என் மலர்
பெரம்பலூர்
- பெரம்பலூரில் பெரியார் சிலை சேதப்படுத்திய கூலித்தொழிலாளி கைது செய்யப்பட்டு உள்ளார்
- சிலை சேதப்படுத்தியதை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம், மறியல்
பெரம்பலூர்,-
பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய நுழைவாயில் அருகில் அ.தி.மு.க. சார்பில் ஒரே பீடத்தில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.அதில் பெரியார் சிலையின் இடது கை பெருவிரல் சேதப்படுத்தப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க.வினர், மாவட்ட செயலாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் தலைமையில் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவை தலைவர் குணசீலன், ஒன்றிய கழக செயலாளர்கள், கர்ணன், சிவப்பிரகாசம், செல்வகுமார் நகர கழக செயலாளர் ராஜ பூபதி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஏ, கே ராஜேந்திரன் முன்னாள் ஒன்றி செயலாளர் முள்ளுக் குறிச்சி சுரேஷ், குன்னம் ரங்கநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறுகையில், பெரம்பலூரில் புது பஸ்ஸ்டாண்ட் வளாகம் அருகில் அ.தி.மு.க.வினர் வைத்துள்ள பெரியார் சிலையை வேண்டுமென்றே திட்டமிட்டு சில விஷமிகள் சேதப்படுத்தி இருக்கிறார்கள். இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இதுபோன்ற விஷமிகளின் குற்ற செயல்கள் தொடருமேயானால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். பெரம்பலூர் மாவட்ட காவல்துறை இதனை போன்ற விஷம செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். இரவு நேரங்களில் ரோந்து பணியை விரைவுபடுத்தி குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தடுத்திட வேண்டும் என தெரிவித்தார்.
.போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினருடன், பெரம்பலூர் டி.எஸ்.பி. சுக்கிரன் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சிலையை சேதப்படுத்தியது குறித்து உரிய விசாரணை நடத்தி, மர்ம நபர் கைது செய்யப்படுவார் என்று உறுதி அளித்தார். சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சிலை சேதப்படுத்தியது தொடர்பாக, அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா உதவியுடன், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகன் அனுசந்திரன் (வயது 37) என்ற கூலித்தொழிலாளி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், குடிபோதையில் பெரியார் சிலை அருகே படுத்திருந்ததாகவும், பெரியாரின் சிலையில் உள்ள விரலை பிடித்து எந்திரிக்க முயற்சித்த போது, உடைந்து விட்டதாகவும், இதனால் தான் பயன்படுத்திய சிவப்பு துண்டை வைத்து, மறைத்து விட்டு சென்றதாகவும், ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.
- அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா உதவியுடன், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய நுழைவாயில் அருகில் அ.தி.மு.க. சார்பில் ஒரே பீடத்தில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
அதில் பெரியார் சிலை யின் இடது கை பெருவிரல் சேதப்படுத்தப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க.வினர், மாவட்ட செயலாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் தலைமை யில் மறியல் மற்றும் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினருடன், பெரம்பலூர் டி.எஸ்.பி. சுக்கிரன் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சிலையை சேதப்படுத்தியது குறித்து உரிய விசாரணை நடத்தி, மர்ம நபர் கைது செய்யப்படுவார் என்று உறுதி அளித்தார். சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சிலை சேதப்படுத்தியது தொடர்பாக, அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா உதவியுடன், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகன் அனுசந்திரன் (வயது 37) என்ற கூலித்தொழிலாளி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், குடிபோ தை யில் பெரியார் சிலை அருகே படுத்திருந்ததாகவும், பெரியாரின் சிலையில் உள்ள விரலை பிடித்து எந்திரிக்க முயற்சித்த போது, உடைந்து விட்டதாகவும், இதனால் தான் பயன்படுத்திய சிவப்பு துண்டை வைத்து, மறைத்து விட்டு சென்றதாகவும், ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் ரூ.3.72 கோடியில் கூடுதல் பஸ் ஸ்டாண்ட் கட்ட திட்டம்
