என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெரம்பலூரில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது
    • 28 கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைத்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில் போலீசார் பொதுமக்களிடம் இருந்து பெற்ற மொத்தம் 28 கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைத்தனர். ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் நடைபெறும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் மாவட்ட போலீஸ் அலுவலகம் வருவதற்கு ஏதுவாக போலீசார் சார்பில் பாலக்கரையில் இருந்து போலீஸ் அலுவலகத்திற்கும், மீண்டும் போலீஸ் அலுவலகத்திலிருந்து புதிய பஸ் நிலையம் செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது, என்று துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தெரிவித்தார்.

    • கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
    • உடலை கைப்பற்றி மருவத்தூர் போலீசார் விசாரணை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி பழனியம்மாள்(வயது 55). இவர் தனது கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று பழனியம்மாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மருவத்தூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பொற்செல்வன் விசாரணை நடத்தி வருகிறார்.

    • பெரம்பலூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • சென்னையில் செவிலியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணிநியமனம் செய்யப்பட்டுள்ள செவிலியர்கள் சங்கத்தினர் தங்களை பணிநிரந்தரம் செய்து பணிவரன்முறை செய்ய வலியுறுத்தி சென்னையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது அவர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்து பெரம்பலூர் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் செவிலியர்கள் சங்கத்தினருடன் இணைந்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரிஅனந்தன் தலைமை தாங்கினார். இதில் எம்.ஆர்.பி. செவிலியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆனந்த், பொருளாளர் மஞ்சுளா மற்றும் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மலேசியா பல்கலைக்கழகத்திற்கு பயணம் மேற்கொள்கின்றனர்
    • சர்வதேச மாணவர் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மலேசியா செல்கின்றனர்

    பெரம்பலூர்,

    சர்வதேச மாணவர் பரிமாற்ற திட்டத்தின் கீழ் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மலேசியா மல்டிமீடியா பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மாணவர்களை வாழ்த்தி, வழியனுப்பும் விழா நடைபெற்றது.பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து, மாணவர்களை வாழ்த்தி, சர்வதேச மாணவர் பரிமாற்ற திட்டத்தின் பயன்கள் குறித்து பேசினார்.சர்வதேச மாணவர் பரிமாற்ற திட்டத்தின் கீழ் நமது தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பயிலும் 17 மாணவர்கள் மற்றும் 3 மாணவிகளும் கல்லூரி முதல்வர் இளங்கோவன், புல முதல்வர் அன்பரசன் ஆகியோர் மலேசியா மல்டி மீடியா பல்கலைக் கழகத்திற்கு செல்கின்றனர்.இவர்கள் அனைவரும் வருகின்ற 14 -ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மலேசியாவில் இந்த திட்டத்தின் கீழ் நடத்தப்படும் நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர்.

    இந்த் திட்டத்தின் கீழ் செல்லும் மாணவர்களுக்கு செய்முறை அறிவு மற்றும் படைப்பாற்றலை அதிகரிக்க உதவும், உலகம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்க உதவும்.தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரிக்கும் மலேசியா மல்டிமீடியா பல்கலைக்கழகத்திற்கும் இடையே வருகின்ற 16-ந் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது. என தெரிவித்தார்.நிகழ்ச்சியின் போது கல்லூரி முதல்வர் இளங்கோவன், திறன் மேம்பாட்டு அதிகாரி சஷீதா, டீன்கள் அன்பரசன், சிவராமன், சண்முகசுந்தரம் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வேல்முருகன், மற்றும் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூரில், பேரளியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை முதல் மாலை வரை மின்சாரம் நிறுததப்படுவதாக அறிவிப்பு

    பெரம்பலூர், அக்.11-

    பெரம்பலூர் மற்றும் பேரளி பகுதிகளில் நாளை (12ம்தேதி) மின் தடை செய்யப்படுகிறது. இது குறித்து மின் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

    பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட பேரளி துணை மின் நிலையத்தில் நாளை (12-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும்பகுதிகளான பேரளி, மருவத்தூர், ஒதியம், பனங்கூர், கல்பாடி, அசூர், சித்தளி, பீல்பாடி, குரும்பாபாளையம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கீ.புதூர், வாலிகண்டபுரம் மற்றும் செங்குணம் ஆகிய கிராமிய பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்

