என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் நாளை நடைபெறும் மாதாந்திர குழு கூட்டத்தை புறக்கணிக்க விவசாயிகள் சங்க கூட்டமைப்பு முடிவு
    X

    பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் நாளை நடைபெறும் மாதாந்திர குழு கூட்டத்தை புறக்கணிக்க விவசாயிகள் சங்க கூட்டமைப்பு முடிவு

    • பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் நாளை நடைபெறும் மாதாந்திர குழு கூட்டத்தை புறக்கணிக்க விவசாயிகள் சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது
    • கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் நாளை (29ம்தேதி) நடைபெறவுள்ள கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மாதாந்திர குழு கூட்டத்தை புறப்பணிப்பது என அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.பெரம்பலூரில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பாமக மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். கரும்பு விவசா யிகள் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் கனகராஜ், பொருளாளர் வரதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட பொறுப்பாளர் ராமர் உட்பட பலர் பேசினர். கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜேந்திரன் கோரி க்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    கூட்டத்தில் கரும்பு விவசாயிகளிடம் பிடித்த தொகைக்கு 13 சதவீத வட்டியுடன் அசலையும் சேர்ந்து வழங்கவேண்டும். கரும்பு வெட்டு உத்தரவு வழங்க வேண்டும், தொழிலா ளிகளை பிரித்து ஆளும் கொள்கையை கடைபி டிக்கும் சர்க்கரை ஆலை தலைமை நிர்வா கியின் செயலை கண்டிப்பது, தகுதியற்ற ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதை கண்டிப்பது எனவும், கோரி க்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் நாளை (29ம்தேதி) நடைபெறவுள்ள கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மாதாந்திர குழு கூட்டத்தை புறப்பணிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அனைத்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்துகொ ண்டனர்.


    Next Story
    ×