search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி - 45 பேருக்கு தொற்று

    பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் உயிரிழந்தனர். புதிதாக 45 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இது, அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆறுதலை அளித்துள்ளது.

    இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 45 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது மூதாட்டி ஒருவரும், 58 வயது ஆண் ஒருவரும், சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 27 வயது வாலிபர் ஒருவரும் என 3 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 109 பேர் நேற்றைய தினம் குணமடைந்ததால் அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 610 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாவட்டத்தில் 989 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. மாவட்டத்தில் நேற்று மட்டும் 2,759 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அந்தவகையில் இதுவரை மொத்தம் 72,493 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 1,270 கோவிஷீல்டு தடுப்பூசியும், 760 கோவாக்சின் தடுப்பூசியும் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    Next Story
    ×