என் மலர்
செய்திகள்

குன்னூர் வெறிநாய்கடி மையத்தில் கொரோனா பரிசோதனை விரைவில் தொடக்கம்- கலெக்டர் தகவல்
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாஸ்டியர் நிறுவனம் உள்ளது. இங்கு வெறிநாய்கடி மருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த நிறுவனம் ரேபிஸ் கண்டறியும் மையமாக செயல்படுவதுடன் இங்கு வெறிநாய்கடிக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குன்னூரில் உள்ள பாஸ்டர் இன்ஸிடியூட் ஆய்வகத்தில் உலக தரம் வாய்ந்த ஆய்வகங்களும் அதில் உலக தரம் வாய்ந்த கருவிகளும் உள்ளன. கொரோனா நோய் வைரஸை கண்டறிய உலக தரம் வாய்ந்த ஆய்வகத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். என்ற கருவியும் உள்ளது. ஆய்வு மேற்கொள்ள பயிற்சி பெற்ற விஞ்ஞானிகள் உள்ளனர்.
பாலிமர் செயின் ரியக்சன் என்ற உபகரன கருவியும் உள்ளது. இது ஐ.சி.எம்.ஆர் நிபந்தனைக்களுக்கு உட்பட்டுள்ளது. இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இந்நோய் தொற்று பரிசோதனை செய்ய பெரும் உதவியாக இருக்கும் இதை பற்றி நீலகிரி மாவட்ட நிர்வாகத்திடமும் மத்திய அரசு மற்றும் ஐ.சி.எம்.ஆர்-ரிடம் இருந்து உத்தரவு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் இந்த மையத்தில் கொரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்புக்குழு அலுவலர் குமார் ஜெயந்த், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிம் கூறுகையில், குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சான்றிதழ் வழங்கியுள்ளதால் ஓரிரு நாள்களில் இங்கு கொரோனா பரிசோதனை தொடங்கப்படும் என்றார். இந்த ஆய்வின்போது பாஸ்டியர் ஆய்வக இயக்குநர் சிவகுமார், நிர்வாக அதிகாரி வைரமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






