அதிகரிக்கும். கோடை உழவு செய்வதால் மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைப்ப தனால் மண்ணில் நுண்ணுயிரிகளின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் பெருகும். வயலி லுள்ள கோரை போன்ற களைகள்,கோடை உழவு செய்வதனால்மண்ணின் மேற்பரப்புக்குக் கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தில் நன்கு காய்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது.

    கோடை உழவு செய்வ தனால் நிலத்தினடியில் உள்ள கூண்டுப் புழுக்கள் மற்றும்தீமை செய்யும் பூச்சிகள் வெளியில் கொண்டு வரப்பட்டு அழிக்க ப்படுகிறது. மிக முக்கியமாக மக்காச்சோளத்தை தாக்கும்அமெரிக்க படைப்புழுவினை கட்டு ப்படுத்திட கோடை உழவு மிகவும் சிறந்தது . இதனால் வரும் பருவத்தில் பூச்சி நோய்த் தாக்குதல் பெருமளவு குறைகிறது.கோடை உழவினைச் சரிவிற்குக் குறுக்கே உழவு செய்து மண் அரிப்பினை தவிர்க்கலாம்.

    கோடை உழவு செய்யாத நிலத்தில் நீர் வேகமாக வழிந்தோடி மண் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வயல்வெளிகளில் பெய்யும் மழை நீரை சேமிப்பதில் கோடை உழவு முக்கிய பங்கு வகிக்கிறது.இவ்வாறு பல நன்மைகள் கோடை உழவினால் ஏற்படுவதால் 'கோடை உழவு கோடி நன்மை" எனக் கூறப்படுகிறது. எனவே,புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள்; கோடையில் பெறப்படும் மழையினைப் பயன்படுத்தித் தங்களது நிலங்களில் மழை நீரை சேமித்திடவும்ரூபவ் பூச்சி நோய் ஆகியவற்றை கட்டுபடுத்திடவும் கோடை உழவு செய்து பயன்பெ றுமாறு புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் மா.பெரியசாமி ஆலோசனை தெரிவித்துள்ளார்.


    • ஆலங்குடி அரசு மருத்து வமனையில் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
    • 25 செவிலியர்கள் பணி புரிய வேண்டிய இடத்தில் 16 பேரும் பணிபுரிந்து வருகின்றனர்.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நாள்தோறும் 800 முதல் 1000 நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் 100 படுக்கைகள் கொண்ட வசதியும் உள்ளது. தற்போது சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் முயற்சியால் ஐ.சி.யு. வார்டு அமைக்கப்பட்டுள்ளது.இதில் உலகத்தரம் வாய்ந்த நர்ஸ் காலிங் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் குளிர்சாதன அறைக்குள் திடீர் நடுக்கம் ஏற்படும் நோயாளிகளுக்கு வெப்பத்தை வழங்கும் வகையில் ஹோல் பாடி வார்மர் என்னும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் காலம் காலமாக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வசதிகள் இல்லாமலே உள்ளது.இது குறித்து பல ஆண்டுகளாக மாவட்ட கலெக்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்று பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    . ஆனால் இதுவரை மருத்துவர்கள் பற்றாக்குறை நீக்கப்படவே இல்லை. சுமார் 12 மருத்துவர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில் 5 மருத்துவர்களும் 25 செவிலியர்கள் பணி புரிய வேண்டிய இடத்தில் 16 பேரும் பணிபுரிந்து வருகின்றனர்.இதனால் அனைத்து வசதிகளும் இருந்தும் போதுமான சிகிச்சையை இப்பகுதி மக்களால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே இப்பகுதி மக்கள் அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வகையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உடனடியாக நியமிக்குமாறு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


    • கல்லூரி மாணவி மாயமானார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுக்கோட்டை

    இலுப்பூர் அருகே உள்ள பூசாரி பண்ணைக்களம் பகுதியை சேர்ந்தவர் லெட்சுமி (வயது 45). இவரது மகள் சோபனா (20). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்தநிலையில் வீட்டில் இருந்த சோபனா திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    • விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தகால் நடும் விழா நடைபெற்றது
    • முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பங்கேற்பு

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வெளியம்பூர் குளம் திடலில் வரும் 25-ந் தேதி காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அதனைமுன்னிட்டு விழாவிற்கான முகூர்த்தகால் நடப்பட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.விராலிமலை மெய்க்கண்ணுடையால் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 25-ந் தேதி நடத்துவதற்கு ஊர் முக்கியஸ்தர்கள், விழா கமிட்டியினர் சார்பில் முடிவு செய்யப்பட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்குவதற்கு விழா குழு சார்பில் நேற்று முகூர்த்த கால் நடப்பட்டது.

