என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
    X

    கொலை குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

    • பெரம்பலூர் கொலை குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • எஸ்.பி. ஷ்யாம்ளாதேவி பரிந்துரையின்பேரில், கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், குளத்தூரை சேர்ந்த மாரியம்மாள் என்ற பெண்ணை கொலை செய்த வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 36) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எஸ்.பி ஷ்யாம்ளாதேவி பரிந்துரையின்பேரில் சுரேசை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்க கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். இந்த உத்தரவின்பேரில் போலீசார் சுரேசை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×