என் மலர்
நீலகிரி
ரூ.300 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது
ஏப்.30-
பிக்சிஸ் பழம் தமிழ்நாட்டில் நீலகிரி, கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களில் அதிகம் காணப்படுகிறது.வருடந்தோறும் மே மாதம் முதல் செப்டம்பர் வரை இந்த பழ சீசன் இருக்கும். தற்போது கோடைகாலம் தொடங்க உள்ளதையொட்டி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பிக்சிஸ் மரங்களில் பழங்கள் அதிகளவில் காய்த்து தொங்குகின்றன. இது அங்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திழுக்கிறது.
எஸ்டேட் பகுதியில் உள்ள வீடுகளில் அதிகளவில் இந்த மரங்களை அதிகளவில் வளர்த்து வருகின்றனர். இந்த பழம் ரூ.300 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது.
இப்பழத்தின் பிறப்பிடம் சீனா. இந்த பழம் சிறிய ஆப்பிள் போன்ற வடிவம் உடையது. தமிழில் இந்த பழத்தை குழிப்பேரி என்று அழைக்கின்றனர். இது இனிப்பு புளிப்பு கலந்த சுவையாகும். பொட்டாசியம், இரும்பு பீட்டா கரோட்டின் தாது உப்புக்கள் மற்றும் விட்டமின் ஏ சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். திசு வளர்ச்சி ரத்த சிவப்பணு அதிகரித்தல் இதயத்திற்கு மிகவும் நல்லது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தல்
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் வருகிற மே மாதம் கோடை விழா நடைபெறுகிறது.
இதன் முதல் நிகழ்ச்சியாக 7 மற்றும் 8-ந் தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால் காய்கறி கண்காட்சி நடத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் கோத்தகிரியில் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நேரு பூங்காவில் நடைபெற உள்ள காய்கறி கண்காட்சியில் பங்கேற்கும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிந்து வர வேண்டியது அவசியம்.
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் காய்கறி சிற்பங்கள் மற்றும் சிறப்பான அரங்குகளை அமைக்க வேண்டும்.
பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்கும் வகையில் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம் குறித்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்
கூட்டத்தில் நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிபிலா மேரி, குன்னூர் உதவி கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி, குன்னூர் துணை சூப்பிரண்டு சுரேஷ், கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர், செயல் அலுவலர் மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
புதிய பஸ் நிலையம் அத்துடன் சேர்ந்து வணிக வளாகமும் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊட்டி:
ஊட்டி அருகே நடுவட்டம் பேரூராட்சிக்குட்பட்ட நடுவட்டம் கிராமம் உள்ளது. இப்பகுதியில் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் முக்கிய வழித்தடத்தில் அமைந்துள்ளது.
மேலும், ஊட்டியில் இருந்து கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாகவும் உள்ளது. இவ்வழித்தடத்தில் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் இங்கு நிறுத்துவது வழக்கம்.
அதேபோல், சுற்றுலா பயணிகள் வாகனங்களும் அங்கு நிறுத்தி தேநீர் மற்றும் உணவு உட்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பஸ் நிலையம் மிகவும் பழுதடைந்ததால், அந்த பஸ் நிலையம் இடிக்கப்பட்டது.
புதிதாக பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகம் ஆகியவை மூலதன நிதியின் கீழ் ரூ.3 கோடியில் கடந்த ஓராண்டிற்கு முன் தொடங்கப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
பணிகளை பேருராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹிம்ஷா, செயல் அலுவலர் பிரதீப்குமார், பேரூராட்சித் தலைவா் கலியமூா்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். இது குறித்து நடுவட்டம் பேரூராட்சி தலைவர் கலியமூா்த்தி கூறுகையில், புதிய பஸ் நிலையம் அத்துடன் சேர்ந்து வணிக வளாகமும் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்பணிகள் ஒரு மாதத்திற்குள் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.
திருவிழாவையொட்டி டானிங்டன் மகாசக்தி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் மற்றும் பறவைக்காவடி எடுத்து வரப்பட்டது.
