என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    மாவட்டத்தில் 94,341 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 13,238 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் என மொத்தம் இதுவரை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 579 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 11,034 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 10,627 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி பெரம்பலூர் ஒன்றியத்தில் 8 பேர், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 5 பேர், வேப்பூர் ஒன்றியத்தில் 5 பேர், ஆலத்தூர் ஒன்றியத்தில் 2 பேர் என மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 210 பேரில் 147 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர், அரியலூர், திருச்சி ஆகிய நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 63 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கொரோனாவிற்கு நேற்றைய அறிவிப்பின்படி 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் 94,341 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 13,238 பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியும் என மொத்தம் இதுவரை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 579 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் 1,277 பேருக்கும், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் 929 பேருக்கும் என ஒரே நாளில் 2,206 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலித்தும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலித்தும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று மட்டும் மாவட்டத்தில் 1,847 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும், 330 பேருக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 2,177 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று கொரோனா தடுப்பூசியை சுகாதாரத்துறையினர் செலுத்தி வருகின்றனர். அதன்படி மாவட்டத்தில் தடுப்பூசி போட தகுதி வாய்ந்த 3,444 மாற்றுத்திறனாளிகளில், இதுவரைக்கும் 279 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,05,373 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 1,540 கோவிஷீல்டு தடுப்பூசியும், 680 கோவாக்சின் தடுப்பூசியும் கையிருப்பில் உள்ளது.
    குன்னம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கீழப்புலியூர் கிராமம் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நடராஜன்(வயது 55). விவசாயி. சில மாதங்களாகவே குடும்ப தகராறு நடந்து வந்ததாகவும், இதனால் அவர் மனவேதனையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வயலுக்கு செல்வதாக கூறிவிட்டு, அவர் சென்றார். மறுநாள் ஆகியும் அவர் வீட்டுக்கு வராததால், அவரது உறவினர்கள் வயலுக்கு சென்று பார்த்தனர். அங்கு வயலுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்து அவர் இறந்து கிடந்தார். இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் கொடுத்த புகாரின்பேரில் மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் அங்கு சென்று, நடராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதார பணியாளர்களில் 4,035 பேரில், 3,411 பேருக்கு முதல் தவணையும், அதில் 2,472 பேருக்கு 2-வது தவணையும் என 84.5 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முன்களப்பணியாளர்கள் 7,451 பேரில், 4,487 பேருக்கு முதல் தவணையும், அதில் 2,469 பேருக்கு 2-வது தவணையும் என 60.2 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 1,71,120 பேரில், 39,043 பேருக்கு முதல் தவணையும், அதில் 8,533 பேருக்கு 2-வது தவணையும் என 22.8 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட 45 வயதுக்குள் உள்ள 2,82,407 பேரில், 37,939 பேருக்கு முதல் தவணையும், அதில் 125 பேருக்கு 2-வது தவணையும் என 13.4 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தடுப்பூசி போட தகுதி வாய்ந்த மொத்தம் 4,53,527 பேரில், இதுவரைக்கும் 84,880 பேர் முதல் தவணையும், அதில், 13,599 பேர் 2-வது தவணையும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 18.7 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    பாடாலூர் போலீஸ் நிலைய பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பாடாலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் போலீஸ் நிலைய பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த 3 பேருக்கும் வேறு ஏதேனும் கொள்ளைச் சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்தது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதிய மதனகோபாலபுரத்தை சேர்ந்த 49 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் 38 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 246 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 781 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது. மாவட்டத்தில் நேற்று 4,710 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 1,740 கோவிஷீல்டு தடுப்பூசியும், 1,440 கோவாக்சின் தடுப்பூசியும் கையிருப்பில் உள்ளது.
    அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 100 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 37 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குன்னம் தாலுகா காடூரை சேர்ந்த 60 வயதுடைய மூதாட்டியும், பரவாயை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் 44 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 252 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 842 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது. மாவட்டத்தில் நேற்று 4,850 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 1,270 கோவிஷீல்டு தடுப்பூசியும், 2,240 கோவாக்சின் தடுப்பூசியும் கையிருப்பில் உள்ளது.

    இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று 63 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 39 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று 36 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 593 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 806 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது. மாவட்டத்தில் நேற்று 2,916 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    மங்களமேடு அருகே ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
    மங்களமேடு:

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள தி.கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 62). போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு சொந்த வேலையாக சேத்தியாத்தோப்பு வரை சென்றுள்ளார். நேற்று காலை அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் பூட்டு உடைந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பூஜை அறையில் இருந்த 2 வெள்ளி குத்துவிளக்குகள் மற்றும் வெள்ளி சொம்பு ஒன்று காணாமல் போயிருந்தது.

    இது குறித்து மங்களமேடு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்தது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 37 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயதுடைய மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் 84 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 307 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 1,006 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது. மாவட்டத்தில் நேற்றும் கோவாக்சின் தடுப்பூசி இல்லாததால், கோவிஷீல்டு தடுப்பூசி 4,653 பேருக்கு போடப்பட்டது. இதனால் கோவாக்சின் 2-வது டோஸ் போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மாவட்டத்தில் இதுவரைக்கு மொத்தம் 85,581 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 920 கோவிஷீல்டு தடுப்பூசி மட்டும் கையிருப்பில் உள்ளது. ஆனால் கோவாக்சின் தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    வேப்பந்தட்டை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேப்பந்தட்டை:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம்(வயது 75). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மகன்கள் சரியாக கவனிக்காததால் மனமுடைந்து வீட்டில் பருத்தி வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மருவத்தூரில் மின்மோட்டார் பழுதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தை அடுத்த மருவத்தூர் ேபாலீஸ் நிலையம் அருகே உள்ள புது காலனியில் சுமார் 400 பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மின் மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி அமைத்து, அதன்மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்த குடிநீர் தொட்டி புது காலனியில் உள்ள மக்களும், மருவத்தூர் கிராம மக்களும் பயன்படும் வகையில் இருந்தது. இந்நிலையில் இந்த தொட்டியின் மின் மோட்டார் பழுது அடைந்தது. 3 மாதங்களுக்கு மேலாகியும் மின் மோட்டார் சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிப்படுவதோடு, வேறு பகுதிக்கு சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது.

    இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும், இதுவரை சரி செய்யப்படவில்லை. எனவே இனியும் தாமதிக்காமல் பேரளி ஊராட்சி நிர்வாகம் பழுதாகி உள்ள மின் மோட்டாரை உடனடியாக சரி செய்து, குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு மேலும் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மாவட்டங்களில் 164 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 66 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 82 மற்றும் தலா 70 வயதுடைய முதியவர்கள் என 3 பேரும், 65, 60 வயதுடைய மூதாட்டிகள் 2 பேரும் என மொத்தம் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று மட்டும் 136 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 457 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 885 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

    இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று 98 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 54, 44, 41 வயதுடைய ஆண்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 113 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 597 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ×