என் மலர்
பெரம்பலூர்
- பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கல்குவாரியை தடை செய்ய கோரி மனு அளிக்கப்பட்டது.
- மொத்தம் 235 மனுக்களை பெற்றார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது குன்னம் தாலுகா, வேப்பூர் ஒன்றியம், சித்தளி ஊராட்சிக்கு உட்பட்ட பீல்வாடி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கூறுகையில், பொதுமக்களுக்கு இடையூறாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் உள்ள பீல்வாடி கல்குவாரியை தடை செய்ய வேண்டும்.
மேலும் இது தொடர்பாக சித்தளி ஊராட்சி மன்றத்தில் 2 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே அந்த கல்குவாரியை தடை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
பெரம்பலூர் தாலுகா செங்குணம் அருந்ததியர் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தங்களது கிராமத்தின் மலையடிவாரத்தில் அருந்ததியர் சமுதாயத்திற்கு அரசால் ஒதுக்கப்பட்ட நிலத்தில் வீடு கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 235 மனுக்களை பெற்றார். மேலும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தலா ரூ.34,272 மதிப்பீட்டில் 2 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எலக்ட்ரானிக் ப்ரெய்லி ரீடரினையும், தலா ரூ.5,560 மதிப்பீட்டில் 12 காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவியினையும் கலெக்டர் வழங்கினார்.
- போட்டித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பெரம்பலூர்:
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அகவொளித் திறனாளிகள் நல சங்கத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கொளஞ்சிநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் அற்புதம், பொருளாளர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
100 சதவீதம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை கடும் ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். போட்டித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பதிவு மூப்பு அடிப்படையில் நேர்காணல் வாயிலாக, அவரவர் தகுதியின் அடிப்படையில் அனைத்து துறைகளிலும் ஒரு சதவீதம் இட ஒதுக்கீட்டின் படி வேலை வழங்க வேண்டும். மாநகர், நகர், ஊராட்சி பகுதிகளில் கோவில்களில் பாதுகாப்பான இடங்களில் சுயவேலை மேற்கொள்ளும் வகையில் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். பி.எச்டி. முடித்தவர்களை அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளராக உடனடியாக பணியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுவினை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து கொடுத்து, அதனை தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்புமாறு வலியுறுத்தி விட்டு கலைந்து சென்றனர்."
- பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி, போலீசார் சார்பில் செட்டிகுளம் கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் மற்றும் அவரது குழுவினரான சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து மற்றும் போலீசார் கலந்து கொண்டு பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகளிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம், இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் குழந்தை தொழிலாளர் முறை குறித்து தெரிவித்து, அந்த பகுதியில் குழந்தை தொழிலாளர் முறை இருந்தால் அதனை ஒழிக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும், என்றும் கேட்டுக்கொண்டனர்.
- கிராவல் மண் கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்
- லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொளஞ்சியப்பன் தலைமையில் போலீசார் எளம்பலூர் ரோட்டில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த டிப்பர் லாரியை போலீசார் வழிமறித்தனர். டிரைவர் சிறிது தூரம் தள்ளிச்சென்று லாரியை நிறுத்திவிட்டு, லாரியில் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டார். பின்னர் போலீசார் சென்று டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில் சட்ட விரோதமாக சுமார் 2½ யூனிட் கிராவல் மண் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக இருந்த லாரி டிரைவர் எளம்பலூர் வடக்கு தெருவை சேர்ந்த சேகர் மகன் பிரசாத்தை (வயது 20) பிடித்து கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
- வக்கீல்கள் கோர்ட்டு பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
- போலீசாரை கண்டித்து நடைபெற்றது
பெரம்பலூர்
கன்னியாகுமரி மாவட்டம், இரணியலை சேர்ந்த வக்கீல்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்து, வக்கீல்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் போலீசாரை கண்டித்தும், அவர்கள் மீதும், தொடர்புடைய அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் கோர்ட்டு பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பார் அசோசியேசன் தலைவர் வள்ளுவன் நம்பி, பெரம்பலூர் அட்வகேட்ஸ் அசோசியேசன் தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் அந்தந்த அசோசியேசனை சேர்ந்த வக்கீல்கள் பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டையில் உள்ள அனைத்து கோர்ட்டுகளில் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் அந்த கோர்ட்டுகளில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
- தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
- கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா
பெரம்பலூர்:
பெரம்பலூர் நகர தி.மு.க. சார்பில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா மற்றும் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேரடி திடலில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு நகர செயலாளரும், எம்எல்ஏவுமான பிரபாகரன் தலைமை வகித்தார். நகர துணை செயலாளர்கள் ரெங்கராஜன், சபியுல்லா, கமலம், நகர பொருளாளர் முத்துக்குமார், மாவட்ட பிரதிநிதிகள் ஜெயக்குமார், ரெங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கொள்கை பரப்பு இணை செயலாளர் புதுக்கோட்டை விஜயா, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இதில் மாநில ஆதிதிராவிடர் நல குழு துணை அமைப்பாளர் துரைசாமி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட அவைதலைவர் நடராஜன், மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிபாஸ்கர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி, மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் அப்துல் பாரூக், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர், மாவட்ட இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் மாரிக்கண்ணன், நகராட்சி கவுன்சிலர்கள் சிவக்குமார், துரைகாமராஜ், சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நகர இளைஞரணி அமைப்பாளர் அப்துல்கரீம் வரவேற்றார். முடிவில் நகர மாணவரணி அமைப்பாளர் பா.ரினோபாஸ்டின் நன்றி கூறினார்.
- எளம்பலூரில் மகாலிங்க சித்தர் பெருமான் குருபூஜை நடைபெற்றது.
- 210 மகா சித்தர்கள் யாகத்துடன் நடந்தது.
பெரம்பலூர்:
எளம்பலூர் சமத்துவபுரத்தில் உள்ள மகாலிங்க சித்தர் சன்னதியில் மகாலிங்க சித்தர் பெருமான் குருபூஜை விழா ரோகிணி மாதாஜி தலைமையில் தவயோகி சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள், சிவகாசி தொழிலதிபர் அதிபன் போஸ் (எ) நந்நிபாபா முன்னிலையில் 210 மகா சித்தர்கள் யாகத்துடன் நடந்தது.
பின்னர் உலக நன்மை கருதி கோபூஜை, 210 சித்தர்கள் நாமாவளி புஷ்பா அர்ச்சனையும், சிறப்பு ருத்ர ஜபஹோம அபிஷேக வழிபாடும், கலச அபிஷேகம், மகாதீபாரதனையும் நடந்தது. திருச்சி ஆகமப்பிரவீன் கயிலை சிவஸ்ரீ தெய்வசிகாமணி சிவாச்சாரியார் குழுவினர் ருத்ர ஜெப ஹோமம் நடத்தினர். தொடர்ந்து மாணிக்கவாசகர் குருபூஜை விழாவும் நடைபெற்றது. சாதுக்களுக்கு வஸ்த்திரதானமும், பொது மக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் தாளாளர் சிவசுப்பிரமணியம், செயலாளர் விவேகானந்தன், சென்னை தொழிலதிபர் வெற்றிமாறன், டாக்டர் ராஜசிதம்பரம், கருங்குழி கிஷோர்குமார், அரசு வக்கீல் சுந்தரராஜன், ராதா மாதாஜி, தயாளன் சுவாமிகள், ஒய்வு பெற்ற இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குரு பூஜை நடைபெற்றது.