அரவேணு:
கோத்தகிரி உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோத்தகிரி வட்டார நாயுடு சமுதாய நல சேவா சங்கம் சார்பில் 9-ம் ஆண்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் டானிங்டன் மகாசக்தி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் மற்றும் பறவைக்காவடி எடுத்து வருதல், அபிஷேக மலர் அலங்கார வழிபாடு, அன்னதானம், மாவிளக்கு பூஜை,தமிழ் வேதமாகிய வேதாரம்,திருமுறை,திருப்புகழ் மற்றும் மாலை அம்மன் தாமரை புஷ்ப வாகனத்தில் ஊர்வலம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாயுடு சமுதாய நல சேவா சங்க நிர்வாகிகள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், ஊட்டி நகரசபை துணை தலைவர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பிங்கர்போஸ்ட் மர்கஸ் அரபு பெண்கள் கல்லூரியில் இப்தூர் விருந்து என்னும் ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
மத நல்லிணக்கம் மலான் பண்டிகையையொட்டி பல்வேறு இடங்களில் உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில், மாவட்ட மத நல்லிணக்க ஒருமைப்பாடு அமைதிக்குழு மற்றும், மர்கஸ் அரபு பெண்கள் கல்லூரி நிர்வாகமும் இணைந்து நடத்தும் மத நல்லிணக்க இப்தார் விருந்து மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அனைத்து மதத்தினரும் ஒன்றாக இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சியானது தேபோன்று ஒவ்வொரு ஆண்டும் நீடிக்க வேண்டும்.
டெல்லியை மையமாக வைத்து செயல்பட்டு வரும் இஸ்லாமிய கல்வி வாரியம் நடத்திய பொது தேர்வுகளில் உதகை அரபு பெண்கள் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிறப்பாக படித்து தேசிய அளவில் முதல் இடத்தினை பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். இது மிகவும் சந்தோஷமாகவும் நம்பிக்கை ஊட்டும் விதமாகவும் உள்ளது. வெற்றி பெற்ற மாணவிகள் மேலும் உயர்ந்த நிலையை அடைய எனது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்நிகழ்வினை சிறப்பாக நடத்தி கொண்டிருக்கும் அனைத்து பெரியோர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு அவர் நினைவுப்பரிசு, பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், ஊட்டி நகரசபை துணை தலைவர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளிக்கு வந்த பிளஸ்-2 மாணவியை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் குன்னூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் உமரி காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் குன்னூரில் உள்ள தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறார்.
இவர் தினமும் தனது வீட்டில் இருந்து தோழிகளுடன் பள்ளிக்கு நடந்து செல்வது வழக்கம். இன்று காலையும் மாணவி வழக்கம்போல் வீட்டில் இருந்து புறப்பட்டு தனது தோழிகளுடன் பேசிக்கொண்டே பள்ளிக்கு வந்து கொண்டிருந்தார்.
பள்ளி அருகே வந்த போது வாலிபர் ஒருவர் அங்கு வந்தார். அவர் மாணவியை வழிமறித்து, நான் உன்னை காதலிக்கிறேன். நீயும் என்னை காதலிக்க வேண்டும் என கூறினார். ஆனால் மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்தார். மேலும் ஆத்திரம் தீராத அவர் மாணவியின் தோல், வயிறு, தலை, நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளிலும் கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இதில் பலத்த காயம் அடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதனை மாணவியுடன் வந்த சக மாணவிகள் பார்த்து அலறினர். மாணவிகள் அலறிய சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடி வந்தனர்.
பின்னர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய மாணவியை மீட்டு குன்னூர் லாலி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கி்டையே மாணவியை கத்தியால் குத்திய வாலிபரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.
