என் மலர்
செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதி - கோப்புப்படம்
தனியார் ஊசி தொழிற்சாலையில் பணிபுரிந்த 755 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு - கலெக்டர் தகவல்
ஊட்டி அருகே தனியார் ஊசி தொழிற்சாலையில் பணிபுரிந்த 755 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் 31 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதில் 2 பேர் சென்னையில் இருந்து வந்ததால் அவர்கள் அந்த மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டனர். இதனால் நீலகிரியில் பாதிப்பு எண்ணிக்கை 29-ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஊட்டி அருகே எல்லநள்ளி பகுதியில் உள்ள தனியார் ஊசி தொழிற்சாலைக்கு கொரோனா பாதித்த ஊழியர் வந்து சென்றதால், அவருடன் தொடர்பில் இருந்த 9 பேர், குன்னூரில் 3 பேர், பெங்களூரு மற்றும் சென்னையில் இருந்து வந்த 2 பேர் உள்பட 17 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்கள் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் நீலகிரியில் பாதிப்பு எண்ணிக்கை 46 ஆக உயர்ந்து உள்ளது. இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-
நீலகிரியில் 36 நாட்களாக பாதிப்பு இல்லாமல் இருந்தது. கடந்த வாரத்தில் பாதிப்பு அதிகமானது. இன்று(நேற்று) ஒரே நாளில் 17 பேருக்கு தொற்று உறுதியானது. தனியார் ஊசி தொழிற்சாலையில் கொரோனா பாதித்த செய்தி மக்கள் தொடர்பு அலுவலருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த 755 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நீலகிரியில் தற்போது 19 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. குன்னூர் மேல் வண்ணாரப்பேட்டையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கிளஸ்டர் ஆக அறிவித்து வீடு, வீடாக சுகாதார துறையினர் குழுக்கள் அமைத்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சிறப்பு அதிகாரி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. நீலகிரியில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாவதால் தொற்றின் தன்மை அதிகமாக இருக்குமோ? என்ற அச்சம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story