என் மலர்
பெரம்பலூர்
திருட்டு சம்பவம் தொடர்பாக முகமது இப்ராகிம் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் வடக்குமாதவி ரோடு மேட்டுத்தெரு வெற்றி நகரில் வசித்து வருபவர் முகமது இப்ராகிம்(வயது 33). இவர் தபால் நிலையத் தெருவில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஜெய்துல், பல் டாக்டராக உள்ளார். இந்த தம்பதிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவர்கள் குடியிருக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள முகமது இப்ராகிமின் மாமியார் வீட்டில் இருந்து வருகின்றனர்.
முகமது இப்ராகிம் தனது வீட்டை தினமும் இரவு 7.30 மணிக்கு பூட்டிவிட்டு மறுநாள் காலை வந்து பார்த்துச் செல்வது வழக்கம். இதனை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முகமது இப்ராகிம் வீட்டை பூட்டி விட்டு சென்றார்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை 7.15 மணி அளவில் வழக்கம்போல் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டிற்குள் இருந்த பீரோக்கள் அனைத்தும் உடைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அவற்றில் வைக்கப்பட்டிருந்த தங்க வளையல்கள், காப்புச்சங்கிலி (பிரேஸ்லெட்), கொலுசு, தங்கச்சங்கிலி, முத்து வைத்த நெக்லஸ், தோடு, மாட்டல் என மொத்தம் 17 பவுன் நகைகளும், ரூ.30 ஆயிரமும் திருட்டு போயிருந்தது, தெரியவந்தது.
இது குறித்து முகமது இப்ராகிம் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேப்பந்தட்டையில் சாராயம் விற்ற பெண் உள்பட 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி அழித்தனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அரும்பாவூர் போலீசார் வேப்பந்தட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேப்பந்தட்டை வேதநதி ஆறு அருகே 2 பேர் சாராயம் விற்றது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்ததில், வேப்பந்தட்டையை சேர்ந்த சித்ரா (வயது 45), பிம்பலூரை சேர்ந்த சுரேஷ் (30) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி அழித்தனர். பின்னர் 2 பேரையும் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பெரம்பலூர் அருகே விபத்தில் தம்பதி மற்றும் அவர்களுடைய மகன் ஆகியோர் காயம் அடைந்தனர்.
பாடாலூர்:
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா நம்புகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்லதுரை (வயது 32). இவருடைய மனைவி ராசாத்தி (27), மகன் ருபனேஷ்(7). இவர்கள் 3 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள இரூர் கிராமத்திற்கு வந்துவிட்டு, பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவிளக்குறிச்சி பிரிவு சாலை எதிரில் சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் காயமடைந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆலத்தூர் தாசில்தார் அருளானந்தம், 3 பேர் காயமடைந்து கிடப்பதை கண்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் தாசில்தார், காயமடைந்த 3 பேரையும் மீட்டு தான் வந்த அரசு வாகனத்தில் ஏற்றி பாடாலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இதனை கண்ட பொதுமக்கள் அவரை பாராட்டினர்.
வேப்பந்தட்டை அருகே செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அ.மேட்டூரை சேர்ந்தவர் ஸ்ரீதர்(வயது 20). சரக்கு ஆட்டோ டிரைவரான இவர் நேற்று அரும்பாவூர் கடைவீதியில் ஆட்டோவில் தனது செல்போனை வைத்துவிட்டு சென்றார். அப்போது அந்த வழியாகச் சென்ற வாலிபர் ஒருவர் செல்போனை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார். இதனைப் பார்த்த அக்கம், பக்கத்தினர் அந்த வாலிபரை பிடித்து அரும்பாவூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், அந்த வாலிபர் வெங்கனூரை சேர்ந்த முரளி(20) என்பதும், செல்போன் திருடியதும் தெரியவந்தது. இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முரளியை கைது செய்தனர்.
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெறாது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்:
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டம் நடைபெறாது என தமிழக அரசு அறிவித்துள்ளதால், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டங்கள் நடைபெறாது.
இத்தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

பாடாலூர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடாலூர்:
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் அஸ்ரப்(வயது 35). இவர் சொந்த வேலை காரணமாக சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தை அடுத்துள்ள பெருமாள் பாளையத்தில் வந்தபோது, எதிர்பாராதவிதமாக முன்னே சென்ற வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அஸ்ரப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார், அஸ்ரபின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டனர்.
