என் மலர்
பெரம்பலூர்
- குடிசை மாற்று வாரிய குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் பதவி ஏற்றனர்
- விழாவிற்கு சங்க தலைவர் உத்தரகுமார் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அரசு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்கு மாடி குடியிருப்போர் நலச் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா கவுல்பாளையம் தமிழ்நாடு அரசு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு வளாகத்தில் நடந்தது.தமிழ்நாடு அரசு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்கு மாடி குடியிருப்போர் நலச் சங்க தேர்தல் நடந்தது.இத்தேர்தலில் சங்க தலைவராக உத்திரக்குமார், செயலாளராக முருகேசன், பொருளாளராக ராஜன், துணைத் தலைவராக, செங்கமலை, துணை செயலாளராக முருகையா செயற்குழு உறுப்பினர்களாக அன்பு, கோபி என்கிற கோபாலகிருஷ்ணன், கண்ணன், ரவிச்சந்திரன், கலாவதி, ராதாகிருஷ்ணன், அசோகன், பிரியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு சங்க தலைவர் உத்தரகுமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பெரம்ம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் கலந்து கொண்டு சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார். புதிய பொறுப்பாளகளை பணியில் அமர்த்தி வாழ்த்தி பேசினார். இதில், கவுல்பாளையம் ஊராட்சி தலைவர் கலைச்செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- சொட்டுநீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் முடித்திருப்பின் அவர்களும் இத்திட்டத்தில் புதுப்பித்துக் கொண்டு பயன்பெறலாம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,பெரம்பலூர் மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசு வழிகாட்டுதலின்படி, அனைத்து விவசாயிகளும் பயன் பெறும் வகையில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்திட 700 எக்டருக்கு ரூ.5 கோடியே 80 இலட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (2 எக்டர் வரை) கணக்கிடப்பட்ட அடிப்படையில் 100 சதவீதம் மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. ஒரு பெரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 எக்டர் வரை மானியம் அனுமதிக்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் தங்களது நிலத்திற்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், மண் மற்றும் நீர் ஆய்வு அறிக்கை, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போட் சைஸ் போட்டோ -2, ஆகியவற்றுடன் சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மூலமாகவோ அல்லது விவசாயிகள் தாங்களாகவே www.tnhorticulture.tn.gov.in/horti/mimis என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம்.
சொட்டுநீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் முடித்திருப்பின் அவர்களும் இத்திட்டத்தில் புதுப்பித்துக் கொண்டு பயன்பெறலாம் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. பெரம்பலூர் மாவட்ட விவசாய பெருமக்கள் அனைவரும் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் தங்கள் பயிர் சாகுபடிக்கு ஏற்றவாறு சொட்டுநீர் அல்லது தெளிப்பு நீர் பாசன அமைப்புகளை ஏற்படுத்தி கூடுதல் வருவாய் பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
- செட்டிகுளத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது
- தலைவர் ஜான்பாண்டியன் கலந்துகொண்டார்
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டி குளத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம் இணைந்து நடத்திய பொதுக்கூட்டம் அதன் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. செட்டிகுளம் செல்லியம்மன் திடலில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவரும், அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனருமான ஜான்பாண்டியன் பேசியதாவது:- மத்திய, மாநில அரசுகள் இந்த உலகிற்கே உணவளித்து வேளாண் தொழிலைக் கொண்ட தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் இனத்தை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும், தங்களுடைய மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்றும் பேசினார்.
இந்தபொதுக் கூட்டத்தில் த .ம.மு .க. கட்சியின் பொதுச் செயலாளரும் தேவேந்திரகுல வேளாளர் அமைப்பைச் சேர்ந்த பிரிசில்லா பாண்டியன், மாநில இளைஞரணி தலைவர் வியங்கோ பாண்டியன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமர் துணை பொது செயலாளர்கள் நெல்லையப்பன், தமிழரசன், அமுத முரளி, சண்முகசுதாகர், அருண், பிரின்ஸ், மகளிர் அணி நளினி, சாந்தகுமாரி, தலைமை நிலைய பேச்சாளர் சேகர், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சசிகுமார், மாவட்ட இணை செயலாளர் ரமேஷ், ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் ஐயப்பன், ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் திரளான தேவேந்திரகுல வேளாளர் மக்கள் கலந்து கொண்டு ஜான்பாண்டியன் தலைமையில் மத்திய, மாநில அரசுகள் பட்டியல் இனத்தை விட்டு வெளியேற்று என்று கோஷங்கள் எழுப்பினர். அப்போது அங்குள்ள அம்பேத்கர் தெருவில் தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியினர் கொடியை ஜான்பாண்டியன் ஏற்றி வைத்தார். முன்னதாக மாவட்ட இளைஞரணி செயலாளர் சூர்யா வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாட்டை இளைஞர் அணி மகேந்திரன், ஸ்ரீராம், முகிலன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் கிராமமூப்பாடி சக்திவேல் நன்றி கூறினார்.