- பெரம்பலூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் நகராட்சி கூட்டரங்கில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் அம்பிகா தலைமை வகித்தார். ஆணையர் ராமர், நகராட்சி துணைதலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்டு கவுன்சிலர்கள் தங்களது பகுதியில் நிறைவேற்றப்படவேண்டிய வளர்ச்சிப்பணிகள் குறித்து பேசினர்.பின்னர் நகராட்சி தலைவர் அம்பிகா பேசுகையில் நகர பொதுமக்கள் நலன் கருதி கவுன்சிலர்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் ரூ 3 கோடியே 72 லட்சம் செலவில் கூடுதல் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படும் என தெரிவித்தார்.கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படவுள்ள நகராட்சி அறிவுசார் மையத்திற்கு ரூ.10 லட்சத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்ததற்கும் அனுமதி வழங்குதல், ரூ.22 லட்சம் செலவில் பெரம்பலூர் புது பஸ்ஸ்டாண்டில் சேதமடைந்த தார் சாலையை சீரமைப்பது, பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் ரூ.372 கோடி செலவில் கூடுதல் பஸ் ஸ்டாண்ட் அமைப்பது என்பது உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் நகராட்சி பொறியாளர், உதவி பொறியாளர், கவுன்சிலர்கள், சுகதார ஆய்வாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்
- 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் ரத்ததானம் செய்தனர்
பெரம்பலூர்,
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பெரம்பலூர் அருகேயுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நாட்டு நலபணித்திட்ட மாணவர்களின் சார்பாக இரத்த தான முகாம் நடைபெற்றது.முகாமை ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவசுப்பிரமணியம் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது,தானத்தில் சிறந்தது இரத்த தானமெனவும், இப்போதுள்ள இளைஞர்கள் தங்களின் குருதியை தானம் செய்வதன் மூலம் அவர்களின் கொடையுள்ளம் பெருகும், மற்றும் உடலிலுள்ள இரத்த அணுக்கள் மீண்டும் உற்பத்தியாகும். எனவே அனைவரும் தகுந்த இடைவெளியில் குருதி தானம் செய்ய வலியுறுத்தினார்.முன்னதாக துவக்க முகாமில் கல்லூரி நிறுவங்களின் செயலாளர் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலை வகித்தார் இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் ரத்ததானம் செய்தனர். கல்லூரி முதல்வர் மாரிமுத்து பேராசிரியர்கள், பேராசிரியைகள் முகாம் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.
- பெரம்பலூர் நகராட்சி சார்பில் தூய்மையே சேவை என்ற தலைப்பில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
- தெப்பக்குளம், அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மை பணி நடைபெற்றது
பெரம்பலூர்,
பெரம்பலூர் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மை பணியினை நகராட்சி தலைவர் அம்பிகா தொடங்கிவைத்தார். ஆணையர் ராமர் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆய்வாளர் ஸ்ரீனிவாசலு மேற்பார்வையில் தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், கொசுபுழு ஒழிப்பு பணியாளர்கள், பரப்புரையாளர்கள் ஆகியோர் தூய்மை பணியினை மேற்கொண்டனர். மேலும் நகராட்சி அனைத்து வார்டு பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இதேபோல் மத்திய அரசின் பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தூய்மையே சேவை என்ற தலைப்பில் வாருங்கள் ஒன்றிணைவோம் என்ற நிகழ்ச்சியின் கீழ் நடந்த தூய்மை பணியினை பள்ளி முதல்வர் மேகநாதன் தொடங்கிவைத்தார். பள்ளி வளாகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் கேந்திரிய ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் ஆகியோர் மேற்பார்வையில் மாணவ,மாணவிகள், தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுப்பட்டனர்.பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் இணைந்து திருக்கோவிலில் அனைத்து சன்னதிகளும் சுத்தப்படுத்தி தண்ணீரால் கழுவி விடப்பட்டு உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சங்க பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாள் நடராஜன், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் உட்பட பலர்கலந்துகொண்டனர்.
- முதியோர் இல்லத்தில் முதியோர் தினவிழா கொண்டாடப்பட்டது
- மூத்தோர் அனைவரும் பாட்டு பாடி, கதை சொல்லி, ஆட்டம் போட்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர்
பெரம்பலூர்
முதியோர்தினத்தை யொட்டி பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் சோமண்டாபுதூர் பிரிவு ரோடு அருகே உள்ளே முதுயுகம் முதியோர் இல்லத்தில் முதியோர் தினவிழா நேற்று நடந்தது. விழாவிற்கு ஓய்வு பெற்ற கல்வி அதிகாதி ஜெயராமன் தலைமை வகித்தார். மூத்தோர் அனைவரும் பாட்டு பாடி, கதை சொல்லி, ஆட்டம் போட்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்ந்தனர். நிகழ்வில் பெரம்பலூர் உதிரம் நண்பர்கள் குழுவின் குருதி ஏற்பாட்டாளர் உதிரம் நாகராஜ், தொடர் குருதி கொடையாளர் மகேஸ்குமரன், ஆற்றும் கரங்கள் சிறப்பு இல்ல நிர்வாகி அருண் ஆப்ரஹாம் உட்பட முதியோர் இல்ல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுயுகம் இல்ல பணியாளர்கள் செய்திருந்தனர். முன்னதாக மூத்தோர்கள் சார்பாக ராஜேஸ்வரி வரவேற்றார். அபிநந்தன் நன்றி கூறினார்.