அப்போது வாலிபர் தான் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மக்களை மிரட்டினார். மக்கள் சுதாரித்து கொண்டு வாலிபரின் கையில் இருந்த கத்தியை தட்டி விட்டு, அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
வாலிபரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள் அவரை குன்னூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த வாலிபரிடம் கஞ்சா, மதுபாட்டில்கள் உள்ளிட்டவையும் இருந்தது. இதையடுத்து போலீசார் வாலிபரிடம் இருந்து கஞ்சா, மதுபாட்டில்கள், கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாணவியை கத்தியால் குத்தியது குன்னூரை சேர்ந்த ஆசிக்(26) என்பது தெரியவந்தது. இவர் மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் மாணவி, வாலிபரின் காதலை ஏற்கவில்லை.
இருப்பினும் தினமும் மாணவி பள்ளிக்கு வரும் போதும், பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் போதும் ஆசிக் பின் தொடர்ந்து செல்வதையும், காதலிக்குமாறு வற்புறுத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அதேபோல் தான் இன்று பள்ளிக்கு வந்த மாணவியை மறித்து தன்னை காதலிக்குமாறு கூறியுள்ளார்.
ஆனால் மாணவி அதற்கு மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரம் அடைந்து கத்தியால் குத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்... 3 நாட்களாக தொடர்ந்து எரிந்த பெருங்குடி குப்பை கிடங்கு தீ கட்டுக்குள் வந்தது
கொரோனா தொற்று குறைந்து விட்டதால் பயணிகள் வசதிக்காக ஊட்டி மலை ரெயிலில் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.
ஊட்டி:
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், கடந்த ஒரு மாத காலமாகவே ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்களில் 80 சதவீத பயணிகள் நூற்றாண்டை கடந்த புகழ்பெற்ற ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் மலை ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் ஊட்டி மலை ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா தொற்று குறைந்து விட்டதால் ஊட்டி மலை ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. அதன்படி ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் சிறப்பு ரெயில் (எண்.06140) ஊட்டியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும். இந்த ரெயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகள் வருகிற மே 1-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.
குன்னூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சிறப்பு ரெயில் (எண்.06141) ஊட்டியில் மதியம் 12.15 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயிலில் முன்பதிவில்லா 2 பெட்டிகள் வருகிற 4-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.
குன்னூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சிறப்பு ரெயில் (எண்.06138) குன்னூரில் மாலை 4 மணிக்கு புறப்படும். இந்த ரெயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகள் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.
அதுபோல் ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் சிறப்பு ரெயில் ஊட்டியில் காலை 9.15 மணிக்கு புறப்படும். இந்த ரெயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகள் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.
குன்னூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சிறப்பு ரெயில் (எண்.06143) குன்னூரில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்படும். இந்த ரெயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகள் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சிறப்பு ரெயில் (எண்.06136) மேட்டுப்பாளையத்தில் காலை 7.10 மணிக்கு புறப்படும். இந்த ரெயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒரு முன்பதிவில்லா பெட்டியும், குன்னூரில் இருந்து மேலும் ஒரு முன்பதிவில்லா பெட்டியும் வருகிற ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி முதல் இணைக்கப்பட உள்ளது.
ஊட்டியில் இருந்து குன்னூர் வரை 2 முன்பதிவில்லா பெட்டியும், குன்னூரில் இருந்து ஒரு முன்பதிவில்லா பெட்டி மேட்டுப்பாளையம் வரையும் வருகிற ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.
இவ்வாறு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வனப்பகுதிக்குள் விரட்ட வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவேணு:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வனப் பகுதியில் யானை, மான் உள்பட ஏராளமான காட்டு விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது.
இதனால் தண்ணீா் மற்றும் பசுந்தீவனங்களைத் தேடி காட்டு யானைகள், காட்டெருமைகள் அதிக அளவில் வெளியே வரத் தொடங்கி உள்ளன.
இந்நிலையில், கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. ஏற்கனவே இந்த சாலையில் குட்டியுடன் வந்த ஒற்றை யானை பஸ் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியது.