    இதே போல பெரம்பலூர் மின் கோட்டம், பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான பெரம்பலூர், துறைமங்கலம், நான்குரோடு, அரணாரை மற்றும் கிராமிய பகுதிகளான எளம்பலூர் இந்திரா நகர், தண்ணீர்பந்தல், காவலர் குடியிருப்பு, சமத்துவபுரம், அருமடல் ஆகிய பகுதிகளில் நாளை(12-ந்தேதி) காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் இருக்காது. 

    • சங்கிலி பறிப்பு வழக்கில் வாலிபருக்கு பெரம்பலூர் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது
    • மேலும் ரூ.1,000 அபராதமும் விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2 நீதிபதி சங்கீதாசேகர் உத்தரவு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இலுப்பைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராணி. இவர் சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே இடையக்குறிச்சியை சோ்ந்த செந்தில்வேலின் மகன் புரட்சிதமிழன் (வயது 25) என்பவர் ராணியின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலி சங்கிலியை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புரட்சி தமிழனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பான வழக்கு பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2-ல் நடந்து கொண்டிருந்தது. நீதிமன்ற விசாரணையில் இருந்த மேற்படி வழக்கானது விசாரணை முடிக்கப்பட்டு நேற்று குற்றம் நிரூபிக்கப்பட்டதால் புரட்சி தமிழனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2 நீதிபதி சங்கீதாசேகர் உத்தரவிட்டார். மேற்படி சங்கிலி பறிப்பு வழக்கில் சிறப்பாக செயல்பட்ட பாடாலூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் கோர்ட்டு போலீஸ் முத்தையன் ஆகியோருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டு தெரிவித்தார்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட உள்ளது
    • மாவட்ட கலெக்டர் கலெக்டர் கற்பகம் அழைப்பு

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு அரசு பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில் முனைவோருக்கென பிரத்யேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் விரிவாக்கம் செய்ய விரும்பும் தொழில் முனைவோர் நேரடி வேளாண்மை தவிர்த்த உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்.மொத்த திட்டத்தொகையில் 65 சதவீதம் வங்கி கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35 சதவீதம் அரசின் பங்காக மானியம் வழங்கப்படும். அதிகபட்சம் 1.50 கோடிக்கு மிகாமல் முதலீட்டு மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 6 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msmetamilnadu.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 503 மனுக்கள் பெறப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வருவாய் துறையின் சார்பில் 3 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பெற்றோரின் ஓய்வூதியத்தினை தொடர்ந்து பெறும் வகையில் பாதுகாவலர் நியமன சான்றிதழ், காதொலி கருவி ஆகியவற்றையும் கலெக்டர் கற்பகம் வழங்கினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 503 மனுக்கள் பெறப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அருளாளன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கார்த்திக்கேயன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி மற்றும் அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஒகளூர் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
    • கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்றது

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள ஒகளூர் கிராமத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மருத்துவ அணியின் சார்பாக மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்த கொதிப்பு நோய் கண்டறிதல் , புற்றுநோய் கண்டறிதல் மற்றும் கண் பரிசோதனை, கண்புரை கண்டறிதல் ,மகப்பேறுமருத்துவம் ,குழந்தைகள் நலம் ,தோல் நோய் மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை மருத்துவம் மற்றும் பொது அறுவை சிகிச்சை , காது ,மூக்கு ,தொண்டை மருத்துவம் என இந்த இலவச மருத்துவ முகாமில் பரிசோதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது .இம்முகாம் ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் மதியழகன், மாநில ஆதிதிராவிட துணைச் செயலாளர் பாதுகாப்பு மாவட்ட அமைப்பாளர் பிரபாகரன், ஒன்றிய பெருந்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, ஒன்றிய கவுன்சிலர்கள் குடியரசு, கருப்பையா ,கலந்து கொண்டனர்.மற்றும் கட்சி நிர்வாகிகள் , டாக்டர்கள் மாநிலத் துணைச் செயலாளர் மண்டல பொறுப்பாளருமான வல்லபன், மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி ,மாவட்ட தலைவர் ஜெயலட்சுமி, குன்னம் தொகுதி அமைப்பாளர் சுதாகர் ,பெரம்பலூர் தொகுதி அமைப்பாளர் சிலம்பரசன் ,மாவட்ட துணை அமைப்பாளர் அறிவு ஸ்டாலின் தொகுதி துணை அமைப்பாளர் சோலைமுத்து பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.இந்த இலவச முகாமின் மூலம் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று சென்றார்கள் .

