என் மலர்
பெரம்பலூர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று மாலை 2.30 மணியளவில் நவகிரக மண்டபத்தில் எழுந்தருளி இருக்கும் ராகு கேது மற்றும் அனைத்து கிரக மூர்த்திகளுக்கும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.பின்னர் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதணை காண்பிக்கப்பட்டது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பரிகார ராசிக்காரர்கள் பரிகார பூஜைகளை செய்தனர். பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை கவுரிசங்கர் சிவாச்சாரியார் செய்து வைத்தார்.இதில் வர்த்த சங்க தலைவர் சாமிஇளங்கோவன், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ரமேஷ்பாண்டியன், சுரேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கோவிந்தராஜன், தர்மபரிபாலன சங்கத்தினர் செய்திருந்தனர்.
- பெரம்பலூரில் ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கிய புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது
- தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் தலைமையில் வெளியிடப்பட்டது
பெரம்பலூர்,
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் எமெர்ஜிங் இன்னோவேடிவ் ரிசெர்ச் இன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரைகளை உள்ளடக்கிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் தலைமை தாங்கினார். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன் முன்னிலை வகித்தார். இந்த புத்தக வெளியீட்டு விழாவி ல் வேந்தர் பேசியதாவது:- எமெர்ஜிங் இன்னோவேடிவ் ரிசெர்ச் இன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த புத்தகத்தை வெளி யிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி யும் பெருமையும் அடைகி றேன். நமது கல்லூரி அதிவேகமாக மாறிவரும் நவீன உலகத்தில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் திறன்களை வளர்த்து, அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது. பல புதிய படைப்புகளை உலகுக்கு அறிமுகப்படுத்தும், உயர்ந்த நோக்கில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது உருவாகியுள்ள இந்த புத்தகம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுக்கு மிக சிறந்த சான்றாகும்.
இந்த புத்தகமானது அறிவியல்,பொறியியல், தொழில்நுட்பம், மற்றும் மேலாண்மை துறைகளின் ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பாகும். இந்தத் தொகுப்பில் உண்மையிலேயே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இந்த பங்களிப்புகள் அனைத்தும் நம்முடைய தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழும குடும்பத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள். நம்முடைய ஆசிரியர்கள் கல்வியாளர்களாக மட்டுமல்லாமல், அந்தந்த துறைகளில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தி புதிய படைப்புகளை உருவாக்குவதில், அவர்களுக்கு உள்ள அசைக்க முடியாத ஈடுபாட்டை, இந்த புத்தகம் பிரதிபலிக்கிறது.
இந்நூலில் உள்ள ஆய்வுக் கட்டுரைகளை தொகுத்த தலைமை பதிப்பாசிரியர்கள் இளங்கோவன், சிவராமன், இணை பதிப்பாசிரியர்கள் அன்பு, கார்த்திகேயன், விசாலாட்சி மற்றும் தொழில்நுட்ப பதிப்பாசிரியர்கள் அருண் பிரசாத், சுரேஷ்குமார், நிரஞ்சனி ஆகியோரை மனதார பாராட்டுகிறேன். இந்த புத்தகத்தை சிறந்த முறையில் பிரசுரித்த ட்ருலைன் பப்ளிஷர் நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சிகளில் கல்லூரியின் முதல்வர் இளங்கோவன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். திறன் மேம்பாட்டு அதிகாரி சஷீதா, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வேல்முருகன், புலமுதல்வர் (அகாடெமிக்) அன்பரசன், புலமுதல்வர் (ஆராய்ச்சி) சிவராமன், புலமுதல்வர் (பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு) சண்முகசுந்தரம், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
- சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி
- பள்ளி மாணவி சாதனை
பெரம்பலூர்,
பெரம்பலூ ர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி மாணவி மத்திய அரசின் என்சிஇடி தேர்வில் வெற்றிப்பெற்று
அகில இந்திய அளவில் தரவரிசையில் இடம் பிடித்து சாதனை படைத்து ள்ளார். பெரம்பலூரை சேர்ந்த சக்திவேல் - ராஜேஸ்வரி தம்பதியின் மகள் மதுரா. இவர் சிறுவாச்சூர் ஆல்மை ட்டி வித்யாலயா பள்ளியில் 2016ம் ஆண்டு நடந்த ஒலிம்பியாட் தேர்வில் அதிக மார்க் பெற்று இலவச
கல்வியில் சேர்க்கை பெற்று 6ம்வகு ப் பு முதல் 1 2 ம் வகுப்பு வரை படித்தார். மத்திய அரசின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆ ப் டெக்னாலஜி (என்சிஇடி) 2023 ஆண்டு தேர்வினை எழுதிய மாணவி மதுரா அதிக மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் தரவரிசையில் இடம் பிடித்தார். இதையடுத்து மதுராவிற்கு ஒடிசா மாநி லத்தில் உள்ள மத்தி ய அரசின் கல்வி நிறுவனமான ஐஐடியில் ஐடிஇபி 4 ஆண்டு கோர்ஸ் கல்வி பயில இடம் கிடைத்து சேர்ந்துள்ளார். என்சிஇடி தேர்வில் அகில இந்திய அளவில் தர வரிசையில் இடம் பிடித்து சாதனை படைத்த மாணவி மதுராவை ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி த ாளாளர் ரா ம்கு மா ர் , அகடமி இயக்குநர் கார்த்திக், பள்ளி முதல்வர் தீபா ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர். பெரம்பலூர் மாவட்டத்தில் மத்தி ய அரசின் என்சிஇடி தேர்வில் வெற்றிப்பெற்று அகில இந்திய அளவில் தரவரி சையில் இடம் பிடித்த சாதனை படைத்த முதல் மாணவி என்பது குறிப்பி டத்தக்கது.