    முகூர்த்த கால் நடும் விழாவில் விராலிமலை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர், ஆவின் சேர்மன் பழனியாண்டி, விராலிமலை தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் விராலூர் அய்யப்பன், மேற்கு மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, ஊர் நாட்டாமை மணி, ஜல்லிக்கட்டு தலைவர் கார்த்திகேயன், கூட்டுறவு சங்கத்தலைவர் அய்யப்பன், ஊராட்சி மன்ற தலைவர் ரவி, துணை தலைவர் தீபன் சக்கரவர்த்தி, வெல்கம் மோகன், தி.மு.க. நகரச் செயலாளர் சண்முகசுந்தரம், அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில், முரளிதரன், ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன், மாமுண்டி, கௌதமன், உள்ளிட்ட விழா கமிட்டியினர் பங்கேற்று விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    இதில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது மேலும் சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

    • அறந்தாங்கி பகுதிகளில் போலி மருத்துவர்கள் 3 பேர் கைது செய்யபட்டனர்
    • அவர்களிடமிருந்து 30 ஆயிரம் ரொக்கப்பணம், ஸ்டெதஸ்கோப் , டிஜிட்டல் தெர்மாமீட்டர், மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடி பகுதியை சேர்ந்தவர் மதியழகன் (வயது55), 12ம் வகுப்பு வரை படித்த இவர் நாகுடி கடைவீதியில் ஸ்ரீமதி என்ற ஆங்கில மருந்தகத்தை நடத்தி வந்துள்ளார். மேலும் மருந்தகத்திற்கு வருபவர்களுக்கு மருத்துவம் பார்த்து அவர்களுக்கு மருந்து மாத்திரைகள்,ஊசி செலுத்தி, மருத்துவர் போல் செயல்பட்டு வந்துள்ளார்.தகவலறிந்த நாகுடி பகுதி கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில், நாகுடி காவல்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலி மருத்துவரை கைது செய்தனர்.

    மேலும் அவரிடமிருந்து ரூ.31 ஆயிரம் ரொக்கப்பணம், ஸ்டெதஸ்கோப், பல்ஸ் மீட்டர், தையல் நரம்பு (நூல்) உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.அதே போன்று ஆவுடையா ர்கோவில் தாலுகா கரூர் பகுதியில் போலி மருத்து வர்களாக செயல்பட்டு வந்த தர்மலிங்கம் (54), கருப்பையா (47) ஆகியோரை கரூர் காவல்த்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 30 ஆயிரம் ரொக்கப்பணம், ஸ்டெதஸ்கோப் , டிஜிட்டல் தெர்மாமீட்டர், மருந்து மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை பறிமுதல் செய்தனர். அறந்தாங்கி பகுதிகளில் போலி மருத்துவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




    • தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தெருமுனைப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது
    • கூட்டம் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தவ பாஞ்சாலன் தலைமையில் நடைபெற்றது

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை தி.மு.க. வடக்கு மாவட்டம் கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்தின் சார்பில் தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் புதுப்பட்டி, பல்லவராயன்பத்தை, மலையூர், கணக்கன் காடு ஆகிய பகுதிகளில் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான தவ பாஞ்சாலன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கழக செயலாளரும் திருச்சி விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினருமான வழக்கறிஞர் கே.கே. செல்லபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    மேலும் தலைமை கழக பேச்சாளர் தேவ பாலா கலந்து கொண்டு தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.எஸ்.கருப்பையா, மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் கருக்கா குறிச்சி பரிமளம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கருணாநிதி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஐயப்பன் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் திரளாக கலந்து கொண்டனர்.


    • கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது
    • நிகழ்ச்சியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    கந்தர்வகோட்டை:

    கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் வெங்கடேஸ்வரி, நரசிம்மன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் தி.மு.க. நகரச் செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி அனைவரையும் வரவேற்று, பள்ளியின் பெருமைகளை எடுத்துக் கூறினார். ஆண்டு விழாவை முன்னிட்டு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி ஆசிரியைகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


    • கந்தர்வகோட்டையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்தும், அதானி குழுமம் மீது விசாரணை நடத்த கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர்கள் சரவணன், செல்வகுமார், சப்பானி முத்து தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி முன்னாள் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்தும், அதானி குழுமம் மீது விசாரணை நடத்த கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பாராளுமன்ற முடக்கத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விராலிப்பட்டி முத்து கருப்பு, மாவட்ட துணைத் தலைவர் பழக்கடை மாரிமுத்து, ஒன்றிய குழு துணைத் தலைவர் வடிவேல் குமார், நகரத் தலைவர் செந்தில் குமார், வட்டார தலைவர்கள் ராமையன், மாயக்கண்ணு, வடுகப்பட்டி மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


    ×