என் மலர்
உள்ளூர் செய்திகள்

மஞ்சள் பை விருது பெற அழைப்பு
- புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மஞ்சள் பை விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்
- மாநில அளவில் சிறந்த பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களுக்கு பணபரிசு வழங்கப்படும்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் இவற்றிற்கு மாற்றாக பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களுக்கு மாற்றாக மஞ்சப்பை (மஞ்சள் துணியை) போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு மாநில அளவில் இந்த விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. முதல் பரிசாக ரூ.10 லட்சமும் வழங்கப்பட உள்ளது.இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாக பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன் மாதிரியாகத் திகழும் பள்ளிகள்,கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன் வந்துள்ளது.இதற்கான விண்ணப்ப படிவங்கள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப படிவத்தில் தனிநபர் , நிறுவனத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் சிடி பிரதிகள் இரண்டினை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 01.05.2023 ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






