என் மலர்
பெரம்பலூர்
- தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடைபெற்றது
- வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமம் சார்பில் ஹோலி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து பேசுகையில், ஹோலி பண்டிகையின்போது சாதி, மதம், இனம், மொழி, நிறம், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் சமம் என்ற மகத்துவம் ஓங்கி நிற்பது இந்த விழாவின் சிறப்பாகும். நமது கல்விக்குழுமத்தில் பயிலும் வட மாநில மாணவர்களுடன் இணைந்து நமது மாணவர்கள் சகோதர மனப்பான்மையுடன் இந்த விழாவை கொண்டாடுவது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.இவ்விழாவில் கலர் பொடிகளை தூவி மகிழ்வார்கள். வண்ணங்கள் ஆயிர்வேத மூலிகைகளான வேப்பிலை, குங்குமம், மஞ்சள், வில்வம், போன்றவற்றால் செய்யபடுவதால் மருத்துவ நன்மைகள் கிடைக்கிறது. அதனால் அனைவரும் இயற்கையான வண்ண பொடிகளை கொண்டு ஹோலியை கொண்டாட வேண்டும் என தெரிவித்தார்.ஹோலி பண்டிகையையொட்டி ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கலர் பொடிகளைத் தூவியும் திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். விழாவில் 200 மேற்பட்ட வடமாநில மாணவர்கள் மற்றும் முதல்வர்கள், துணை முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- 11 மனுக்களுக்கு மீது உடனடி தீர்வு காணப்பட்டது
- சிறப்பு விசாரணை முகாமிற்கு பொதுமக்கள் வருவதற்காக சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி தலைமையில் நேற்று நடந்தது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், பாண்டியன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தங்கவேல், ஜனனி பிரியா ஆகியோர்பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். மேலும் முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாரும், சிறப்பு பிரிவு போலீசாரும் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு மனு விசாரணை முகாம் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 36 மனுக்களில், 11 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம், முகாமில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு ஏதுவாக போலீசார் சார்பாக பாலக்கரையில் இருந்து மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கும், மீண்டும் போலீஸ் அலுவலகத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்வதற்கும் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது, என்று போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி தெரிவித்தார்
- அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணம், சான்றிதழ் வாங்கி மோசடி செய்தவர் மீது புகார்
- கார் தந்தவர்கள் மீதே போலீசார் வழக்கு பதிந்துள்ளதாக எஸ்.பி.யிடம் மனு மூலம் குற்றச்சாட்டு
பெரம்பலூர்,
சேலம் மாவட்டம், தலைவாசல் தாலுகா, தெற்கு தியாகனூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த ஆறுமுகம். இவரது மகள் நித்யா(வயது 32). எம்.எஸ்.சி., பி.எட். படித்துள்ள இவர் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவியை நேற்று சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், அரசு வேலைக்கு முயற்சி செய்து வரும் எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. கடந்த 2018-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பெருநிலா கிராமத்தை சேர்ந்த ஒருவர் திருமண தரகர் என்று கூறி எங்கள் குடும்பத்தில் அறிமுகம் ஆனார். மேலும் அவர் எனக்கு திருமணம் ஆக வேண்டும் என்றால் அரசு வேலை வாங்கினால் தான் திருமணம் நடக்கும் என்று கூறி, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி எனது பெற்றோரிடம் ரூ.19 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் என்னுடைய கல்வி சான்றிதழை வாங்கிக்கொண்டார். ஆனால் அவர் இதுவரை அரசு வேலை வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும், கல்வி சான்றிதழையும் திருப்பி தரவில்லை. இது தொடர்பாக எனது குடும்பத்தினர் அவரிடம் கேட்டதற்கு, அவரும், அவரது மனைவியும் சேர்ந்து எனது தந்தை, தாய், தம்பியை தாக்கினர். இது தொடர்பாக எனது தாய் கொடுத்த புகாரின்பேரில், அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் போலீசார் எங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களிடம் இருந்து பணத்தையும், கல்வி சான்றிதழையும் திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக கை.களத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பக்கவாதம் காரணமாக மனமுடைந்து துாக்கிட்டுகொண்டார்
- உடலை கைப்பற்றி பாடாலூர் போலீசார் விசாரணை
பெரம்பலூர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூரை சேர்ந்தவர் தனபால்(வயது 60). இவருக்கு கடந்த ஆண்டு பக்கவாதம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சரியாகவில்லையாம். இதனால் மனமுடைந்த தனபால் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விஷம் குடித்த வாலிபர் உயிரிழந்தார்.
