என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
தமிழகத்தில் அனைத்து மாவட்ட வளர்ச்சியிலும் மு.க.ஸ்டாலின் அக்கறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
வளர்ச்சி என்பது யாரையும் விட்டு விடாத வகையில் இருக்க வேண்டும் என தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தின் உள்கட்டமைப்பு, இளை-ஞர்-களுக்கான வேலை-வாய்ப்பு, பசுமையான மாவட்டமாக பேணிக்காப்பது உள்ளிட்ட பணி-களை தன்னார்வத்-துடன் செயல்படுத்தும் வகையில் நீலகிரியில் உள்ள பொறியியல் துறை, சமூக நல அமைப்புகளுடனான கருத்தாய்வுக் கூட்டம் ஊட்டி அருகே உள்ள கேத்தி மைனலா பகுதியில் மைண்ட் எஸ்கேப் என்ற அமைப்பு சார்பில் நடந்தது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்-டங்களும் வளர்ச்சி-யடை-வதில் முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறார். வளர்ச்சி என்பது யாரையும் விட்டு விடாத வகையில் இருக்க வேண்டும் என தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது.
அனைத்து மக்களுக்கும் செல்வம், வாய்ப்புகள், கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதே தமிழக அரசின் இந்த உள்ளடக்கிய வளர்ச்சி மாதிரியின் நோக்கமாகும். நீலகிரி மாவட்டத்தின் வளர்ச்சி, சுற்றுச்சூழல் ரீதியாக நிலை-யான வழியில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதிலும் தமிழக அரசு கவனமாக இருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் கல்வி, வேலை-வாய்ப்பு, கட்டுமானம், மருத்துவம் உள்ளிட்டவற்றின் வளர்ச்சி நிலையான வளர்ச்சியாக இருக்க வேண்டும். நிகழ்-ச்சியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






