என் மலர்
நீலகிரி
கொரோனா பரவுவதை தடுக்க நீலகிரி மாவட்ட எல்லை மூடப்பட்டு உள்ளது. மேலும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஊட்டி:
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இதை மீறுபவர்களுக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்படும். தும்மும் போதும், இருமும் போதும் கைக்குட்டை அல்லது மெல்லிடைத்தாள் உபயோகிக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. இதை மீறுபவர்களுக்கு ரூ.1,000அபராதம் விதிக்கப்படும். பொது இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இதை மீறுபவர்களுக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்படும்.
அனைத்து வணிக நிறுவனங்களும் தங்களின் கடைக்கு முன்பாக சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கான குறியீடுகளை அமைக்க வேண்டும். குறியீடுகளை அமைக்காத கடைகளை திறக்க அனுமதி இல்லை. மேலும் 144 தடை உத்தரவு சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியாவசிய தேவைகளான மருத்துவ சிகிச்சை, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் மற்றும் இறப்பு தவிர வேறு தேவைகளுக்காக வெளியூர் பயணம் செல்லக்கூடாது. தேவையற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கலெக்டர்களுடன் நடந்த ஆய்வு கூட்டத்தில் மண்டலங்களுக்குள் வாகன போக்குவரத்தை ரத்து செய்து, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்த நடைமுறை நீலகிரியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் அமல்படுத்தப்பட்டது. அதன்படி மாவட்ட எல்லையில் உள்ள பர்லியார், குஞ்சப்பனை, கெத்தை உள்பட 13 சோதனைச்சாவடிகள் மூடப்பட்டது. வெளிமாவட்டங்களில் இருந்து இ-பாஸ் பெற்று வரும் வாகனங்கள் மட்டுமே உள்ளே வர அனுமதிக்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இதை மீறுபவர்களுக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்படும். தும்மும் போதும், இருமும் போதும் கைக்குட்டை அல்லது மெல்லிடைத்தாள் உபயோகிக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. இதை மீறுபவர்களுக்கு ரூ.1,000அபராதம் விதிக்கப்படும். பொது இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இதை மீறுபவர்களுக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்படும்.
அனைத்து வணிக நிறுவனங்களும் தங்களின் கடைக்கு முன்பாக சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கான குறியீடுகளை அமைக்க வேண்டும். குறியீடுகளை அமைக்காத கடைகளை திறக்க அனுமதி இல்லை. மேலும் 144 தடை உத்தரவு சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியாவசிய தேவைகளான மருத்துவ சிகிச்சை, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் மற்றும் இறப்பு தவிர வேறு தேவைகளுக்காக வெளியூர் பயணம் செல்லக்கூடாது. தேவையற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று சிறப்பு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சிறப்பு அதிகாரியான சுப்ரியா சாகு தலைமையில் குன்னூர் இண்கோசர்வ் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித்சிங், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் சிறப்பு அதிகாரி சுப்ரியா சாகு பேசியபோது கூறியதாவது:-
அனைத்து கிராமங்களிலும் ஊர் தலைவர்கள், சமுதாய தலைவர்களுக்கு கொரோனாவை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவர்களை கொண்டு சமய வழிபாட்டு தலங்களில் உள்ள ஒலிபெருக்கி மூலம் முகக்கவசம் அணிவது, கை கழுவுவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். வெளியூரில் இருந்து வருபவர்கள் குறித்து, உடனடியாக கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.
வெளியூர்களில் இருந்து வருபவர்கள் மற்றும் உள்ளூரில் இருந்து வெளியே செல்பவர்கள் குறித்து கிராம அளவில் உள்ள வருவாய் அலுவலர்கள் கண்காணிப்பு பதிவேட்டில் பதிவு செய்து, பராமரிக்க வேண்டும். தொற்று உள்ளவர்களுடன் தொடர்புடைய நபர்களை கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டும். இதற்கு அனைத்து துறை சார்ந்த குழுக்களை அமைக்க வேண்டும். அந்த குழுக்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து, கொரோனா விழிப்புணர்வு பயிற்சி அளித்து, அவர்கள் மூலம் தங்களது குழு உறுப்பினர்களுக்கும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் ஆரோக்கிய சேது செயலி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதனை பதிவிறக்கம் செய்ய பயிற்சி அளிக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வயது முதிர்ந்தோர் மற்றும் இணை நோய்களை உடையவர்களுக்கு மாத்திரைகள் வழங்க வேண்டும்.