பாடாலூர்:
இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் சில்லக்குடி வடக்கு கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தில் காய்கறி பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பில் பண்ணைப்பள்ளி பயிற்சி நடத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி, உழவர் பயிற்சி மைய வேளாண்மை துணை இயக்குனர் கீதா ஆகியோர் தலைமை மற்றும் வழிகாட்டுதலின்படி நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆலத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், ரோவர் வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள் சதீஷ்குமார், சங்கீதா ஆகியோர் பேசினார்கள். இதில் காய்கறி பயிர் சாகுபடி செய்ய நிலம் பதப்படுத்துதல், மண் பரிசோதனை, நுண்ணூட்டம், உயிர் உரத்தின் முக்கியத்துவம், இயற்கை முறை சாகுபடி மற்றும் விதை நேர்த்தி செய்வது போன்ற தொழில்நுட்பங்களை விஞ்ஞானிகள் விளக்கிக் கூறினார்கள்.
இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை வரி செலுத்தாத 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.3¼ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் போக்குவரத்து வாகனங்களான லாரி, வேன், சுற்றுலா வேன், பஸ், ஆம்னி பஸ் ஆகியவற்றின் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களுக்கு முறையாக அரசிற்கு ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒருமுறை சாலை வரி செலுத்த வேண்டும். அவ்வாறு வரி செலுத்தாத மற்றும் ஒரு ஆண்டிற்கு மேல் வரி செலுத்தாத கனரக வாகனங்கள் தொடர்ந்து சாலையில் இயங்கி வருகின்றன. சாலை வரி செலுத்துவது குறித்து வாகன உரிமையாளர்களுக்கு உரிய கால அவகாசம் மற்றும் நோட்டீசு அனுப்பியும், தொடர்ந்து சாலை வரி செலுத்தாமல் இயங்கி வருவதாக பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு புகார்கள் சென்றன.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெரம்பலூர், குன்னம், பாடாலூர், வாலிகண்டபுரம் ஆகிய இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வாகன சோதனையில் சாலை வரி செலுத்தாத 6 கனரக லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும், மங்களமேடு போலீஸ் நிலைய வளாகத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டன. 2 பொக்லைன் எந்திரங்கள், 2 இலகு ரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பாடாலூர் போலீஸ் நிலையத்திலும், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. வாகனத்தின் உரிமையாளர்கள் தங்கள் வாகனத்திற்கு உரிய சாலை வரியை உடனடியாக செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் பட்சத்தில் வரி செலுத்தாத வாகனங்கள் தொடர்ந்து சாலையில் இயக்கினால் வாகனத்தை பறிமுதல் செய்யப்படும் போக்குவரத்து அலுவலர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேப்பந்தட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள சிறுவயலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகள் உஷாமாலினி(வயது 17). இவர் அனுக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மேலும் சுப்பிரமணியனுக்கு உதவியாக அவ்வப்போது விவசாய வேலைகளையும் உஷாமாலினி செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வயலுக்கு சென்ற உஷாமாலினி எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த பெற்றோர், உஷாமாலினியை தேடி வயலுக்கு சென்றனர். அங்கு தேடியபோது கிணற்றில் அவர் பிணமாக மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உஷாமாலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அகரம்சீகூரில் விளையாட்டு மைதானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அகரம் சீகூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் ஆக்கிரமிக்கப்பட்டு, வீடுகள் கட்டப்பட்டன.
இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதாஸ் மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விளையாட்டு மைதானத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் அகற்றப்படவில்லை.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், இந்த விளையாட்டு மைதானத்தில் கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் விளையாடி வருகின்றனர். அவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த இந்த மைதானம் உதவியாக உள்ளது. இந்த மைதானத்தில் ஆரம்ப காலங்களில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் விளையாட்டு மைதானத்தில் வீடுகள் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் மைதான பகுதி சுருங்கியுள்ளது. மேலும் இந்த மைதானத்தில் இருந்த பல்வேறு விளையாட்டு உபகரணங்களை காணவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக, மைதானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மனுக்கள் கொடுக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சுற்றுச்சுவர் அமைத்து விளையாட்டு மைதானம் சீரமைக்கப்பட்டால் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் விளையாட்டு திறன் மேம்பாடு அடையும், என்று கூறினர்.
வேப்பந்தட்டை அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பந்தட்டை:
வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் பெரிய ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அந்த வழியாக மலையாளபட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 56) அரும்பாவூரை சேர்ந்த மூக்கன் (36) ஆகியோர் டிராக்டரில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
வேப்பந்தட்டை அருகே விவசாயி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 19 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள காரியானூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது 55). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கினார். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்து, பீரோவை உடைத்து உள்ளே இருந்த 19 பவுன் நகைகளை திருடிச்சென்றனர்.
நேற்று காலை கணேசன் மற்றும் குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பீரோவில் பார்த்தபோது நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதேபோல் அதே ஊரைச் சேர்ந்த தங்கராசுவின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 கிராம் வெள்ளிப்பொருட்களை திருடிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கணேசன் மற்றும் தங்கராஜ் ஆகியோர் கை.களத்தூர் போலீசில் தனித்தனியே புகார் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மங்களமேடு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள், தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.