search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி மாணவி சாதனை
    X

    சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி மாணவி சாதனை

    • சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பள்ளி
    • பள்ளி மாணவி சாதனை

    பெரம்பலூர்,

    பெரம்பலூ ர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி மாணவி மத்திய அரசின் என்சிஇடி தேர்வில் வெற்றிப்பெற்று

    அகில இந்திய அளவில் தரவரிசையில் இடம் பிடித்து சாதனை படைத்து ள்ளார். பெரம்பலூரை சேர்ந்த சக்திவேல் - ராஜேஸ்வரி தம்பதியின் மகள் மதுரா. இவர் சிறுவாச்சூர் ஆல்மை ட்டி வித்யாலயா பள்ளியில் 2016ம் ஆண்டு நடந்த ஒலிம்பியாட் தேர்வில் அதிக மார்க் பெற்று இலவச

    கல்வியில் சேர்க்கை பெற்று 6ம்வகு ப் பு முதல் 1 2 ம் வகுப்பு வரை படித்தார். மத்திய அரசின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆ ப் டெக்னாலஜி (என்சிஇடி) 2023 ஆண்டு தேர்வினை எழுதிய மாணவி மதுரா அதிக மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் தரவரிசையில் இடம் பிடித்தார். இதையடுத்து மதுராவிற்கு ஒடிசா மாநி லத்தில் உள்ள மத்தி ய அரசின் கல்வி நிறுவனமான ஐஐடியில் ஐடிஇபி 4 ஆண்டு கோர்ஸ் கல்வி பயில இடம் கிடைத்து சேர்ந்துள்ளார். என்சிஇடி தேர்வில் அகில இந்திய அளவில் தர வரிசையில் இடம் பிடித்து சாதனை படைத்த மாணவி மதுராவை ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி த ாளாளர் ரா ம்கு மா ர் , அகடமி இயக்குநர் கார்த்திக், பள்ளி முதல்வர் தீபா ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர். பெரம்பலூர் மாவட்டத்தில் மத்தி ய அரசின் என்சிஇடி தேர்வில் வெற்றிப்பெற்று அகில இந்திய அளவில் தரவரி சையில் இடம் பிடித்த சாதனை படைத்த முதல் மாணவி என்பது குறிப்பி டத்தக்கது.

    Next Story
    ×