நீலகிரி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும். கொரோனா பரிசோதனையை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும். தீவிர கண்காணிப்பு, சந்தை பகுதிகளை சீர்படுத்துதல், பஸ் நிறுத்தம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுதல், தனிநபர் பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும். காய்ச்சல், மூச்சுத்திணறல், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தை கண்டறிய மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். மருத்துவ குழுக்கள் அமைத்து செயல் திட்டம் குறித்து விரிவான விவரங்கள் அளிக்கப்பட வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து, அவர்கள் சென்று வந்த இடங்களை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொற்று பாதித்தவர்களை அனுமதிக்க தேர்வு செய்யப்பட்ட மையங்களை ஆய்வு செய்து, தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டால், அதை சமாளிக்க போதுமான அளவு படுக்கை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கோத்தகிரியில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன். இவரது மகன் அபிஷேக்(வயது 29). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி பவித்ரா(25). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி இரவில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் கோபித்துக்கொண்ட பவித்ரா, கீழ் கோத்தகிரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
பின்னர் நேற்று முன்தினம் காலையில் அங்கிருந்து அவரை சமாதானப்படுத்தி தனது வீட்டுக்கு அபிஷேக் அழைத்து வந்தார். அப்போது மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அபிஷேக், மதியம் 2 மணியளவில் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் அவர் கிடைக்கவில்லை.
இதற்கிடையில் இரவு 9 மணியளவில் அரக்கம்பை கிராமத்துக்கு செல்லும் வழியில் சாலையோரத்தில் அவரது மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் கல்பாறை என்ற இடத்தில் உள்ள ஒரு கற்பூர மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அபிஷேக் பிணமாக கிடந்தார். இதுகுறித்து கோத்தகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், அபிஷேக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து உள்ளது. மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊட்டி அருகே சின்கோனா மூலிகை தாவர வளர்ப்பகத்தில் ரூ.6 லட்சம் தைலங்கள் தேக்கம் அடைந்து உள்ளன. இதனால் உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி:
தனியார் நிறுவனங்களில் இருப்பு அதிகமாக உள்ளதால், மேலும் ஆர்டர் செய்யவில்லை. குறைந்தளவு உற்பத்தி செய்யப்பட்டாலும் விற்பனை ஆகாததால் ரூ.6 லட்சம் மதிப்பிலான தைலங்கள் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் அடைந்துள்ளது. மேலும் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் மூலிகை நாற்றுகள் வளர்க்கப்பட்டு தேவையான விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும். நடப்பாண்டில் ஊரடங்கால் 2 மாதங்கள் தள்ளிப் போனது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூலிகை நாற்றுகள் நடவு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சின்கோனா கிராமத்தில் மூலிகை தாவரங்கள் வளர்ப்பகம், வனத்துறையின் கூட்டு வன மேலாண்மை சார்பில் செயல்பட்டு வருகிறது. தைலம், ரோஸ்மேரி, சிட்ரநெல்லோ, ஜெரேனியம், பார்சிலி, லெமன்கிராஸ் உள்பட 13 வகையான மூலிகை தாவரங்கள் 15 ஏக்கர் நிலத்தில் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் தைலங்கள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா, டாப்சிலிப், ஒகேனக்கல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மேலும் மூலிகை தைலங்கள் மருத்துவமனைகள் மற்றும் நறுமண வைத்திய சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவால் தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் வராததால் விற்பனை ஆகவில்லை. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தைலங்களை வாங்க முன்வரவில்லை. இதனால் தைல உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதை நம்பி சின்கோனா கிராமத்தில் 105 குடும்பத்தினர் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். ஊரடங்கால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தைல உற்பத்தி 50 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படாததால் தைலங்கள் தேக்கம் அடைந்துள்ளது. இதுகுறித்து மூலிகை தாவரங்கள் வளர்ப்பக மேலாளர் உதயகுமார் கூறியதாவது:-
ஊட்டியில் உற்பத்தி செய்யப்படும் தைலங்கள் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மூலிகையின் நன்மைகளை மக்கள் உணர்ந்து பயன்படுத்தியதால் அதன் தேவை அதிகரித்து இருந்தது.