- மாநில அளவில் நடைபெற்ற கோ-கோ போட்டி
- ஹேன்ஸ் ரோவர் பப்ளிக் பள்ளி மாணவர்கள் வெண்கலப் பதக்கம்
Perambalur News
மாநில அளவில் 15 வயதுக்கு உட்பட்டோருக்கான கோ- கோ போட்டி கடந்த செப்டம்பர் மாதம் 26 மற்றும் 27 தேதிகளில் திருச்சியில் நடைபெற்றது.
ராக் சிட்டி சகோதையா நிறுவனம் நடத்திய கோ- கோ போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. இப்போட்டியானது திருச்சியில் உள்ள திருச்சி பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது.
இதில் ரோவர் பப்ளிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் கே.வரதராஜன், துணை மேலாண் தலைவர் ஜான் அசோக் வரதராஜன், புனித யோவான் சங்க அறக்கட்டளை அறங்காவலர் மகாலட்சுமி வரதராஜன் ஆகியோர் பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்வின்போது பள்ளி முதல்வர் ஜீன் ஜாக்லின், துணை முதல்வர் விஜயசாந்தி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
- சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்ட மாநாடு பெரம்பலூரில் நடைபெற்றது.
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
பெரம்பலூர் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்ட மாநாடு பெரம்பலூரில் நடைபெற்றது. இதில், சிறுபான்மை மக்களின் மீதான தாக்குதல்களை தடுத்து பாதுகாப்பு வழங்கிட வேண்டும். அரசியல் சட்டப்படியான மதசார்பின்மையை பாதுகாக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு சிறு கடன் வழங்க வேண்டும்.ஏழை சிறுபான்மை மக்களுக்கு புதிய பகுதிகளில் குடியிருப்புகள் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரளாவை போல் தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.நீதிக்கு புறம்பாக சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கு முன்வர வேண்டும்.சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமைகளும், வழிபாட்டு தலங்களும் தாக்குதலுக்கு உள்ளாவதை தடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- தொழிலாளி பலி
- மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
பெரம்பலூர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா பொன்னேரி கிராமத்தை சேர்ந்தவர் லிங்கமுத்து. இவருடைய மகன் விவேக் (வயது 32), தொழிலாளி. இவர் சென்னையில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக நாமக்கல் மாவட்டத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள தேவையூர் கிராமத்திற்கு நேற்று அதிகாலை 5 மணியளவில் வந்தார்.அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக சென்று சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விவேக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
- இந்தநிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நெய்குப்பை அரசு உயர்நிலைப்பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வெங்கடேசன் தலைமை தாங்கினார்.வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடாசலம், நுகர்வோர் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிரவன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளி மாணவ- மாணவிகளிடையே பேசினார்கள். அப்போது மாணவர்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் பற்றி தெரிந்து கொள்வதின் அவசியம், அதனை பொதுமக்களிடத்தில் தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வழி வகைகள் பற்றி எடுத்துரைத்தனர்.இந்தநிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.முன்னதாக பள்ளியின் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பச்சமுத்து வரவேற்றார். முடிவில் ஆசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார்.
