என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சுப்ரியா சாகு ஆய்வு நடத்திய காட்சி.
    X
    தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சுப்ரியா சாகு ஆய்வு நடத்திய காட்சி.

    தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஆய்வு

    குன்னூர் அருகே கொரோனா அறிகுறி தென்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுப்ரியா சாகு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கு எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்துக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக இன்கோசர்வ் நிர்வாக இயக்குனர் சுப்ரியா சாகு, தமிழக அரசால் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் குன்னூர் அருகே கொரோனா அறிகுறி தென்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுப்ரியா சாகு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கு எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அப்போது நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் ஆகியோர் உடனிருந்தனர். அதன்பிறகு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளது. வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளுக்கு உரிய அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் சுப நிகழ்ச்சிகளை நடத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் குறித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதை மீறி வீட்டில் தங்க வைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    Next Story
    ×