என் மலர்
நீலகிரி
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அங்கு மளிகை, காய்கறி கடைகள் கிடையாது. இதன் காரணமாக அவர்கள் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூடலூருக்கு வந்து செல்ல வேண்டி உள்ளது. இதற்கு அரசு பஸ்களை பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ஓவேலி பேரூராட்சி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூடலூருக்கு நடந்து வர வேண்டி உள்ளது. மேலும் வனப்பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களை கடந்து தலைச்சுமையாக அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு கொண்டு செல்கின்றனர். இதுகுறித்து ஓவேலி பகுதி மக்கள் கூறியதாவது:-
இங்கு பெரும்பாலும் விவசாயிகள், தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகிறோம். தோட்ட நிர்வாகங்கள் வங்கி கணக்கில் சம்பளம் செலுத்துகின்றனர். ஆனால் எங்கள் பேரூராட்சியில் ஏ.டி.எம். வசதி கிடையாது. மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகள் கிடையாது. அதற்கு கூடலூருக்கு சென்று வர வேண்டி உள்ளது. தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், அரசு பஸ்கள் ஓடவில்லை. மேலும் வாடகை ஆட்டோக்கள், ஜீப்புகளும் இயக்கப்படவில்லை. இதனால் கூடலூருக்கு நடந்து சென்று வர வேண்டி உள்ளது.
சில நேரங்களில் வனவிலங்குகள் தாக்கும் அபாயமும் நிலவுகிறது. எனவே தோட்ட நிர்வாகங்கள் எங்களது சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும். மேலும் அத்தியாவசிய பொருட்கள் எங்கள் பேரூராட்சி பகுதியிலேயே கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள சில்வர் கிளவுட், கோக்கால், மேல்கூடலூர், கெவிப்பாரா, கோத்தர்வயல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று காயத்துடன் சுற்றி திரிகிறது.
அந்த யானை குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பயிர்கள் மற்றும் வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்த வனத்துறையினர் கால் நடை டாக்டர் பரிந்துரைப்படி பழங்களுக்குள் மாத்திரையை வைத்து யானை வரும் பாதையில் பழங்களை போட்டனர்.
யானையும் அந்த பழங்களை சாப்பிட்டதால் அதில் உள்ள மருந்துகள் மூலம் யானை குணமடைந்து வந்தது. இந்த நிலையில் கோவையில் இருந்து கால்நடை டாக்டர் மனோகரன், சுகுமாறன் தலைமையிலான குழுவினர் காட்டு யானையின் உடலை ஆய்வு செய்ய ஏழுமுறம் பகுதிக்கு சென்றனர். அங்கு நின்று காட்டு யானையை டாக்டர் குழுவினர் மற்றும் வனத்துறையினர் பார்வையிட்டனர்.
அப்போது திடீரென ஆக்ரோஷமான காட்டு யானை அவர்களை துரத்தி வந்தது. இதை பார்த்து அதிர்ச்சியான டாக்டர் குழுவினர் மற்றும் வனத்துறையினர் சிதறி அடித்து ஒடினர்.
பின்னர் யானை வனப் பகுதிக்குள் சென்றது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வனச்சரகர் ராம கிருஷ்ணன் கூறுகையில், தொடர் சிகிச்சை மூலம் யானை குணமடைந்துள்ளது. தொடர்ந்து மருத்துவ குழுவினர் ஆலோசனைப்படி பழங்களில் மாத்திரை வைத்து யானைக்கு கொடுத்து வருகிறோம். திடீரென யானை துரத்தியால் அனைவரும் அதிர்சியடைந்தோம் என்றார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதில் மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க நேர கட்டுப்பாட்டுடன் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் அத்தியாவசிய தேவைகளை தவிர பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
ஆனால் ஊரடங்கை மீறி அத்தியாவசிய தேவைகள் இன்றி வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வருவது நீலகிரி மாவட்டம் கூடலூரில் அதிகரித்து வருகிறது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள் தவிர மற்ற கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன.
இது தவிர ஆட்டோக்களும் இயக்கப்பட்டது. சாலைகளில் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் அதிகளவில் செல்வதை காண முடிந்தது. கூடலூர்-கோழிக்கோடு சாலையின் இருபுறமும் வரிசையாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. நகருக்குள் குழந்தைகளுடன் பொதுமக்கள் நடந்து செல்லும் அலட்சியத்தையும் காண முடிந்தது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, கொரோனா வைரசின் தாக்கத்தை பலர் உணர்ந்ததாக தெரியவில்லை. போலீசாரின் கண்காணிப்பையும் மீறி சிலர் தேவையின்றி சுற்றுகிறார்கள். இதை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் நகர்பகுதிகளில் பொதுமக்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களைஅந்தந்த கிராமங்களில் விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதை சாதகமாக்கிய சில வியாபாரிகள், காய்கறி வகைகளை மொத்தமாக வாங்கி, வாகனங்களில் கொண்டு வந்து அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். மருந்தகங்களிலும், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், தலைவலி மாத்திரைகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக, மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தது.
இதையடுத்து இந்த புகார் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மேற்பார்வைக்கு சென்றது. இது குறித்து அவர் கூறியதாவது:-
எல்லா அத்தியாவசிய பொருட்களும் தேவையான அளவுக்கு இருப்பு உள்ளது. இதனால் எந்த பொருளையும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. இதை மீறியும் கூடுதல் விலைக்கு யாராவது அத்தியாவசிய பொருட்களை விற்றால், 1077 என்ற எண்ணுக்கு, மக்கள் புகார் தெரிவிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
குன்னூர்:
மதுரை மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் சம்பத்குமார்(வயது 20). இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த ராணுவ தேர்வில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் பயிற்சி பெற்று வந்தார்.