- மது குடித்துவிட்டு ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வரகூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகன் பாலமுருகன்(வயது 20). இவர் ஐ.டி.ஐ. படித்துவிட்டு ஓசூரில் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு வந்த பாலமுருகன் மீண்டும் வேலைக்கு செல்லாமல், மது குடித்துவிட்டு ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த பாலமுருகன் வயலுக்கு சென்று அங்கிருந்த களைக்கொல்லி பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்துள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் உடனடியாக விரைந்து சென்று பாலமுருகனை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து வந்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
- ஊராட்சிகளில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் போலீசார் இடையேயான கலந்தாய்வு கூட்டம் பெரம்பலூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் ஊராட்சிகளில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். கஞ்சா, சாராயம் போன்ற போதைப்பொருட்கள் விற்பவர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும். மாவட்டத்தில் தற்கொலை சம்பவங்கள் நடக்காத வகையில் கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கிராமப்பகுதிகளில் தங்களது குடும்பத்தில் குழந்தைகள் இருந்தால் நீர்நிலைகள் அல்லது தண்ணீர் தேங்கிய பகுதிகளில் குளிக்கவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ தனியாக அனுப்பக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
- நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது
- விவசாயிகளின் ேகாரிக்கையின்படி நடைபெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள கிராமங்களில் பெரும்பாலான பகுதிகளில் நெல் சாகுபடி அதிகமாக செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து அறுவடை செய்யப்படும் நெல்லை இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு வாங்குவதோடு, பல்வேறு மோசடிகளிலும் ஈடுபடுகின்றனர். இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள், தங்கள் பகுதிகளில் விளையும் நெல்மணிகளை தமிழக அரசின் சார்பில் நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் பல்வேறு கிராமங்களில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. அதன்படி பள்ளகாளிங்கராய நல்லூரில் அமைக்கப்பட்ட கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
- அரசு பஸ் கண்டக்டரின் வீடு தீப்பற்றி எரிந்தது.
- மின்கசிவு காரணமாக தீப்பற்றி இருக்கலாம்
பெரம்பலூர்
பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பிரதான சாலையில் வசித்து வருபவர் கலியபெருமாள்(வயது 52). இவர் பெரம்பலூர்-அரியலூர் இடையே சென்று வரும் அரசு பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவியும், கவிமணி, காவியா என்ற 2 மகள்களும் உள்ளனர். கலியபெருமாள் நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டார். சுமதி, தனது பேரக்குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், டாக்டரிடம் காண்பிக்க பெரம்பலூருக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் கலியபெருமாளின் வீட்டில் தீப்பற்றி புகை வெளியேறியது. இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதற்கிைடயே கலியபெருமாள் வீட்டின் சமையல் அறை முழுவதும் எரிந்ததில், அங்கிருந்த அடுப்பு மற்றும் சமையல் பாத்திரங்கள் நாசமாயின. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் புறநகர் துறைமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். சென்னையில் போக்குவரத்து பணிமனைகளில் உள்ள ஏறத்தாழ ஆயிரம் அரசு பஸ்களை தனியார் வசம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்து இருப்பதை கைவிட வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். அவுட்சோர்சிங் முறையில் பணி வழங்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
- தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
- கைது செய்யப்பட்டவரில் ஒருவர் ரவுடி
பெரம்பலூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் செல்வா என்கிற நீலகண்டன் (வயது 28). ரவுடியான இவர் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் டாஸ்மாக் கடை அருகே அவரது நண்பர்களான திருவள்ளுவர் தெருவை சேர்ந்த சரவணன் (22), இந்திரா நகரை சேர்ந்த சீனி என்கிற கவுதம் (22), செஞ்சேரி தெற்கு தெருவை சேர்ந்த ராகுல் (21) மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், அவர்கள் நீலகண்டனை தாக்கினர்.இதில் 18 வயது சிறுவன் பாட்டிலால் தாக்கியதில் நீலகண்டனின் நெற்றியில் காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் தப்பி சென்றனர். காயமடைந்த நீலகண்டன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று நேற்று பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் வந்து மேற்கண்ட சம்பவம் தொடர்பாக புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், கவுதம், ராகுல் மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சரவணனும் ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆடுதுறையில் மாசிமகத்தையொட்டி ஏராளமானவர்கள் குவிந்தனர்
- குற்றம் பொறுத்தவர் அபராதரட்சகர் கோவிலில் சாமி கும்பிட்டு சென்றனர்
அகரம்சீகூர்,
அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் சு.ஆடுதுறை ஊராட்சியில் குற்றம் பொறுத்தவர் அபராதரட்சகர் கோவிலில் மாசிமகத்சுதை முன்னிட்டு.ஆடுதுறை சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் இறந்து போன தனது பெற்றோர்கள் மற்றும் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வெள்ளாற்றங்கரையில் உள்ள நீர் நிலைகளில் பொதுமக்கள் திரளானோர் வரிசையாக அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பின்பு சாமி தரிசனம் செய்தனர். இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தனிமையின் கொடுமையால் பரிதாபம்
- உடலை கைப்பற்றி பாடாலூர் போலீசார் விசாரணை
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது75). இவரின் மனைவி செல்லம்மாள். இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் கணேசன் தனது அக்காள் மகனை, தனது மகனாக பாவித்து அன்பு செய்து வந்துள்ளார். இதன் காரணமாக அவர் தனது சொத்துக்களை தனது அக்காள் மகனுக்கு எழுதி வைத்து உள்ளார்.இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பாக மனைவி இறந்து விட்டார். சொத்துக்கள் கைமாறிய உடன் மகனாக நினைத்த, அக்காள் மகனும் இவரை கண்டு கொள்ளவில்லை. இதனால் தனிமையில் கணேசன் வாழ்ந்து வந்துள்ளார். துணைக்கு யாருமற்ற நிலையாலும், முதுமையின் காரணமாகவும் உணவிற்கே அவர் கஷ்டப்பட்டு வந்துள்ளார். தனிமை அவரை தொடர்ந்து வாட்டியதால் மனமுடைந்த அவர் அப்பகுதியில் மனோகரன் என்பருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள பாறை அருகே மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பாடாலூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






