என் மலர்
பெரம்பலூர்
வேப்பந்தட்டை பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத் தியுள்ளனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதிகளில் பூலாம்பாடி, அரும்பாவூர், தொண்டமாந்துறை, அன்னமங்கலம், கை.களத்தூர், வி.களத்தூர், பாண்டகப்பாடி ஆகிய 7 ஊர்களில் அரசு கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தங்களது வயலில் விளையும் நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.
குறிப்பாக தனியார் வியாபாரிகளை காட்டிலும், அரசு கொள்முதல் நிலையத்தில் கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் தங்களது நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் அரசு ெநல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் கொள்முதல் செய்யப்படும் வரை தங்களது பொறுப்பிலேயே தார்ப்பாய் கொண்டு மூடி மழையில் நனையாமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்போது கொள்முதல் நிலையத்தின் மூலம் டோக்கன் வழங்கப்படும்.
அதன் பின்னர் 15 நாள் முதல் ஒரு மாதம் வரை காத்திருந்து விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்யும் சூழ்நிலை உள்ளது. இந்த காலகட்டங்களில் மழை பெய்தால் பல விவசாயிகளின் நெல் நீரில் நனைந்து வீணாகும் சூழ்நிலை உள்ளது. எனவே அரசு கொள்முதல் நிலையங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து விவசாயிகளின் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என்று இந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக கொள்முதல் நிலைய பணியாளர் ஒருவர் கூறுகையில், தற்போது கொரோனா காலம் என்பதால் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் மூட்டை தூக்குபவர்கள், சாக்கு தைப்பவர்கள், நெல் தூற்றுபவர்கள் என பணியாளர்கள் சரியாக வேலைக்கு வரவில்லை. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தற்போது வராததால் கொள்முதல் நிலையத்தில் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது, என்றார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பெரம்பலூர்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கினால் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்படாததால் ஆண்டு தேர்வினை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. இதேபோல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் ஆண்டு பொதுத்தேர்வினை தமிழக அரசு ரத்து செய்தது.
இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பள்ளிகளில் ஜூன் 14-ந்தேதி முதல் நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
6, 9-ம் வகுப்புகளில் சேருவதற்கு மாணவ-மாணவிகள் முன்னதாக தாங்கள் படித்த பள்ளிகளில் இருந்து மாற்று சான்றிதழை பெற்று கொண்டு, புதிதாக சேரவுள்ள பள்ளிகளுக்கு பெற்றோருடன் வந்து சேர்ந்து வருகின்றனர். 10-ம் வகுப்பு முடித்த மாணவ-மாணவிகள், வேறோரு பள்ளியில் 11-ம் வகுப்பு சேருவதற்கு 9-ம் மதிப்பெண் விவரம், மாற்று சான்றிதழ் மற்றும் அரசு ஆவணங்களுடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சேர்ந்து வருகின்றனர். மதிப்பெண் அடிப்படையில் மாணவ-மாணவிகளுக்கு 11-ம் வகுப்புக்கு பாடப்பிரிவுகள் ஒதுக்கப்படுகிறது.
நேற்று மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 6- ம் வகுப்பில் 267 மாணவ-மாணவிகளும், 9-ம் வகுப்பில் 31 பேரும், 11-ம் வகுப்பில் 904 பேரும் சேர்ந்துள்ளனர். பஸ்கள் ஓடினால், பள்ளிகள் திறப்பு குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டால் பள்ளிகளில் இன்னும் மாணவர் சேர்க்கை உயரும் என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர். அரசு பள்ளிகளில் உள்ள சலுகைகள் குறித்து ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் எடுத்துரைத்தால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உயரும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்தனர். புதிதாக 45 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இது, அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆறுதலை அளித்துள்ளது.
இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 45 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது மூதாட்டி ஒருவரும், 58 வயது ஆண் ஒருவரும், சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 27 வயது வாலிபர் ஒருவரும் என 3 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 109 பேர் நேற்றைய தினம் குணமடைந்ததால் அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 610 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் 989 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. மாவட்டத்தில் நேற்று மட்டும் 2,759 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அந்தவகையில் இதுவரை மொத்தம் 72,493 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 1,270 கோவிஷீல்டு தடுப்பூசியும், 760 கோவாக்சின் தடுப்பூசியும் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
விக்கிரமங்கலம் அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் 5 பவுன் தங்கச்சங்கிலியை மர்ம நபர் பறித்துச்சென்றார்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உள்ள வடக்கு நரியங்குழி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்கண்ணு. இவரது மனைவி சவுந்தரம்(வயது 45). விவசாயம் செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் சவுந்தரம் தான் வளர்த்துவரும் ஆடு மற்றும் மாடுகளின் தீவனத்திற்கு புல் அறுப்பதற்காக வெண்மான் கொண்டான் பாதையில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றார்.