இதற்கிடையே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ராணுவ முகாம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு, பயிற்சி பெற்று வந்த இளம் ராணுவ வீரர்கள் முகாமை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதனால் வெளியே செல்ல முடியாததாலும், ஊருக்கும் செல்ல முடியாததால் சம்பத்குமார் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தடையை மீறி முகாமை விட்டு வெளியேறினார். இதனால் அதிர்ச்சியான அதிகாரிகள் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். இதற்கிடையில் நேற்று குன்னூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலை பிளாக் பிரிட்ஜ் அருகே ஒரு மரத்தில் சம்பத்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ராணுவ அதிகாரிகள், வெலிங்டன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, உடலை கைப்பற்றி குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் சம்பத்குமார்(வயது 20). இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த ராணுவ தேர்வில் வெற்றி பெற்றார். இதையடுத்து நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் பயிற்சி பெற்று வந்தார்.
இதற்கிடையே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ராணுவ முகாம் முழுவதும் சீல் வைக்கப்பட்டு, பயிற்சி பெற்று வந்த இளம் ராணுவ வீரர்கள் முகாமை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் வெளியே செல்ல முடியாமல் சம்பத்குமார் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தடையை மீறி முகாமை விட்டு வெளியேறினார். இதை அறிந்த அதிகாரிகள் அவரை தேடி வந்தனர். இதற்கிடையில் நேற்று குன்னூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலை பிளாக் பிரிட்ஜ் அருகே ஒரு மரத்தில் சம்பத்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ராணுவ அதிகாரிகள், வெலிங்டன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, உடலை கைப்பற்றி குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எதுமை கண்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது50). இவரது மனைவி சுமித்ரா (43). இவர்களது மகள் நந்தினி (18). 10-ம் வகுப்பு வரை படித்துள்ள நந்தினி தனது தாய் சுமித்ராவுடன் கூலி வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று அதிகாலை தனது தாயுடன் எப்பநாடு பகுதியில் உள்ள தோட்டத்திற்கு கேரட் அறுவடை செய்ய சென்றார்.
பின்னர் அறுவடை முடிந்த பின்னர் கேரட்கள் மூட்டைகளாக கட்டப்பட்டு பாலாடாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. தொழிலாளர்களும் லாரியில் சென்றனர்.
அங்கு கேரட் மூட்டை களை பிரித்து கேரட் கழுவும் எந்திரத்தில் தண்ணீரை கொண்டு சுத்தப்படுத்தி மீண்டும் மூட்டைகளில் நிரப்பும் பணியில் தொழி லாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக நந்தினியின் துப்பட்டா எந்திரத்தில் சிக்கியது. எந்திரம் வேகமாக இயங்கியதால் நந்தினியும் எந்திரத்தினுள் இழுக்கப்பட்டு தலை துண்டாகி பலியானார். தன் கண்முன்னே தனது மகள் பலியானதை கண்டு நந்தினியின் தாய் சுமித்ரா கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கேத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே குன்னூர் தாசில்தார் குப்புராஜ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண் டார். கேரட் கழுவும் எந்திரம் பாதுகாப்பாக உள்ளதா? அது சரிவர பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து விசாரித்தனர்.பின்னர் உரிய அனுமதியின்றி இயங்கியதாக கூறி கேரட் கழுவும் எந்திரம் செயல்பட்டு வந்த நிலையத்துக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தார். மேலும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாஸ்டியர் நிறுவனம் உள்ளது. இங்கு வெறிநாய்கடி மருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த நிறுவனம் ரேபிஸ் கண்டறியும் மையமாக செயல்படுவதுடன் இங்கு வெறிநாய்கடிக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குன்னூரில் உள்ள பாஸ்டர் இன்ஸிடியூட் ஆய்வகத்தில் உலக தரம் வாய்ந்த ஆய்வகங்களும் அதில் உலக தரம் வாய்ந்த கருவிகளும் உள்ளன. கொரோனா நோய் வைரஸை கண்டறிய உலக தரம் வாய்ந்த ஆய்வகத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். என்ற கருவியும் உள்ளது. ஆய்வு மேற்கொள்ள பயிற்சி பெற்ற விஞ்ஞானிகள் உள்ளனர்.
பாலிமர் செயின் ரியக்சன் என்ற உபகரன கருவியும் உள்ளது. இது ஐ.சி.எம்.ஆர் நிபந்தனைக்களுக்கு உட்பட்டுள்ளது. இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இந்நோய் தொற்று பரிசோதனை செய்ய பெரும் உதவியாக இருக்கும் இதை பற்றி நீலகிரி மாவட்ட நிர்வாகத்திடமும் மத்திய அரசு மற்றும் ஐ.சி.எம்.ஆர்-ரிடம் இருந்து உத்தரவு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் இந்த மையத்தில் கொரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்புக்குழு அலுவலர் குமார் ஜெயந்த், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிம் கூறுகையில், குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சான்றிதழ் வழங்கியுள்ளதால் ஓரிரு நாள்களில் இங்கு கொரோனா பரிசோதனை தொடங்கப்படும் என்றார். இந்த ஆய்வின்போது பாஸ்டியர் ஆய்வக இயக்குநர் சிவகுமார், நிர்வாக அதிகாரி வைரமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