இதற்கிடையே கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டதால் தைலங்களை வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. இருப்பினும் குறைந்த தொழிலாளர்களை கொண்டு தைல உற்பத்தி தொடர்ந்து நடந்து வருகிறது. ஒருமுறை நடவு செய்யப்படும் மூலிகை தாவரம் 5 ஆண்டுகள் வரை வளரும். இதனால் அதை பராமரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தனியார் நிறுவனங்களில் இருப்பு அதிகமாக உள்ளதால், மேலும் ஆர்டர் செய்யவில்லை. குறைந்தளவு உற்பத்தி செய்யப்பட்டாலும் விற்பனை ஆகாததால் ரூ.6 லட்சம் மதிப்பிலான தைலங்கள் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் அடைந்துள்ளது. மேலும் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் மூலிகை நாற்றுகள் வளர்க்கப்பட்டு தேவையான விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும். நடப்பாண்டில் ஊரடங்கால் 2 மாதங்கள் தள்ளிப் போனது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூலிகை நாற்றுகள் நடவு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தலூர்:
தற்போது ஊரடங்கால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதற்கிடையில் ராமதாஸ் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணம் அடையவில்லை என தெரிகிறது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராமதாஸ், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேரம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம்(ரேஞ்ச் எண்.1) பத்துலைன்ஸ் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் ராமதாஸ்(வயது 26). ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராமதாஸ், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேரம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னூர் அருகே கொரோனா அறிகுறி தென்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுப்ரியா சாகு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கு எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்துக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக இன்கோசர்வ் நிர்வாக இயக்குனர் சுப்ரியா சாகு, தமிழக அரசால் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் குன்னூர் அருகே கொரோனா அறிகுறி தென்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுப்ரியா சாகு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கு எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் ஆகியோர் உடனிருந்தனர். அதன்பிறகு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது. வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளுக்கு உரிய அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் சுப நிகழ்ச்சிகளை நடத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் குறித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதை மீறி வீட்டில் தங்க வைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஊட்டி அருகே தனியார் ஊசி தொழிற்சாலையில் பணிபுரிந்த 755 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் 31 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதில் 2 பேர் சென்னையில் இருந்து வந்ததால் அவர்கள் அந்த மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இதனால் நீலகிரியில் பாதிப்பு எண்ணிக்கை 29-ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஊட்டி அருகே எல்லநள்ளி பகுதியில் உள்ள தனியார் ஊசி தொழிற்சாலைக்கு கொரோனா பாதித்த ஊழியர் வந்து சென்றதால், அவருடன் தொடர்பில் இருந்த 9 பேர், குன்னூரில் 3 பேர், பெங்களூரு மற்றும் சென்னையில் இருந்து வந்த 2 பேர் உள்பட 17 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நீலகிரியில் பாதிப்பு எண்ணிக்கை 46 ஆக உயர்ந்து உள்ளது. இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரியில் 36 நாட்களாக பாதிப்பு இல்லாமல் இருந்தது. கடந்த வாரத்தில் பாதிப்பு அதிகமானது. இன்று(நேற்று) ஒரே நாளில் 17 பேருக்கு தொற்று உறுதியானது. தனியார் ஊசி தொழிற்சாலையில் கொரோனா பாதித்த செய்தி மக்கள் தொடர்பு அலுவலருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த 755 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நீலகிரியில் தற்போது 19 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. குன்னூர் மேல் வண்ணாரப்பேட்டையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கிளஸ்டர் ஆக அறிவித்து வீடு, வீடாக சுகாதார துறையினர் குழுக்கள் அமைத்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சிறப்பு அதிகாரி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. நீலகிரியில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாவதால் தொற்றின் தன்மை அதிகமாக இருக்குமோ? என்ற அச்சம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 81 கடைகள் எரிந்து நாசமானது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1,300-க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தது. இதில் காய்கறி மண்டிகள் அருகே சிறிய ஓட்டல்கள் செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டதால், சுழற்சி முறையில் கடைகள் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில், அங்குள்ள ஒரு ஓட்டலில் பயங்கர சத்தம் கேட்டது. தொடர்ந்து கடையில் தீப்பிடித்து எரிந்தது. நேரம் செல்ல செல்ல தீ மள மளவென கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் அருகில் இருந்த பிற கடைகளுக்கும் தீ பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, லாரியில் இருந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி நேற்று அதிகாலை 5 மணியளவில் தீயை அணைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வெடித்ததால், தீப்பிடித்தது தெரியவந்தது. இந்த பயங்கர தீ விபத்தில் காய்கறி, மளிகை, ஓட்டல்கள் என 81 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பில் பொருட்கள் சேதம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எல்லநள்ளியில் தனியார் ஊசி தொழிற்சாலை உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டதால், குறைந்த ஊழியர்களை கொண்டு தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இதற்கிடையில் அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவர், கோவைக்கு சென்றுவிட்டு மீண்டும் தொழிற்சாலைக்கு வந்தார். அவரிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக தொழிற்சாலை மூடப்பட்டது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 50-க்கும் மேற்பட்டோரிடம் சளி மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
மேலும் நீலகிரிக்கு இ-பாஸ் பெற்று வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் தொற்றை பரப்பும் வகையில் வெளியே நடமாடுவது கண்டறியப்பட்டதால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 12 ஆயிரத்து 500 பேரிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. வெளியிடங்களில் இருந்து நீலகிரிக்கு அரசு பஸ்களில் அதிகமானோர் வருகின்றனர். இதனால் மேட்டுப்பாளையம், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பஸ்களை இயக்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது நீலகிரியை சேர்ந்த 30 பேர், கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நீலகிரியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்து உள்ளது.

