என் மலர்tooltip icon

    நீலகிரி

    மே 20ல் தொடங்க உள்ள மலர் கண்காட்சியில் பங்கேற்பதற்காக ஊட்டிக்கு வரும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டி 200-வது ஆண்டு விழாவையும் தொடங்கி வைக்கிறார்.
    ஊட்டி:

    சர்வதேச சுற்றுலாதலமான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெறும் மலர்கண்காட்சி உலக பிரசித்தி பெற்றது.

    இதனை காண்பதற்காக வெளிநாடுகள் மற்றும் உள்நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    இந்த ஆண்டுக்கான 124-வது மலர் கண்காட்சி அடுத்த மாதம் 20-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு மலர் கண்காட்சி நடக்க உள்ளதால் தாவரவியல் பூங்காவை அழகுபடுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது.

    ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 275 வகையான விதைகள் கொண்டு வரப்பட்டு பூங்காவின் பல்வேறு பகுதிகளில் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

    மலர் கண்காட்சி மாடம், கண்ணாடி மாளிகையில் 35 ஆயிரம் வண்ண மலர்த் தொட்டிகளில் செடிகள் நடவு செய்யப்பட்டு, தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கப்பட்டு வருகிறது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த மலர் கண்காட்சி தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அவர் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து தாவரவியல் பூங்காவில் அழகுபடுத்தி வைக்கப்பட்டுள்ள மலர்களையும் கண்டு ரசிக்க உள்ளார்.

    மு.க.ஸ்டாலின் வருகை மற்றும் அவருக்கு அளிக்க வேண்டிய வரவேற்பு குறித்த ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடந்தது. கூட்டத்தில் தி.மு.க.வினர் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். தற்போது முதல்- அமைச்சருக்கு வரவேற்பு அளிப்பதற்கான முன்னேற்பாடு பணிகளில் தி.மு.க.வினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே ஊட்டி 200-வது விழாவையும் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக நீலகிரி எம்.பி. ராசா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஊட்டி 200-ம் ஆண்டை முன்னிட்டு நடப்பாண்டு ஜூன் மாதம் தொடங்கி ஓராண்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே 20ல் தொடங்க உள்ள மலர் கண்காட்சியில் பங்கேற்பதற்காக ஊட்டிக்கு வரும் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டி 200-வது ஆண்டு விழாவையும் தொடங்கி வைக்கிறார்.

    இதற்காக என்று சிறப்பு இணையதளம் உருவாக்கி பல்வேறு தகவல்களை பதிவேற்றம் செய்வதுடன், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜான்சலீவன் சிலை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புகைப்பட கேலரியும் அமைக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிடிபட்ட குரங்குகள் தொலைதூரமுள்ள முள்ளி வனப்பகுதிக்கு கொண்டு சென்று வனத்துறையினர் விடுவித்தனர்.
    மஞ்சூர்: 

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய மேல்முகாமில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. எல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் 130-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 

    இந்நிலையில் சமீபகாலமாக பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள மின்வாரிய குடியிருப்பு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் முகாமிட்டுள்ளது.  இந்த குரங்குகள் திறந்திருக்கும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை வாரியிரைப்பதும் கையில் கிடைக்கும் தின்பண்டங்களை தூக்கி செல்வதுமாக பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. 

    மேலும் இப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்குள் புகுந்தும் மாணவர்களை அச்சுறுத்தி தொல்லை கொடுத்து வருகிறது. குறிப்பாக மதிய உணவு வேளையில் மாணவர்கள் பள்ளி வரண்டாவில் வரிசையாக அமர்ந்து உணவருந்துவது வழக்கம். 

    அப்போது கூட்டமாக வரும் குரங்குகள் மாணவர்களின் கைகளில் உள்ள தட்டுகளை பிடுங்கி உணவுகளை பறித்து செல்கிறது. தடுக்க முயலும் மாணவர்களை மற்றும் ஆசிரியர்களை குரங்குகள் ஆக்ரோஷத்துடன் கடிக்க முயல்கிறது. 

