என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிராம சபை கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் உடனே செயல்படுத்தப்படும் கலெக்டர் அம்ரித் பேச்சு
கிராம சபை கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் உடனே செயல்படுத்தப்படும் கலெக்டர் அம்ரித் பேச்சு
தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் தூனேரி ஊராட்சிக்கு உட்பட்ட கரகல் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அனைத்து நலத்திட்ட பயன்கள், அடிப்-படை சேவைகள் அனைத்தும் ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுதல் குறித்தும், கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வயதினரும் உடல் நலத்துடன் நல் வாழ்வு வாழத் தேவையான நட-வடிக்கைகளை மேற்-கொள்ளும் கிராம ஊராட்-சியாக அமைத்தல் போன்-றவை குறித்தும் விவாதிக்கப்-பட்டது. பின்னர் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:&
தமிழக முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது-மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
கிராம சபைக் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் உடனடியாக செயல்படுத்-தப்படும். பொதுமக்கள் அரசுத் துறைகளின் சார்பில் வழங்கப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஊரக வளர்ச்சி முகமை சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு, பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் பசுமை வீடுகள் வழங்குதல், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் வசதி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளான சாலை வசதி, மின்சார வசதி போன்ற அனைத்து வசதிகளும் வழங்கப்படுகிறது.
மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு தொழில் தொடங்க மகளிர் திட்டம் சார்பில் பல்வேறு கடனு-தவிகளும், தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகள் கடனுதவி, பெற பி,எம்,கிநான் கார்டு, பயோ மெட்ரிக் கார்டு போன்ற-வைகளும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகள் வயதுக்கு ஏற்ற எடை மற்றும் உயரம் கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவுகளும், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் மற்றும் வளரிளம் பெண்களுக்கு இரும்புச்சத்து மாத்திரை போன்றவைகளும் வழங்கப்படுகின்றன.
மேலும், தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை செயல்படுத்தி-யுள்ளது. இத்திட்டத்தால் மாணவ, மாணவிகளின் வசிப்பிடம் அருகே தன்னார்-வலர்களின் பங்களிப்புடன் மாணவ, மாணவிகளுக்கு கற்றல் வாய்ப்பை வழங்க வழிவகை செய்துள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் சார்பில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு 2 மாதத்துக்கான மருத்துவ பெட்டகத்தை அவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலுமாக தவிர்க்கும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், ஊட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் மாயன், தூனேரி ஊராட்சித் தலைவர் உமாதேவி, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சாம் சாந்தகுமார், ஊட்டி தாசில்தார் ராஜசேகர் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