- லாரி மோதி விவசாயி பலியானார்
- இதுகுறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அயினாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 49). விவசாயியான இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் காரை கிராமத்தில் இருந்து அயனாபுரம் செல்லும்போது இடது புற சாலையில் இருந்து வலது புறம் உள்ள அயனாபுரம் பிரிவில் திடீரென திரும்பினார். அப்போது பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிளில் எதிர்பாரா விதமாக மோதியது. இதில் தர்மராஜ் தலையில் பலத்த அடிப்பட்டு காயம் ஏற்பட்டது.
இதை அறிந்த அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தர்மராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
- போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, வெங்கடேசனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பீல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் வெங்கடேசன் (வயது 27). இரு சக்கர வாகன பழுது நீக்கும் (மெக்கானிக்) தொழில் செய்து வருகிறார். இவர் 17 வயதுடைய சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, வெங்கடேசனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
- சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் கைது செய்யப்பட்டார்
- போலீசார் போக்சோ சட்டத்தின் கீழே வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து, திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தனது வீட்டின் அருகே உள்ள 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் குன்னம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழே வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து, திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
- பெரம்பலூர் கல்யாண் நகர் ஸ்ரீசித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
- சுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமையிலான சுவாமிகள் கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் துறையூர் சாலை கல்யாண் நகரில் புதிதாக ஸ்ரீசித்தி விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் மகா கும்பாபிஷேகம் விழாவையொட்டி நேற்றுமுன்தினம் (26ம்தேதி) காலை 7 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் பூர்வாக பூஜை துவங்கியது. இதை தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் யாகசாலை பூஜைகள் துவங்கி நடந்தது.அதை தொடர்ந்து காலை விநாயகர் பூஜை, இரண்டாம் கால யாகபூஜை நடந்தது. தொடர்ந்து யாத்ரா தானம், கடம்புறம்பாடு நடத்தப்பட்டு காலை 10 மணிக்கு விமான மகாகும்பாபிஷேகமும், காலை 10.10 மணிக்கு ஸ்ரீசித்தி விநாயகர் மூலாலய மகா கும்பாபிஷேகமும் நடந்தது.
சுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமையிலான சுவாமிகள் கும்பாபிஷேக விழாவை நடத்திவைத்தனர்.விழாவில் ஒபிஎஸ் அணி அதிமுக மாவ ட்ட செயலாளரும், முன்னா ள் எம்எல்ஏவான ராமச்ச ந்திரன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பேபிகா மராஜ், திருமால் நிறுவ னங்களின் இயக்குனர் கோகுல், கல்யாண் நகர் நற்பணி மன்ற தலைவர் பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழாக்கு ழுவினர் செய்திருந்தனர்.
- பெரம்பலூரில் காவல்துறை சார்பில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது
- முகாமிற்கு எஸ்பி ஷ்யாம்ளாதேவி தலைமை வகித்து முகாமினை தொடங்கிவைத்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் எஸ்பி அலுவலகத்தில் காவல்துறை சார்பில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது. முகாமிற்கு எஸ்பி ஷ்யாம்ளாதேவி தலைமை வகித்து முகாமினை தொடங்கிவைத்தார். மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி தங்கவேல் மற்றும் காவல் அதிகாரிகள் பொதும க்களிடம் புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்தினர். இதில் 25 மனுக்கள் பெற்றப்பட்டு உடனடியாக 5 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேசனுக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைக்க ப்பட்டுள்ளது.
பின்னர் எஸ்பி ஷ்யாம்ளா தேவி கூறுகையில், பொது மக்களின் புகார் மற்றும் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்கு ம்பொருட்டு வாரந்தோறும் புதன் கிழமைகளில் எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அச்சமின்றி முகாமில் கலந்துகொண்டு மனு அளிக்கலாம். மேலும் பொது மக்கள் வந்து செல்லும் வகையில் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முகாமினை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
- பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் நாளை நடைபெறும் மாதாந்திர குழு கூட்டத்தை புறக்கணிக்க விவசாயிகள் சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது
- கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
பெரம்பலூர்:
பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் நாளை (29ம்தேதி) நடைபெறவுள்ள கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மாதாந்திர குழு கூட்டத்தை புறப்பணிப்பது என அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.பெரம்பலூரில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பாமக மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். கரும்பு விவசா யிகள் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் கனகராஜ், பொருளாளர் வரதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட பொறுப்பாளர் ராமர் உட்பட பலர் பேசினர். கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜேந்திரன் கோரி க்கைகளை வலியுறுத்தி பேசினார்.