அங்கு ஆடு, மாடுகளுக்கு தேவையான புல்லை அறுத்து கட்டி, புல்கட்டை தனது தலையில் வைத்துக்கொண்டு, தனது வீடு நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையில் யாரும் இல்லாத நிலையில், அந்த வழியாக மொபட்டில் வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், மொபட்டை நிறுத்தி செல்போனில் பேசுவதுபோல் பாவனை செய்து கொண்டிருந்தார்.
திடீரென அந்த நபர் பின்புறமாக வந்து சவுந்தரத்தின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பிடித்து இழுத்தார். இதனால் நிலைதடுமாறிய சவுந்தரம் கீழே விழுந்தவுடன், தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடி, தனது மொபட்டில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சவுந்தரம் அழுதபடி சத்தம் போட்டார். இதையடுத்து அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது, மர்ம நபர் தப்பிச்சென்று விட்டது தெரியவந்தது.
இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் சவுந்தரம் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவி சக்கரவர்த்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தங்கச்சங்கிலியை பறித்துச்சென்ற நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குன்னம் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் பிரியங்கா (வயது 19). பிளஸ்-2 படித்துள்ளார். நேற்று முன்தினம் காலை தனது தாய் ராசாத்தி திட்டியதால் மனமுடைந்த பிரியங்கா வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து யாரும் இல்லாத போது குடித்துள்ளார். இதை அறிந்த அவரது பெற்றோர் கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று முதலுதவி அளித்த செய்தனர். பின்னர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பிரியங்கா இறந்துவிட்டார். இதுகுறித்து பெரியசாமி கொடுத்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
லப்பைக்குடிகாடு, வடக்கலூர் அகரம், திருமாந்துறை, ஒகளூர் கிராமங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
மங்களமேடு:
லப்பைக்குடிகாடு பகுதியில், கடந்த சில நாட்களாக கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், யாருக்கும் தடுப்பூசி போடப்படவில்லை. இந்நிலையில் கோவாக்சின், கோவிஷீல்டு மருந்துகள் லப்பைக்குடிக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தன. இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் ராஜவேல், சுகாதார ஆய்வாளர் மணி ஆகியோர் கொண்ட குழுவினர் மூலம் லப்பைக்குடிகாடு, வடக்கலூர் அகரம், திருமாந்துறை, ஒகளூர் கிராமங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பேரூராட்சியில் முகாமை செயல் அலுவலர் சதீஷ்கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். முகாம்களில் பெண்கள் உள்பட பலர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் மாவட்டத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 19 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 16 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 17 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 14 பேரும் என மொத்தம் 66 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 10,381 ஆக உயர்ந்துள்ளது.
இதில் ஏற்கனவே 155 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரம்மதேசம் கடைவீதியை சேர்ந்த 63 வயதுடைய மூதாட்டியும், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் வடக்கு தெருவை சேர்ந்த 59 வயதுடைய ஆண் ஒருவரும், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெரம்பலூர் பகுதியை சேர்ந்த 72 வயதுடைய முதியவரும் என மொத்தம் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் 9,337 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 210 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 886 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 243 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது. நேற்று மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி 994 பேருக்கும், கோவாக்சின் தடுப்பூசி 10 பேருக்கும் போடப்பட்டது. 1,990 கோவிஷீல்டு தடுப்பூசியும், 900 கோவாக்சின் தடுப்பூசியும் கையிருப்பில் உள்ளது.
பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள சிறுநிலா காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஜமாலுதீன் (வயது 68). இவர் தனது மோட்டார் சைக்கிளில் பெரம்பலூர் சென்றுவிட்டு மீண்டும் சிறுநிலா நோக்கி சென்று கொண்டிருந்தார். பெரியவடகரை அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி ஜமாலுதீன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த ஜமாலுதீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கை.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜமாலுதீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி டிரைவர் கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா சித்தேரி பகுதியை சேர்ந்த ரமேசை(45) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனைகளில் இருந்து 8,897 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,182 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 42 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 18 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 21 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 15 பேரும் என மொத்தம் 96 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 10,230 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 146 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சியை சேர்ந்த 19 வயதுடைய ஆண் ஒருவரும், பெரம்பலூர் தாலுகா கோனேரிப்பாளையத்தை சேர்ந்த 47 வயதுடைய ஆண் ஒருவரும், குன்னம் தாலுகா கீழப்புலியூரை சேர்ந்த 65 வயதுடைய மூதாட்டியும், வேப்பந்தட்டை தாலுகா அனுக்கூரை சேர்ந்த 80 வயதுடைய முதியவரும், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆலத்தூர் தாலுகா திருவளக்குறிச்சியை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவரும் என மொத்தம் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் இருந்து 8,897 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,182 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 812 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது. மாவட்டத்தில் நேற்று 456 பேருக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி இல்லாமல் இருந்த