    இந்நிலையில் சமீபத்தில் பள்ளியில் நடைபெற்ற மேலாண்மை குழு தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான பெற்றோர்களும் பள்ளியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். 

    இதை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து குந்தா ரேஞ்சர் சீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில் நேற்று முதல் குரங்குகளை பிடிக்கும் பணி தொடங்கியது. 

    இதற்காக பள்ளி வளாகத்தில் கூண்டு வைக்கப்பட்டு அதில் பொரி, கடலை போன்ற தின்பண்டங்கள் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து தின்பண்-டங்களால் கவரப்பட்ட குரங்குகள் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கூண்டில் சிக்கியது. 

    நேற்று காலை முதல் பிற்பகல் வரை 20-க்கும் மேற்பட்ட குரங்குகள் பிடிக்கப் பட்டது. தொடர்ந்து பிடிபட்ட குரங்குகள் தொலைதூரமுள்ள முள்ளி வனப்பகுதிக்கு கொண்டு சென்று வனத்துறையினர் விடுவித்தனர்.
    சொக்கநல்லி கிராமத்தில் பழங்குடி மக்களுக்கான பசுமை வீடுகள் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
    ஊட்டி: 

    ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கடநாடு, எப்பநாடு ஊராட்சிகளில் ரூ. 1.41 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது:

    ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கடநாடு பகுதியில் உள்ள சொக்கநல்லி கிராமத்தில் பழங்குடி மக்களுக்கான பசுமை வீடுகள் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் 20 வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. 

    எப்பநாடு ஊராட்சிக்கு உள்பட்ட ஆனைக்கட்டி கிராமத்தில் பழங்குடி மக்களுக்கு ரூ.81 லட்சம் மதிப்பில் 27 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. 

    மொத்தம் ரூ. 1 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த வளர்ச்சிப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறும், அவ்வாறு கட்டப்பட்டு வரும் வீடுகளில் மழை நீர்த் தொட்டிகள் அமைக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அலுவலர் களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற நமது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. 

    பொதுமக்களின் தேவைக்கேற்ப 4 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் இதுபோன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள அனைத்து வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சுஜாதா, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், நந்தகுமார், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் குமாரமங்கலம், ஸ்ரீதரன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
    கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இந்த பகுதிகளில் உள்ள அத்திமரங்களிலும் பூக்கள் பூத்து குலுங்குவதுடன், பழங்களும் அதிகளவில் காய்த்து தொங்குகிறது.
    அரவேணு: 

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் அத்தி மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் அனைத்துமே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். 

    தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இந்த பகுதிகளில் உள்ள அத்திமரங்களிலும் பூக்கள் பூத்து குலுங்குவதுடன், பழங்களும் அதிகளவில் காய்த்து தொங்குகிறது.

    இந்த பழங்கள் அனைத்தும் கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களையொட்டிய கடைகளில் விற்பனைக்கு குவிந்துள்ளன. இங்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடனும், ஆசையுடனும் அத்திப்பழங்களை வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்து செல்கின்றனர்.

    100 கிராம்  அத்திப்பழம் 150 ரூபாயுக்கு விற்பனையாகி வருகிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளரும். தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும் என்பதால் இந்த பழத்திற்கு மவுசு அதிகரித்துள்ளது.
    நகராட்சி அலுவலகம் முன்பு திரண்ட பணியாளர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு டிரைவர் தற்கொலை முயற்சிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்(வயது28). இவர் ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வருவதுடன், குப்பைகளை சேகரிக்கும் வாகன டிரைவராகவும் பணியாற்றினார்.

    இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி வழக்கம்போல் பணிக்கு வந்த ரஞ்சித் மதியம் 2 மணி வரை வேலை செய்துவிட்டு மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு செல்வதற்கு மேற்பார்வையாளரிடம் அனுமதி கேட்டார். ஆனால் அவர் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரஞ்சித் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஊட்டி நகர மத்திய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் வேலை செய்யும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 150 பேர் நேற்று காலையில் வழக்கம்போல் வேலைக்கு வந்தனர்.