- பெரம்பலூர் கொலை குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்
- எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி பரிந்துரையின்பேரில், கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், குளத்தூரை சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண்ணை கொலை செய்த வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 36) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எஸ்.பி ஷ்யாம்ளாதேவி பரிந்துரையின்பேரில் சுரேசை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்க கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். இந்த உத்தரவின்பேரில் போலீசார் சுரேசை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
- பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் கணினி துறையில் 2 திறன் மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டது
- இந்த மையத்தின் மூலம் பல வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்கு தேவையான பாடங்கள் கற்றுத்தரப்படும்
பெரம்பலூர்,
தமிழ்நாடு இன்பர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி அகாடமியின் (ஐ.சி.டி. அகாடமி ) சார்பில் செப்டம்பர் 30-ந் தேதி மதுரையில் பிரிட்ஜ் 2023-ன் 52-வது பதிப்பு மாநாடு நடைபெற்றது.டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான மனித மூலதனத்தை உருவாக்குதல் என்பதே இந்த கருத்தரங்கின் கருப்பொருள் ஆகும். எனவே இதை அடைவதற்கான சாத்தியக்கூறுகளை பற்றி விவாதிப்பதற்காக, கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்து இந்த மாநாடு நடத்தப்பட்டது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் கல்வி சேவையின் மூலம் சமூக வ ளர்ச்சிக்கு முக்கிய ப ங்காற்றும் மிக சிறந்த ஆளு மையாக விளங்குபவர். புதிய தொ ழில்முனைவோர்களையும், புதிய, சிறந்த கண்டுபி டிப்பாளர்களையும் உருவாக்குவதை இலட்சியமாக கொண்டு வாழ்ந்து வருபவர். இந்த மாநாட்டில் வேந்தரின் வழிகாட்டுதலின்படி, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் ஐ.சி.டி. அகாடமியின் பங்களிப்புடன் கணினி துறையில் 2 எக்சலென்ஸ் மையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த மையத்தின் மூலம் பல வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் மாணவர்களுக்கு தேவையான பாடங்கள் கற்றுத்தரப்படும். கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் பல பெரிய சர்வதேச கம்பெனிகளில் பணியில் சேர மாணவர்களின் திறன்களை வளர்ப்பதற்க்காக அமேசான் வெப் சர்வீசஸ் மூலம் வழங்கப்படும் "கிளவுட் ஆர்கிடெக்ட்டிங்" என்ற பயிற்சி வகுப்பும் மற்றும் மைக்ரோசாப்ட் மூலம் வழங்கப்படும் மைக்ரோசாப்ட் பவர் பி.ஐ. டேட்டா அனலிஸ்ட் என்ற பயிற்சி வகுப்பும் ஐ.சி.டி. அகடெமியின் பங்களிப்புடன் இந்த மையத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் சார்பாக, தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் இளங்கோவன் உட்பட சுமார் 15-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். தொழில் நிறுவங்களின் தலைமை நிர்வாக இயக்குனர்கள் , மனித வளமேம்பாட்டு அதிகாரிகள் மற்றும் மூத்த கல்வியாளர்கள்களின் பயனுள்ள உரைகளை கேட்க இந்த குழுவிற்கு வாய்ப்பு கிடைத்தது. மாணவர்களை மையமாகக் கொண்ட செயல்பாடுகளில், நாம் அனைவரும் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த கருத்தரங்கில் பேசிய அனைவரும் சுட்டிக்காட்டினர். மேலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தங்களுடைய திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
- பெரம்பலூரில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது
- வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியேஷன் சார்பில் எம்.ஜி.ஆர். விளை யாட்டு அரங்கில் 2 நாள்கள் நடந்த வாலிபால் போட்டி களில் வெற்றிபெற்ற அணி யினருக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
போட்டி தொடக்க விழா விற்கு வாலிபால் சங்க பெரம்பலூர் மாவட்ட தலைவர் பொறியாளர் பரமேஷ்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தி னராக எஸ்பி ஷ்யாம்ளா தேவி கலந்து கொண்டு போ ட்டியை தொடங்கிவைத்தார்.