நிலையில் மாநில அரசிடம் இருந்து 4 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி நேற்று இரவு பெரம்பலூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோவாக்சின் தடுப்பூசி 44 மட்டுமே கையிருப்பில் உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 42 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 18 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 21 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 15 பேரும் என மொத்தம் 96 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 10,230 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 146 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சியை சேர்ந்த 19 வயதுடைய ஆண் ஒருவரும், பெரம்பலூர் தாலுகா கோனேரிப்பாளையத்தை சேர்ந்த 47 வயதுடைய ஆண் ஒருவரும், குன்னம் தாலுகா கீழப்புலியூரை சேர்ந்த 65 வயதுடைய மூதாட்டியும், வேப்பந்தட்டை தாலுகா அனுக்கூரை சேர்ந்த 80 வயதுடைய முதியவரும், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆலத்தூர் தாலுகா திருவளக்குறிச்சியை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவரும் என மொத்தம் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் இருந்து 8,897 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,182 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 812 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியது உள்ளது. மாவட்டத்தில் நேற்று 456 பேருக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி இல்லாமல் இருந்த நிலையில் மாநில அரசிடம் இருந்து 4 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி நேற்று இரவு பெரம்பலூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோவாக்சின் தடுப்பூசி 44 மட்டுமே கையிருப்பில் உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். புதிதாக 112 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 56 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 23 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 19 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில்14 பேரும் என மொத்தம் 112 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 10,130 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 139 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் கொரோனாவுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் தெற்கு தெருவை சேர்ந்த 60 வயதுடைய முதியவரும், கம்பன் தெருவை சேர்ந்த 80 வயதுடைய மூதாட்டியும், வேப்பந்தட்டை தாலுகா அனுக்கூர் வடக்கு தெருவை சேர்ந்த 73 வயதுடைய முதியவரும், வேப்பந்தட்டை மெயின் ரோட்டை சேர்ந்த 60 வயதுடைய மூதாட்டியும், பெரம்பலூர் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெரம்பலூர் பாரதிதாசன் நகரை சேர்ந்த 55 வயதுடைய ஆண் ஒருவரும், கவுல்பாளையம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 41 வயதுடைய ஆண் ஒருவரும், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவரும் என மொத்தம் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் 8,680 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,304 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்த 62 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 607 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். லாரி டிரைவர். இவரது மகள் நிஷா தர்ஷினி (வயது 13). இவர், அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
நிஷா தர்ஷினி, பெரம்பலூர் அருகே லாடபுரம் கிராமத்தில் பெருமாள்கோவில் தெருவில் வசிக்கும் தனது அக்காள் இளைய தர்ஷினி வீட்டுக்கு வந்திருந்தார். அவரை, கடந்த 5-ந் தேதி முதல் காணவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தாய் செல்வி போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நிஷா தர்ஷினி பிணமாக மிதந்தது நேற்று தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் குளிக்க சென்ற நிஷா தர்ஷினி, கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரிய வந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி நேற்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
மருவத்தூர் கிராமத்தில் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் உள்ளதால் அவசர சிகிச்சை பெற முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தில் கடந்த 2002-ம் ஆண்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டிடம் புதிதாக கட்டப்பட்டது. இந்த சுகாதார நிலையம் மூலம் மருவத்தூர், சித்தளி, பேரளி உள்ளிட்ட 11 கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இங்கு ஒரு டாக்டர், ஒரு செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கட்டப்பட்டு பத்து ஆண்டுகளிலேயே அந்த கட்டிடம் சேதமடைந்து விட்டது. அருகில் உள்ள கல்குவாரிகளில் வைக்கப்படும் வெடிகளால் கட்டிடம் சேதம் அடைந்ததாக தெரிகிறது. தற்போது கட்டிடம் முழுவதும் விரிசல் ஏற்பட்டு பயன்படுத்த முடியாத சூழ்நிலையில், சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் உள்ளே செல்ல அனுமதியில்லை என்று பதாகை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து 33 ஆண்டுகள் ஆனால் மட்டுமே கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட முடியும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் புதிய கட்டிடம் கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது வெளி நோயாளிகளுக்கு, அருகில் கட்டப்பட்டுள்ள செவிலியர் குடியிருப்பில் அடிப்படை சிகிச்சைக்கு மட்டும் மருத்துவமனையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சேதமடைந்த கட்டிடம் மருந்து சேமிப்பு கிடங்காக பயன்படுத்தப்படுகிறது. இதனால் மக்கள் அவசர சிகிச்சை கிடைக்காமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் தற்போது கர்ப்பிணிகள் அவசர சிகிச்சைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
செவிலியர்கள் தங்கும் குடியிருப்புகளில் படுக்கை வசதிகள் கூட இல்லை. இதனால் நோயாளிகள், மருத்துவர்கள் இக்கட்டான நிலையில் நாட்களை கடத்தி வருகின்றனர். செவிலியர்கள் மருத்துவமனைக்கு வெளியே வீடுகளை வாடகைக்கு எடுத்து குடியிருந்து வருகின்றனர்.
புதிய கட்டிடம் கட்டுவதற்கு மூன்று ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இனியும் தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