- நாயன்மார் சன்னதியில் எழுந்தருளி இருக்கும்
பெரம்பலூர்:
பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் ஆனிமாதம் மகம் நட்சத்தினரம் அன்று ஆண்டுதோறும் ஸ்ரீ மாணிக்கவாசகருக்கு குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று குருபூஜை விழா நடந்தது.இதையொட்டி காலை 10:30 மணி அளவில் நாயன்மார் சன்னதியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீமாணிக்கவாசகர் பெருமானுக்கு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் 12 மணியளவில் மகா தீபாரதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை சுவாமிநாத சிவாச்சாரியார் நடத்தி வைத்தார் . நிகழ்ச்சியில் திரளான சிவனடியார்கள், வார வழிபாட்டு குழுவினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
- மங்கூன் பகுதியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
- பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது
பெரம்பலூர்:
பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மங்கூன் துணை மின்நிலையத்தில் மாதாந்திரபராமரிப்பு பணிகள் நாளை (5ம்தேதி) நடைபெறுகிறது. இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான குரும்பலூர், பாளையம், புதுஆத்தூர், ஈச்சம்பட்டி, மூலக்காடு, லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், புதுஅம்மாபாளையம், அடைக்கம்பட்டி, டி.களத்தூர் பிரிவு ரோடு, சிறுவயலூர், குரூர், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, சத்திரமனை, வேலூர், கீழக்கணவாய், பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
- மாயமான குழந்தை குளத்தில் பிணமாக மீட்டனர்
- பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வரகூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் - இளமுகை தம்பதியினரின் ஒன்றை வயது ஆகாஷ் என்கிற ஆண் குழந்தை வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனது. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உறவினர்கள் தேடி உள்ளனர். இருப்பினும் குழந்தையை காணாததால் குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த குன்னம் போலீசார் அக்கம் பக்கத்தில் உள்ள ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட இடங்களில் தேடி உள்ளனர். இந்நிலையில் பிரபாகரன் வீட்டின் பின்புறத்தில் உள்ள குளத்தில் தேடிய போலீசார், குழந்தை இறந்து கிடந்ததை பார்த்தனர். இதனைத் தொடர்ந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து குன்னம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- விழாவை முன்னிட்டு காலையில் மூலவர் சிவன், அகிலாண்டேஸ்வரி அம்பாள் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும், ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர் உற்சவர் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- இறைநெறி கழகத்தினர், தின வழிபாட்டு குழுவினர், பிரதோஷ வழிபாட்டு குழுவைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 16-வது ஆண்டு வருடாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு காலையில் மூலவர் சிவன், அகிலாண்டேஸ்வரி அம்பாள் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும், ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர் உற்சவர் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பூஜைகளை கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர் சிவாச்சாரியார், உதவி சிவாச்சாரியார் முல்லை ஆகியோர் நடத்தினர். இதில் முன்னாள் அறங்காவலர்கள், தர்ம பரிபாலின சங்க நிர்வாகிகள், இறைநெறி கழகத்தினர், தின வழிபாட்டு குழுவினர், பிரதோஷ வழிபாட்டு குழுவைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 34 பிரபல நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான தகுதியான பணியாட்களை எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் 500-க்கும் மேற்பட்டோரை தேர்ந்தெடுத்தனர்
- மாணவர்கள் எவ்வாறு பணிபுரியும் நிறுவனத்தில் நடந்து கொள்ள வேண்டும், நாட்டின் எதிர்காலத்தில் அவர்களது பங்களிப்பு எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியில் மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், கடந்த கல்வியாண்டில் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் டைட்டன், எல்ரூடி, இந்தியா யமஹா மோட்டார்ஸ், ஹூண்டாய் மொபிஸ், டாபோ எனர்ஜி லிமிடெட், ராணே மெட்ராஸ், ராயல் என்பில்ட், ஹூண்டாய் பாலிடெக், எஸ்.ஏ.சி. என்ஜின் காம்போனட்ஸ் உட்பட 34 பிரபல நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான தகுதியான பணியாட்களை எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் 500-க்கும் மேற்பட்டோரை தேர்ந்தெடுத்தனர். இம்முகாமிகளில் பணிக்கு தேர்ந்தெடு க்கப்பட்டோருக்கான பணிநியமன ஆணை வழங்கப்படுகிறது என்றார்.
பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சுகுமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக சென்னை டாபே மனித வளமேம்பாட்டு மைய தலைவர் தங்கராசு, திருச்சி பெல் நிறுவன துணை பொதுமேலாளர் சண்முகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகையில், மாணவர்கள் எவ்வாறு பணிபுரியும் நிறுவனத்தில் நடந்து கொள்ள வேண்டும், நாட்டின் எதிர்காலத்தில் அவர்களது பங்களிப்பு எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறினர். பின்னர் பணிக்கு தேர்ந்தெ டுக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்டோருக்கு பணிநியமனை ஆணைகளை வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சுகுமார் வேலைவாய்ப்பு அறிக்கை வாசித்தார். இதில் உடற்கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக எந்திரவியல் துறைத்தலைவர் சரவணன் வரவேற்றார். முடிவில் வேலைவாய்ப்பு அலுவலர் தேவராஜ் நன்றி கூறினார்.