இது தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-
ஊட்டி அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உள்பட நீலகிரியில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் வசித்து வந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் நீலகிரிக்கு இ-பாஸ் பெற்று வருபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் தொற்றை பரப்பும் வகையில் வெளியே நடமாடுவது கண்டறியப்பட்டதால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 12 ஆயிரத்து 500 பேரிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. வெளியிடங்களில் இருந்து நீலகிரிக்கு அரசு பஸ்களில் அதிகமானோர் வருகின்றனர். இதனால் மேட்டுப்பாளையம், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பஸ்களை இயக்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது நீலகிரியை சேர்ந்த 30 பேர், கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நீலகிரியில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்து உள்ளது.
கூடலூர்-கேரள மலைப்பாதையில் மண்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர்:
இதன் காரணமாக சரக்கு வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வழிக்கடவு போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் மலைப்பாதையில் விழுந்து கிடந்த மண்ணை அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, கூடலூர்-கேரள மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் சரக்கு வாகன டிரைவர்கள் கவனமுடன் செல்ல வேண்டும். வனப்பகுதி மற்றும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் சரக்கு வாகனங்களை நிறுத்தி ஓய்வு எடுக்கக்கூடாது என்றனர்.
கேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழையால், கூடலூர்-கேரள மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைப்பாதை கடும் சேதம் அடைந்தது. இதை சீரமைக்கும் பணிகள் தொடங்கியது. ஆனால் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. இந்த நிலையில் கேரளா மற்றும் நீலகிரியில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் கேரளா மற்றும் கூடலூரில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கூடலூர்-கேரள எல்லையோர பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது மலைப்பாதையில் சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
இதன் காரணமாக சரக்கு வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வழிக்கடவு போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் மலைப்பாதையில் விழுந்து கிடந்த மண்ணை அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, கூடலூர்-கேரள மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் சரக்கு வாகன டிரைவர்கள் கவனமுடன் செல்ல வேண்டும். வனப்பகுதி மற்றும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் சரக்கு வாகனங்களை நிறுத்தி ஓய்வு எடுக்கக்கூடாது என்றனர்.
நீலகிரிக்கு ஊரடங்கை மீறி சுற்றுலாவுக்கு வந்த 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது அவர்கள் வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊட்டி:
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக போலீசார் சோதனை செய்து, சுற்றுலாவுக்காக வருகிறவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 3 நாட்களில் வெளிமாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு ஊரடங்கை மீறி சுற்றுலாவுக்கு வந்த 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது அவர்கள் வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களது ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு, மாவட்ட எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஊரடங்கு உத்தரவால் வெளியூர் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வு செய்யப்பட்டதால், பலர் உறவினர்களை பார்க்க செல்வதாக கூறி நீலகிரி மாவட்டத்திற்கு வந்து கொண்டு இருந்தனர். இந்த நிலையில் நீலகிரிக்கு சுற்றுலா வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து மாவட்ட எல்லையான பர்லியார், குஞ்சப்பனை, கெத்தை சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. உள்ளூர் முகவரியில் வசித்தால் ஆதார் எண்ணை காண்பித்து வர அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற காரணங்களுக்காக வருகிறவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக போலீசார் சோதனை செய்து, சுற்றுலாவுக்காக வருகிறவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 3 நாட்களில் வெளிமாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு ஊரடங்கை மீறி சுற்றுலாவுக்கு வந்த 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது அவர்கள் வந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களது ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு, மாவட்ட எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
சங்கர் சிந்திய ரத்தத்துக்கு நீதி கிடைக்க வேண்டும், இதற்காக நான் உயிர் உள்ளவரை போராடுவேன் என்று கவுசல்யா கூறி உள்ளார்.
குன்னூர்:
உடுமலை சங்கரை காதலித்து திருமணம் செய்தவர் கவுசல்யா. சங்கரின் மரணத்துக்கு பிறகு கவுசல்யா, தற்போது நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் கன்டோன்மெண்ட் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் நியாயம் இல்லை. ஏற்கனவே வழக்கை விசாரித்த துணை போலீஸ் சூப்பிரண்டை மாற்றி விட்டனர். எங்கள் தரப்புக்கு என தனியாக வக்கீல் வைக்க முடியவில்லை. அரசு வக்கீல் மூலமாகவே வழக்கை நடத்தி வந்தோம். சின்னசாமி குற்றவாளி இல்லை என்றால், சங்கர் உயிருடன் இருந்து, என்னுடன் வாழ்ந்திருக்க வேண்டும். ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் டில் மேல்முறையீடு செய்வேன். எனது சட்ட போராட்டம் தொடரும். சங்கர் சிந்திய ரத்தத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்காக நான் உயிர் உள்ளவரை போராடுவேன்.