- பெரம்பலூர் நகரில் 4 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்
- தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என நகராட்சி அறிவிப்பு
பெரம்பலூர்,
பெரம்பலூர் நகராட்சிக்கு வரும் கொள்ளிடம் குடிநீர் திட்டத்திற்காக தாளக்குடியில் அமைக்கப்பட்டுள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் நாளை (3ம்தேதி) முதல் 6ம்தேதி முடிய நான்கு நாட்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என நகராட்சி ஆணையர் ராமர் தெரிவித்துள்ளார்.
- பெரம்பலூர், அய்யலூர் கிராமத்தில் உள்ள பஞ்சமாயி அம்மன் கோவிலில் உண்டியல், வெண்கல மணிகள், கலசங்கள் ஆகியவற்றை திருடி சென்றனர்
- மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே அய்யலூர் கிராமத்தில் ஒரு சமுதாயத்தினருக்கு சொந்தமான பஞ்சமாயி அம்மன் கோவில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது .அப்போது பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளனர் இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து அங்கிருந்து உண்டியல் மற்றும் வெண்கல மணிகள் கலசங்கள் ஆகியவற்றை திருடி சென்றனர். இவற்றின் மதிப்பு ரூ.7000 இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெரம்பலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- காவிரி தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்
பெரம்பலூர்,
தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை தர மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் தங்க ரத்தினவேல் தலைமை தாங்கினார். கட்சியின் திருச்சி நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக மாநில அரசை கண்டித்தும் இதனை கண்டிக்க தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் காவிரி நதிநீர் பிரச்சனைக்கு மத்திய மாநில அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
- காரை கிராம ஊராட்சி மன்ற செயலாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்
- பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் தெரணி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 52). இவர் காரை கிராம ஊராட்சி மன்ற செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் வீட்டில் இருந்த போது தனது காதில் பூச்சு கொல்லி மருந்து ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இது குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேசிய அளவிலான ஜூடோ போட்டி
- பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியில் தேசிய அளவிலான ஜூடோ போட்டி
பெரம்பலூர்,
தேசிய அளவிலான ஜூடோ போட்டிக்கு, தமிழ்நாடு ஜூடோ அணிகளுக்கான போட்டியானது பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பள்ளியில் நடைபெற்றது. தமிழக அளவில் 684 மாணவ மாணவியர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். 14, 17, 19 வயது உட்பட்ட பிரிவில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்கள், தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு பள்ளி கல்வி துறையின் மூலமாக பங்குபெற அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இதன் துவக்க விழாவிற்கு ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். விழாவில் நிறுவன துணைத்தலைவர் விவேகானந்தன் முதல்வர் கலைச்செல்வி, பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் உடற்கல்வி இயக்குநர்கள் பாலசுப்ரமணியன், மணி, பாஸ்கர் மற்றும் பல்வேறு பள்ளியை சார்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் பொறுப்பாசிரியர்கள் மாணவ,மாணவியர்கள் கலந்துக்கொண்டனர்.
- கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் ஆதார், குடும்ப அட்டை எண் சமர்ப்பிக்க வேண்டும்
- பெரம்பலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அறிக்கை
பெரம்பலூர்,
பெரம்பலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;- எதிர்வரும் கூட்டுறவு சங்க தேர்தலை முன்னிட்டு கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகள், நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, கூட்டுறவு விற்பனை சங்கம்,பணியாளர் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஆகியவற்றில் உறுப்பினர்களாக உள்ளவர்களில் இது நாள் வரை தற்போதைய புகைப்படம், ஆதார் எண், குடும்ப அட்டை எண் மற்றும் கைபேசி எண் ஆகிய விவரங்களை வழங்காத உறுப்பினர்கள் ஒரு வார காலத்திற்குள் தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விவரங்களை தாங்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். அதனை உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்க தவறும் பட்சத்தில் தங்களது பெயர் அ. வகுப்பு உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படும். இதனால் தாங்கள் வாக்களிக்க இயலாத நிலை மற்றும் தேர்தலில் போட்டியிட இயலாத நிலை ஏற்படும். எனவே மேற்கண்ட வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது புகைப்படம்,ஆதார் எண், குடும்ப அட்டை எண் மற்றும் கைபேசி எண் ஆகிய விவரங்களை ஒரு வார காலத்திற்குள் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