    பின்னர் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்ட அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு டிரைவர் ரஞ்சித் தற்கொலை முயற்சிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த நகர மன்ற தலைவர் வாணீஸ்வரி, துணைத்தலைவர் ரவிக்குமார், நகராட்சி வருவாய் அலுவலர் பிரான்சிஸ், நகர் நல அலுவலர் (பொறுப்பு) மகாராஜன், மேலாளர் மரிய லூயி ஆகியோர் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க தலைவர் பழனிச்சாமி தலைமையிலான பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உங்களது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதை ஏற்று ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு வேலைக்கு சென்றனர். 

    அடுத்த மாதம் 3-ந்தேதி மீண்டும் நீலகிரி மாவட்டத்திற்கு கவர்னர் வருகை தர உள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு வருகிற 25 மற்றும் 26-ந் தேதிகளில் நடக்க உள்ளது.

    இந்த மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் கோவை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக மேட்டுப்பாளையம் வழியாக காரில் நீலகிரி செல்கிறார்.

    நீலகிரிக்கு செல்லும் அவர் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் தங்குகிறார். நாளை முதல் வருகிற 29-ந் தேதி வரை 7 நாட்கள் ஊட்டியிலேயே கவர்னர் தங்குகிறார்.

    25-ந் தேதி காலை ராஜ்பவன் மாளிகையில் நடக்கும் துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

    இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

    வருகிற 29-ந் தேதி வரை நீலகிரியில் தங்கியிருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி 30-ந் தேதி சென்னை திரும்புகிறார். பின்னர் அடுத்த மாதம் 3-ந் தேதி மீண்டும் நீலகிரி மாவட்டத்திற்கு கவர்னர் வருகை தர உள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    வியாபாரிகள் எவ்வாறாக செயல்பட வேண்டும், வரும் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.
    அரவேணு: 

    தேசிய வியாபாரி கூட்டமைப்பு நீலகிரி மாவட்ட தலைவர் சிவ கிருஷ்ணா முன் ஏற்பாட்டில் இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர்  விநாயகமூர்த்தி கலந்து கொண்டார். 

    மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார்.  பின்பு மாநில துணைப் பொதுச்செயலர் ஏ.சசிகுமார் வியாபார கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு விளக்க உரை ஆற்றி வியாபாரிகள் எவ்வாறாக செயல்பட வேண்டும்,  வரும் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டும்,  புதிய உறுப்பினர் சேர்க்கை நடக்கவிருக்கும் மாநாடு குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது
    கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இந்து முன்னணிகொடியேற்றம் நடைபெற்றது.
    அரவேணு: 

    நீலகிரி மாவட்டம் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் கோத்தகிரி தனியார் அரங்கில் நடைபெற்றது. முதலில் கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இந்து முன்னணிகொடியேற்றம் நடைபெற்றது. 

    பிறகு   மாவட்ட செயலாளர் ஜெகன் ஏற்பாட்டில் மாவட்ட இந்து முன்னணி செயற்குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . மாவட்ட செயற்குழு ரமேஷ் வரவேற்றார். இதில்
     
    சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி பொதுச் செயலர் கிஷோர் குமார்   கலந்து கொண்டார். அவர் தலைமையில் மாவட்டத்தில் இந்து முன்னணி வளர்ச்சி குறித்தும் அனைத்து பகுதியிலும் இந்துமுன்னணி கிளை தொடங்க  வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.  மாவட்டத்தில் இருந்து நகர, ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர் நகர தலைவர் சுந்தர் நன்றி கூறினார். 
    இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி அடுத்த மாதம் 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்த மலர் கண்காட்சியை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஊட்டி:

    சுற்றுலா நகரமான ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் அரசு தாவரவியல் பூங்காவிற்கு வருகின்றனர். அண்டை மாநிலமான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அப்படி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.

    கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை.

    இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி அடுத்த மாதம் 20-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்த மலர் கண்காட்சியை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கவுள்ள கோடை சீசன் மற்றும் மலர் கண்காட்சியையொட்டி தற்போது தாவரவியல் பூங்காவை தயார் செய்யும் பணிகள் மும்முராக நடந்து வருகின்றன.

    கடந்த மாதம் முதல் பூங்காவில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. நாற்றுகள் வளரும் காலத்தை பொருத்து நடவு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன.

    நடவு செய்யப்பட்ட பூந்தொட்டிகளில் தற்போது பூக்கள் பூக்க தொடங்கி உள்ளன. தாவிரவியல் பூங்கா ஊழியர்கள் தினமும் பூந்தொட்டிகளுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர்.

    இம்முறை தொடர்ந்து மழை பெய்ததால் தாவிரவியல் பூங்காவின் புல்வெளிகள் செடிகள் மரங்கள் என அனைத்தும் பசுமையாய் மாறி உள்ளது.
    மயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டியது
    ஊட்டி, 
    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 18&ந் தேதி பூச்செரிதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 20&ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடந்தது.

    சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று நடந்தது. காலை 6 மணிக்கு மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. 9 மணிக்கு விநாயகர் மாரியம்மன் உள்பட எழுந்-தருளிய தெய்வங்களுக்கு அலங்கார பூஜைகளும், அதனை தொ டர்ந்து கனகாபிஷேகமும் நடந்தது. மதியம் அலங்கரிக்கப்பட்ட தேரில் சிம்ம வாகனத்தில் மாரியம்மன் எழுந்த-ருளினார்.
    இதையடுத்து தேரோட்டம் நடந்தது. தேரை கலெக்டர் அம்ரித் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல ஆயிரம் பக்தர்கள் ஓம்சக்தி, பராசக்தி கோஷத்துடன் தேரை இழுத்து சென்றனர்.  பெரிய தேருக்கு முன்பு பல சிறிய தேர்கள் அணி வகுத்து சென்றன. இதனை காணவும், அம்மனின் அருளை பெறவும் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் வந்திருந்தனர்.
    50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டதால், மாரியம்மன் கோயில் வளாகம், அப்பர், பஜார் சாலை களைகட்டியது. மேலும், பக்தர்கள் அதிகளவு திரண்ட நிலையில், போக்குவரத்து சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    குன்னூர் மேல்கடை-வீதியில் உள்ள தந்தி மாரி-யம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 8&ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று தேரோட்டம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு துயில் எழுப்பு அதிர்வேட்டு வைக்கப்பட்டது. வி.பி. தெருவில் உள்ள துருவம்மன் கோவிலில் இருந்து ஊர்-வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் மயி-லாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் மற்றும் மங்கள இசை, மேளதாளம், பேண்டு வாத்தியங்கள் முழங்க மாரியம்மன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தது. அப்போது நடன கலைஞர்கள் அம்மன் வேடமிட்டபடி நடனமாடி வந்தனர்.
    தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

    கூடலூர் சந்தைக்கடை மாரியம்மன் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் சிறப்பு பூஜை, உச்சிகால பூஜை நடந்தது. 
    தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேளதாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட  தேரில் சிம்ம வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு கூடலூர் சக்தி விநாயகர், சக்தி முனீஸ்வரன், நாகராஜா உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று முக்கிய வீதிகள் வழியாக கோவிலை அடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை எடுத்த சென்றனர்.

    கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று அம்மன் அலங்-கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. கரகாட்டம், பொய்க்கால் ஆட்டம் மற்றும் மேள, தாளங்கள் முழங்க அம்மன் வீதி உலா நடைபெற்றது.

    மாணவியிடம் அத்துமீறிய பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்ய கோரி பழங்குடியின பெண்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் எம்.பாலாடாவில் உண்டு உறைவிட பழங்குடியினர் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக சுப்பிரமணி(58) என்பவர் பணியாற்றினார்.

