search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தக வெளியீட்டு விழா
    X

    புத்தக வெளியீட்டு விழா

    • பெரம்பலூரில் ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கிய புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது
    • தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் தலைமையில் வெளியிடப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் எமெர்ஜிங் இன்னோவேடிவ் ரிசெர்ச் இன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற தலைப்பில் ஆராய்ச்சி கட்டுரைகளை உள்ளடக்கிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் தலைமை தாங்கினார். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக இணை வேந்தர் அனந்தலட்சுமி கதிரவன் முன்னிலை வகித்தார். இந்த புத்தக வெளியீட்டு விழாவி ல் வேந்தர் பேசியதாவது:- எமெர்ஜிங் இன்னோவேடிவ் ரிசெர்ச் இன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த புத்தகத்தை வெளி யிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி யும் பெருமையும் அடைகி றேன். நமது கல்லூரி அதிவேகமாக மாறிவரும் நவீன உலகத்தில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் திறன்களை வளர்த்து, அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது. பல புதிய படைப்புகளை உலகுக்கு அறிமுகப்படுத்தும், உயர்ந்த நோக்கில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது உருவாகியுள்ள இந்த புத்தகம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுக்கு மிக சிறந்த சான்றாகும்.

    இந்த புத்தகமானது அறிவியல்,பொறியியல், தொழில்நுட்பம், மற்றும் மேலாண்மை துறைகளின் ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பாகும். இந்தத் தொகுப்பில் உண்மையிலேயே குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், இந்த பங்களிப்புகள் அனைத்தும் நம்முடைய தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழும குடும்பத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள். நம்முடைய ஆசிரியர்கள் கல்வியாளர்களாக மட்டுமல்லாமல், அந்தந்த துறைகளில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தி புதிய படைப்புகளை உருவாக்குவதில், அவர்களுக்கு உள்ள அசைக்க முடியாத ஈடுபாட்டை, இந்த புத்தகம் பிரதிபலிக்கிறது.

    இந்நூலில் உள்ள ஆய்வுக் கட்டுரைகளை தொகுத்த தலைமை பதிப்பாசிரியர்கள் இளங்கோவன், சிவராமன், இணை பதிப்பாசிரியர்கள் அன்பு, கார்த்திகேயன், விசாலாட்சி மற்றும் தொழில்நுட்ப பதிப்பாசிரியர்கள் அருண் பிரசாத், சுரேஷ்குமார், நிரஞ்சனி ஆகியோரை மனதார பாராட்டுகிறேன். இந்த புத்தகத்தை சிறந்த முறையில் பிரசுரித்த ட்ருலைன் பப்ளிஷர் நிறுவனத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் கல்லூரியின் முதல்வர் இளங்கோவன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். திறன் மேம்பாட்டு அதிகாரி சஷீதா, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வேல்முருகன், புலமுதல்வர் (அகாடெமிக்) அன்பரசன், புலமுதல்வர் (ஆராய்ச்சி) சிவராமன், புலமுதல்வர் (பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு) சண்முகசுந்தரம், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×