search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெரம்பலூரில் பெரியார் சிலையை சேதப்படுத்திய கூலித்தொழிலாளி கைது
    X

    பெரம்பலூரில் பெரியார் சிலையை சேதப்படுத்திய கூலித்தொழிலாளி கைது

    • சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.
    • அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா உதவியுடன், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய நுழைவாயில் அருகில் அ.தி.மு.க. சார்பில் ஒரே பீடத்தில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

    அதில் பெரியார் சிலை யின் இடது கை பெருவிரல் சேதப்படுத்தப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க.வினர், மாவட்ட செயலாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் தலைமை யில் மறியல் மற்றும் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினருடன், பெரம்பலூர் டி.எஸ்.பி. சுக்கிரன் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சிலையை சேதப்படுத்தியது குறித்து உரிய விசாரணை நடத்தி, மர்ம நபர் கைது செய்யப்படுவார் என்று உறுதி அளித்தார். சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சிலை சேதப்படுத்தியது தொடர்பாக, அங்கிருந்த கண்காணிப்பு கேமிரா உதவியுடன், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகன் அனுசந்திரன் (வயது 37) என்ற கூலித்தொழிலாளி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், குடிபோ தை யில் பெரியார் சிலை அருகே படுத்திருந்ததாகவும், பெரியாரின் சிலையில் உள்ள விரலை பிடித்து எந்திரிக்க முயற்சித்த போது, உடைந்து விட்டதாகவும், இதனால் தான் பயன்படுத்திய சிவப்பு துண்டை வைத்து, மறைத்து விட்டு சென்றதாகவும், ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை கைது செய்த போலீசார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×