    இந்த நிலையில் இவர், அந்த பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் பழங்குடியின மாணவியின் துப்பட்டாவை பிடித்து இழுத்து தகாத முறையில் அத்துமீறியதாக கூறப்படுகிறது.

    இந்தசம்பவம் குறித்தும் மாணவி தனது பெற்றோருடன் சென்று ஊட்டி ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.புகாரின் பேரில் போலீசார் சுப்பிரமணி மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ஞானரவி மற்றும் போலீசார் பள்ளியில் சென்று விசாரித்தனர். இதில் தலைமை ஆசிரியர் மாணவியிடம் தவறாக நடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    ஆனால் புகார் அளித்து 18 நாட்களை கடந்தும் அவர் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து கோத்தர் பழங்குடியின பெண்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    பழங்குடியின மக்களுக்காக நடத்தப்படும் ஏகலைவா உண்டு, உறைவிட பள்ளி முத்தோரை, பாலாடா பகுதியில் உள்ளது. விடுதி வளாகத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக பாதுகாப்புக்கு என காவலர் கிடையாது. சி.சி.டி.வி காமிராக்களும் இல்லை.

    இந்த சூழலில் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த சுப்பிரமணி என்பவர் பழங்குடியின மாணவி ஒருவரிடம் அத்துமீறி நடந்துள்ளார். இது தொடர்பாக புகார் அளித்தபோது வழக்குப்பதிவு செய்ய காலம் கடத்திய போலீசார் தற்போது அவரை கைது செய்யாமல் இருக்கின்றனர்.

    மேலும் தலைமை ஆசிரியர் மீது புகார் அளித்த நிலையில் பள்ளியில் உள்ள ஒரு பெண் ஆசிரியர் உள்பட சில ஆசிரியர்கள், பழங்குடியின மாணவ, மாணவிகளை இழிவாக பேசி வருகின்றனர். எனவே தலைமறைவாக உள்ள ஆசிரியரை கைது செய்வதுடன், மாணவிகளை இழிவாக பேசி வரும் ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதைதொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துமாணிக்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    2 நாட்களுக்குள் தலைமை ஆசிரியர் கைது செய்யப்படுவார். பள்ளியில் மாணவ, மாணவிகளை இழிவாக பேசிய ஆசிரியர்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
    சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக அடுத்த மாதம் கோடைவிழா நடத்தப்படுகிறது
    ஊட்டி: 

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக அடுத்த மாதம் கோடைவிழா நடத்தப்படுகிறது.

    ஊட்டி ரோஜா பூங்காவில் 14, 15-ந் தேதிகளில் ரோஜா கண்காட்சி, ஊட்டி தாவரவியல் பூங்காவில் 20ந் தேதி முதல் 24-ந் தேதி வரை மலர் கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 28 மற்றும் 29ந் தேதிகளில் பழ கண்காட்சியும் நடக்கிறது.

    கண்காட்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து வேளாண் உற்பத்தி ஆணையாளர் மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி நேற்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நீலகிரியில் உள்ள தோட்டக்கலை பூங்காக்களில் அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நீலகிரியில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள ஆர்க்கிட் மலர்களைச் சேகரித்து ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவில் பிரத்யேகமாக ஆர்க்கிட் கண்ணாடி மாளிகை அமைக்கப்படும்.

    நடப்பு ஆண்டில் மே மாதத்தில் நடைபெறவுள்ள கோடை விழாவில் மலர் கண்காட்சியின்போது சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கும் வகையில் மலர்க் கண்காட்சி நடத்தப்படும். 

    ஊட்டியில் உள்ள மரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க மலர் அலங்காரங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    தோட்டக் கலைத் துறையின் பூங்கா மற்றும் பண்ணைகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் அளிப்பது தொடர்பான கோரிக்கை மீது பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது, தோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ், உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    ×