கூட்டத்தில் கரும்பு விவசாயிகளிடம் பிடித்த தொகைக்கு 13 சதவீத வட்டியுடன் அசலையும் சேர்ந்து வழங்கவேண்டும். கரும்பு வெட்டு உத்தரவு வழங்க வேண்டும், தொழிலா ளிகளை பிரித்து ஆளும் கொள்கையை கடைபி டிக்கும் சர்க்கரை ஆலை தலைமை நிர்வா கியின் செயலை கண்டிப்பது, தகுதியற்ற ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதை கண்டிப்பது எனவும், கோரி க்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் நாளை (29ம்தேதி) நடைபெறவுள்ள கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மாதாந்திர குழு கூட்டத்தை புறப்பணிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அனைத்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்துகொ ண்டனர்.
- ரூ.15 லட்சத்தில் சின்னாறு ஏரி வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது
- பெரம்பலூர் கலெக்டர் க.கற்பகம் தொடங்கி வைத்தார்
அகரம்சீகூர்:
பெரம்பலூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது சின்னாறு ஏரி. இந்த ஏரிக்கு கோனேரி ஆற்றில் அமைந்துள்ள சின்னாறு அணைக்கட்டு மூலம் தண்ணீர் வருகிறது. இதன்மூலம் 716 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.இந்த ஏரியின் வரத்து வாய்க்கால்கள் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாததால், முட்புதர்கள் மற்றும் மண் மேடு ஏற்பட்டு தண்ணீர் வரத்து நின்றது. இதனால் பாசன வசதி பெற்ற நிலங்களை கொண்ட விவசாயிகள் அவதிப்பட்டனர்.
சின்னாறு அணைக்கட்டு முதல் சின்னாறு ஏறி வரை உள்ள சுமார் 4 கி.மீ தொலைவிற்கு வரத்து வாய்க்கால் முழுவதையும் தூர்வார மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டு, ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணியை இன்று கலெக்டர் கற்பகம், எம்.எல்.ஏ. பிரபாரகன் முன்னிலையில் தொடங்கிவைத்தார். இந்த பணி வரும் ஜூன் மாதத்திற்குள் முடியும் என எதிர்பார்க்கப்படடுகிறது. இந்நிகழ்ச்சியில் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராமலிங்கம், மருதையாறு வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மகாதேவி ஜெயபால், வேப்பந்தட்டை வட்டாட்சியர் துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தை வேறு பகுதிக்கு மாற்றக்கோரி லெப்பைக்குடிகாடு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
- நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்
அகரம்சீகூர்:
பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அடுத்துள்ள கீழக்குடிகாடு வெள்ளாற்று தடுப்பணைகளில் இருந்து 73 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவதற்காக தமிழக அரசு வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டம் என்ற திட்டத்தை தொடங்கி 70 சதவீத பணிகள் முடிந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் மற்றும் லெப்பைக்குடிகாடு பொதுமக்கள் வேப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தை வேறு பகுதியில் தொடங்கக்கோரியும், பேரூராட்சி, கிராம சபை கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் பணிகளை தடுத்து நிறுத்தக்கோரியும், இது தொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சார்பில் பேரூராட்சி தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் நேற்று இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் பேரூராட்சித் தலைவர் வரும் செவ்வாய் கிழமையன்று தீர்மானம் நிறைவேற்றுவதாக உறுதியளித்ததின் பெயரில் நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் கலைந்து சென்றனர்.
- வயலூர் கிராமத்தில் சிறுவன் ஏரியல் மூழ்கி பலியானார்
- பெற்றோர்கள் தேடி பார்த்த போது அண்ணா குளம் ஏரியில் சிறுவன் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
அகரம்சீகூர்:
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து வயலூர் கிராமத்தில் காலணி வடக்குத் தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார் ( வயது 40). இவரது மனைவி துளசி (35) இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். தர்ஷன் (வயது 11), ரெட்சன் (வயது 7) சுகன் (வயது 4.1/2) இந்நிலையில் இன்று காலை 6 -மணியளவில் இவரது வீட்டிற்கு வடக்கு பகுதியில் உள்ள அண்ணா குலம் ஏரியல் காலை கடனை முடிப்பதற்கு சென்ற சிறுவனை வெகு நேரம் ஆகியும் காணவில்லை.
அதனால் பெற்றோர்கள் தேடி பார்த்த போது அண்ணா குளம் ஏரியில் சிறுவன் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே பெற்றோர்கள் சிறுவனை மீட்டு அருகில் உள்ள கடலூர் திட்டக்குடி அரசு பொது மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