இதன் காரணமாக வனத் துறையினா் தற்போது தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
நீலகிரியில் தற்போது சீசன் தொடங்கியுள்ளதால், அதிக அளவிலான வாகனங்கள் இப்பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வந்து செல்கின்றன.
அசம்பாவிதங்கள் நடக்கும் முன் யானைகளை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளதால், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் மீண்டும் போக்குவரத்து வழிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா், லாரி உரிமையாளா் சங்கம், மேக்ஸி கேப் ஒட்டுநா் சங்கம், மினி பஸ் உரிமையாளா் சங்கம் ஆகியோருடனான கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூா் மற்றும் ஊட்டிக்கு வரும் கனரக வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே இயக்க அனுமதிக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வரும் இதர வாகனங்கள் குன்னூா் வழியாகவும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும் இயக்கப்படும்.
மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூா் வழியாக ஊட்டி வரும் வாகனங்கள் ஸ்டேன்ஸ் பிரிவிலிருந்து ஏ.டி.சி. வழியாகவும், தாமஸ் சா்ச் சாலை வழியாகவும் மத்திய பஸ் நிலையத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறது.
கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் தலைக்குந்தா, குளிச்சோலை, புதுமந்து ஸ்டீபன் சா்ச் வழியாக ஊட்டிக்கு வர அனுமதிக்கப்படும்.
கோத்தகிரியில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் தொட்டபெட்டா சந்திப்பிலிருந்து பாரஸ்ட் கேட்புதுமந்து வழியாக ஊட்டி வந்தடையும்.
ஊட்டி நகரத்துக்குள் வரும் வாகனங்கள் அலங்காா் திரையரங்கத்திலிருந்து சாமுண்டி இன் வழியாக ரோஸ் காா்டன் செல்லவும், திரும்ப ரோஸ் காா்டனிலிருந்து ஜே.எஸ்.எஸ் மற்றும் ராகவேந்திரா கோவில் வழியாக ஒரு வழியாகவும், மாவட்ட காவல் அலுவலகம் பழைய கட்டிடத்திலிருந்து ஒருவழியாக கேசினோ சந்திப்பு செல்லவும் அனுமதிக்கப்படுகிறது.
ஊட்டி நகரத்துக்குள் சுற்றுலா பஸ்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இந்த மாற்றங்கள் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், பால், காய்கறி மற்றும் விவசாய இடுபொருள்கள் மற்றும் விளைபொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது எனவும், அந்த வாகனங்கள் வழக்கம்போல இயங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் மையம் மாவட்ட நிா்வாகத்தால் முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில், மதுபானங்களை வாங்கி பயன்படுத்திவிட்டு, காலி மதுபான பாட்டில்களை சாலையோரங்களிலும், வனப்பகுதியிலும், விளைநிலங்களிலும் வீசி செல்கின்றனா்.
வனப்பகுதிகளில் வீசப்படும் காலி மதுபாட்டில்களால் வன உயிரினங்களுக்கும், பொது இடங்களில் வீசப்படும் காலி மதுபாட்டில்களால் சுற்றுபுறமும் மாசுப்பட்டு நோய் தொற்று ஏற்பட காரணமாகிறது.
இதனைத் தடுக்கும் பொருட்டு நீலகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் மையம் மாவட்ட நிா்வாகத்தால் முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் தலைக்குந்தா பஸ் நிலையம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அருகிலும், ஊட்டி நகர சுகாதார மையம் அருகிலும், கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் டானிங்டன் பகுதியிலும், கோத்தகிரியில் கட்டபெட்டு சந்திப்பு பகுதியிலும், பைக்காரா பஸ் நிலையம் மற்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அருகிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் குந்தா பிக்கட்டி கடைவீதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அருகிலும், குன்னூரில் வண்டிசோலையில் பாரஸ்ட்டேல் சாலை பகுதியிலும், கூடலூா் நகரில் சில்வா் கிளவுட் அருகிலும், பந்தலூரில் தாளூா் சோதனைச்சாவடி அருகிலும் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் மாவட்ட நிா்வாகத்தால் தொடங்கப்பட்டுள்ள காலி மதுபாட்டிலுக்கான சேகரிக்கும் மையத்தில் காலி மது பாட்டில்களை ஒப்படைத்து, நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதியையும், விளைநிலங்களையும், சுற்றுப்புறத்தையும் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீலகிரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எம்.ஆர்.சி. கமாண்டெண்ட் பிரிகேடியர் யாதவ் கிராம மக்களை சந்தித்து நன்றி கூறியதோடு குறைகளை கேட்டறிந்தார்.