    • றப்பு பொருளாதார மண்டலம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்கவேண்டும் என பாமக வலியுறுத்தி உள்ளது
    • பெரம்பலூர் மாவட்ட பா.ம.க. பொதுக்குழு தீர்மானம்

     பெரம்பலூர்.

    பெரம்பலூரில் மாவட்ட பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பி னர்கள் ராஜேந்திரன், அன்பு செல்வன், கண்ண பிரான் , தங்கதுரை ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.சிறப்பு அழைப்பாளராக வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி கலந்து கொண்டு பேசினார்.கூட்டத்தில் வேப்பந்தட்டையில் 15 ஆண்டுகளாக இயங்கி வரும் பருத்தி ஆராய்ச்சி மையத்தை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்படுத்த அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்த நி லங்கள் கையகப்படுத்தி 15 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை.எனவே கையகப்ப டுத்தப்பட்ட விவசாய நிலங்களை விவசாயிகளிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .இதில் கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட தலைவர் செல்வராசு வரவேற்றார். முடிவில் நகர செயலாளர் இமயவர்மன் நன்றி கூறினார்.    

    • பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிழ்ச்செல்வன் தலைமையில் நடந்தது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அருணாச்சலம், முன்னாள் எம்.பி.க்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்.எல்.ஏ. பூவைசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து பேசியதாவது:-வருகிற பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகப்படியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து பெரம்பலூரை அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாக மாற்றி காட்டுவோம். இந்த வெற்றியை பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிச்சாமியிடம் சமர்ப்பிப்பது தான் நமது முதல் இலக்கு.தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இப்போதே பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். இளம்பெண்கள் பாசறை அமைப்பில் அதிகளவில் பெண்களை உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் குணசீலன், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், கர்ணன், சிவப்பிரகாசம், செல்வகுமார், மாவட்ட நிர்வாகிகள் ராஜாராம், வீரபாண்டியன், ஏ.கே. ராஜேந்திரன், ராணி மற்றும் ஏகேஎன் அசோகன், கல்பாடி கூட்டுறவு வங்கி தலைவர் முத்தமிழ்செல்வன், கல்பாடி ஊராட்சி துணை தலைவர் புஷ்பராஜ், துறைமங்கலம் சந்திரமோகன், குன்னம் ரெங்கநாதன், வக்கீல்கள் கணேசன், ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெண் குழந்தைகள் காப்போம் திட்ட விழிப்புணர்வு பயண குழுவினருக்கு பெரம்பலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது
    • கன்னியாகுமரி முதல் குஜராத் வரை இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பயணம் நடைபெறுகிறது

    பெரம்பலூர்,

    பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி முதல் குஜராத் வரை இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ரிசர்வ் படையின் வீராங்கனைகள் நேற்று பெரம்பலூர் வந்தனர்.பெரம்பலுார் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரியில் வளாகத்தில் நடந்த வரவேற்பு நிகழச்சிக்கு ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். டி.ஆர்.ஓ. வடிவேல்பிரபு கொடியசைத்து வைத்து வழியனுப்பி வைத்தார்.நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. மதியழகன், கல்லூரி செயலாளர் விவேகானந்தன், இந்திய ரிசர்வ் படையின் .டி.எஸ்.பி. கார்த்திகேயன், ரோட்டரி சங்க பெரம்பலூர் மாவட்ட கவர்னர் கார்த்திகேயன், ஊர்க்காவல் படை மண்டல தளபதி அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×