என் மலர்
நீலகிரி
அரவேணு:
நீலகிரி மாவட்ட வனப்பகுதிகள் காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் வசித்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுவதை வழக்கமாக வைத்துள்ளது.
அப்படி வரும் விலங்குகள் குடியிருப்பு பகுதியில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தி வருகிறது. யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினரும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் யானைகள் ஊருக்குள் நுழைந்து கொண்டு தான் இருக்கிறது.
கோத்தகிரி குஞ்சப்பனை அருகே உள்ளது கோழிக்கரை கிராமம். இந்த கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இந்த கிராமத்தையொட்டி 3 யானைகள் 2 குட்டிகளுடன் சுற்றி திரிந்து வருகின்றன.
இந்த யானைகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்கு செல்லக் கூடிய சாலைகள் மற்றும் விளை நிலங்கள் அருகே நிற்கிறது.
இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்வோர் எப்போது யானை வருமோ என்ற அச்சத்திலேயே பயணித்து வருகின்றனர்.
எனவே இந்த யானைகள் ஊருக்குள் நுழையாத வண்ணம், வனப்பகுதியில் அகழிகள் வெட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக துணைவேந்தர்களுக்கான கருத்தரங்கு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் இன்று தொடங்கியது.
காலை 9.30 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி துணைவேந்தர்கள் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார்.
இந்த கருத்தரங்கில் பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதீஷ்குமார் மற்றும் ஜோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
கருத்தரங்கில் புதிய உலகக் கட்டமைப்பில் இந்தியாவின் பங்கு மற்றும் 2047-ம் ஆண்டுக்குள் உலக நாடுகளை வழிநடத்தும் நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்ற தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றது.
இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசியர்கள், இணை பேராசிரியர்கள் என பலரும் பங்கேற்று உலக கட்டமைப்பில் இந்தியாவின் பங்கு மற்றும் உலக நாடுகளை இந்தியா வழிநடத்துவதற்கான கருத்துக்கள் மற்றும் செயல் திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கி பேசி விவாதித்தனர்.
கருத்தரங்கில் பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதீஷ்குமார் மற்றும் ஜோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி, கவர்னரின் முதன்மை செயலாளர் ஆனந்த்ராவ் பட்டீல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இன்று தொடங்கிய துணைவேந்தர்களுக்கான கருத்தரங்கு தொடர்ந்து நாளையும் நடக்கிறது.
2 நாட்கள் நடக்கும் கருத்தரங்கிலும் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார்.
முன்னதாக இந்த கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை கவர்னர் மாளிகை சார்பில் செய்யப்பட்டிருந்தது. இதற்காக கவர்னர் மாளிகையில் கருத்தரங்கில் பங்கேற்பவர்கள் அமருவதற்கு இருக்கை அமைக்கும் பணி, முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கான மேடை அமைக்கும் பணிகளும் வேகமாக நடந்து வந்தது.
மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரியில் அவ்வப்போது சாரல் மழை, மேகமூட்டம் என இதமான குளு, குளு கோடை சீசன் துவங்கியுள்ளது.
இந்த இதமான சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். கடந்த ஒரு மாத காலமாகவே ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
இப்படி வரும் சுற்றுலா பயணிகளில் 80 சதவீத சுற்றுலா பயணிகள் நூற்றாண்டை கடந்த புகழ்பெற்ற ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை இயக்கப்படும் நீராவி இன்ஜின் மலை ரெயிலில் பயணம் செய்ய அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். இதற்கு காரணம் மேட்டுப்பாளையத்தில் இருந்து அடர்ந்த காடுகள் வழியே செல்வது தான்.
இந்த ரெயிலில் பயணிக்கும் போது வனவிலங்குகள், இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம் என்பதால் மலைரெயிலில் பயணிக்க அதிகம் விரும்புகிறார்கள்.
விடுமுறை நாளான நேற்று ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம் மலைரெயில் நிலையங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
எதிர்வரும் மே மாதம் சுமார் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கோடை சீசன் முடியும் வரை சிறப்பு மலை ரெயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த காலங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இரவு நேரங்களில் ஊட்டி முதல் கேத்தி வரை சுற்றுலா பயணிகளுக்காக தனி நீராவி இன்ஜின் கொண்ட மலை ரெயில் இயக்கப்பட்டது.
இந்த ஆண்டும் அதே போல் மத்திய அரசு சிறப்பு கோடை சீசன் மலை ரெயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.