குன்னூர்:
குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்-குள்ளானது.
இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். நஞ்சப்பசத்திர கிராம பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள போர்-வைகள் மற்றும் உபகர-ணங்களை வழங்கி மீட்பு குழுவினருடன் இணைந்து பணியாற்றினர்.
இதனை தொடர்ந்து இந்த பகுதிக்கு வந்த தென்பிராந்திய ராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் அருண், கிராம மக்களுக்கு நன்றியை தெரிவித்து மாதந்தோறும் நஞ்சப்பசத்திரம் கிராம பொதுமக்களுக்கு ராணுவ ஆஸ்பத்திரி மூலம் இலவச மருத்துவ முகாம் நடைபெறும் என்று அறிவித்தார்.
இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. நேற்று நஞ்சப்ப சத்திரம் கிராமத்தில் வண்டிச்-சோலை ஊராட்சி தலைவர் மஞ்சுளா சதிஷ்-குமார் முன்னிலையில் ஊராட்சி ராணுவ ஆஸ்பத்திரி மூலம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் பெண் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் அடங்கிய குழுவினர்கள் பொது மக்களை பரிசோதித்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.
கோவையிலுள்ள தனியார் கண் ஆஸ்பத்திரி மூலம் கண் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த மருத்துவ முகாமை புதிதாக பொறுப்பேற்ற எம்.ஆர்.சி. கமாண்டெண்ட் பிரிகேடியர் யாதவ் பார்வையிட்டார். பின்னர் அவர் கிராம மக்களை சந்தித்து நன்றி கூறியதோடு குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் குழந் தைகள் இருப்பதாகவும், அவர்கள் பின் தங்கிய நிலையில் இருப்பதாகவும் அவர்களை ராணுவ பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்த பிரிகேடியர் யாதவ் ராணுவம் அல்லாத பொது-மக்களின் குழந்தைகளை சிறப்பு சலுகையின் கீழ் ராணுவ பள்ளியில் சேர்க்க முடியுமா? என்பதை ஆய்வு செய்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என மக்களிடம் தெரிவித்தார்.
அதிகாரிகளுக்கு மாநில பேரிடர் மேலாண்மை முகமை இயக்குனர் அறிவுறுத்தல்
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவ-டிக்கை எடுப்பது குறித்து அனைத்து துறை அலுவ-லர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமையின் இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முகமையின் இயக்குநர் கந்தசாமி கூறியதாவது:& நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவுகள் ஏற்படுவதில் நீண்ட கால தடுப்புப் பணிகள் தொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்க அமைக்கப்பட்டுள்ள புவியியல் தொழில்நுட்ப வல்லுநர்களான டாக்டர்.கே.ஜெயபாலன், ஜீவானந்தம் மற்றும் ஆண்டிரிவ் வின்னர் ஆகியோர் கொண்ட குழு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை உள்ளிட்ட துறைகள் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான சாலை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்போது, அப்பகுதிகளில் இயற்கை பேரிடர் ஏதேனும் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதை ஆராய்ந்து, அதற்கு ஏற்ற-வாறு தாங்கள் மேற்-கொள்ளும் பணிகளை வடிவமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளை அலுவலர்கள் முன்கூட்டியே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடி-க்கைகளை மேற்கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் மோனிகா ரானா, குன்னூர் சப்கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆராய்ச்-சியாளர் மணிவண்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.