மாவட்ட அளவில் ஆண் கள் மற்றும் பெண்களுக்கு தனித் தனியாக நடைபெற்ற இப்போட்டிகளில் 40 அணி களை சேர்ந்த 240 விளையா ட்டு வீரர்கள், வீராங்கணை கள் கலந்துகொண்டனர். இதில், பெண்களுக்கான போட்டியில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மாணவிகள் முதலிடமும், எஸ்.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2-வது இடமும், ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாண விகள் 3-வது இடமும் பெற்றனர்.ஆண்களுக்கான போட்டியில், எஸ்.ஆடுதுறை எவரெஸ்ட் அணியினர் முதலிடமும், தனலட்சுமி கல்விக் குழுமம் 2-வது இடமும், கொளக்காநத்தம் டி.ஜி.பி அணியினர் 3-வது இடமும் பெற்றனர்.இதனை தொடர்ந்து வெற்றிப்பெற்ற அணிக ளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. வாலிபால் சங்க பெரம்பலூர் மாவட்ட தலைவர் பொறியாளர் பரமேஷ்குமார் தலைமை வகித்தார், எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டிகளில் வெற்றி ப்பெற்ற அணிகளுக்கு அஸ்வின்ஸ் ஹோம் ஸ்வீட் அன்ட் ஸ்நாக்ஸ் நிறுவன தலைவர் கணேசன் பரிசு கோப்பை, ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
இதில் மாவட்ட விளை யாட்டு அலுவலர் லெனின், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர்கள் வல்லபன், செங்குட்டுவன், தி.மு.க. ஒன்றிய செயலாள ர்கள் ராஜ்குமார், மதியழகன், ராஜேந்திரன், துணை செயலாளர் சிவராஜ், இணை செயலாளர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக வாலிபால் சங்க மாவட்ட செயலாளர் அதியமான் வரவேற்றார். முடிவில் மாவட்ட துணை தலைவர் ஹரிபாஸ்கர் நன்றி கூறினார்.
- எளம்பலூர் காகன்னை ஈஸ்வரர் கோவிலில் ஆதினம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் வழிபாடு நடைபெற்றது
- மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் நடைபெற்றது
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலை கோவிலில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் மகா சமஸ்தானம் ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலி ங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு வழிபாடு செய்தார்.மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் எளம்பலூர் காக ன்னை ஈஸ்வரர் கோவில் மற்றும் அன்னை சித்தர் ராஜ்குமார் சுவா மிகள் மணிமண்டபத்திலும் புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையை யொட்டி நடந்த சிறப்பு வழிப்பாட்டில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் மகா சமஸ்தானம் ஞானகுரு சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் சிறப்பு வழிபாடு செய்து, உலக மக்கள் நன்மைக்காக தொடர்ந்து நடைபெற்ற கோமாதா பூஜையில் கலந்து கொண்டா ர். பின்னர் அன்னதான தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் மகா சித்த ர்கள் டிரஸ்ட் இணை நிறுவ னர் மாதாஜி ரோகிணி, தவயோகி தவசிநாதன் சுவாமிகள், மாதாஜி ராதா மற்றும் காமாட்சிபுரி ஆதீன த்தின் மெய்யன்பர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- காந்தி சிலைக்கு பெரம்பலூர் சுப்ரீம் லயன்ஸ் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
- 12 அடி உயர மரக்கன்றுகள் நடப்பட்டது
குன்னம்,
பெரம்பலூரில் காந்தி ஜெயந்தியைமுன்னிட்டு பழைய பேருந்து நிலைய த்தில் உள்ள காந்தி சிலைக்கு பெரம்பலூர் சுப்ரீம் லய ன்ஸ் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்த நிகழ்ச்சிக்கு சாசன த்தலைவர் என்ஜினியர் ராஜாராம் தலைமை தாங்கி னார். இதனைத் தொடர்ந்து சுந்தர் நகரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் 12 அடி உயர மரக்கன்றுகள் நடப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு ஜி இடி மாவட்ட தலைவர் என்ஜி னியர் ராஜாராம் தலைமை தாங்கினார், சுப்ரீம் லயன்ஸ் வட்டார தலைவர் என்ஜினி யர் ரவி முன்னிலை வகி த்தார். மண்டல ஒருங்கிணை ப்பாளர் ரமேஷ், பெரம்ப லூர் சுப்ரீம் லயன்ஸ் தலை வர் குணாளன், செயலாளர் விக்னேஷ், என்ஜினியர் சீனிவாசன், செயலாளர் வினோத்குமார், பொருளாளர் தினேஷ், ராஜா, சரவணன், கார்த்திக்,
பெரம்பலூர் அரிமா சங்கத்தை சேர்ந்த பாபு, சிவராஜ், சேவை பிரிவு செயலாளர் சுப்பிரமணி, பொருளாளர் காசி விஸ்வநாதன், முதல் நிலை தலைவர் முரளி, மரக்கன்றுகள் வழங்கி சிறப்பித்த வட்டார தலைவர் ென்ஜினியர் சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.






