என் மலர்
உள்ளூர் செய்திகள்

இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை
கோத்தகிரியில் இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை
கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இந்து முன்னணிகொடியேற்றம் நடைபெற்றது.
அரவேணு:
நீலகிரி மாவட்டம் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் கோத்தகிரி தனியார் அரங்கில் நடைபெற்றது. முதலில் கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இந்து முன்னணிகொடியேற்றம் நடைபெற்றது.
பிறகு மாவட்ட செயலாளர் ஜெகன் ஏற்பாட்டில் மாவட்ட இந்து முன்னணி செயற்குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . மாவட்ட செயற்குழு ரமேஷ் வரவேற்றார். இதில்
சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி பொதுச் செயலர் கிஷோர் குமார் கலந்து கொண்டார். அவர் தலைமையில் மாவட்டத்தில் இந்து முன்னணி வளர்ச்சி குறித்தும் அனைத்து பகுதியிலும் இந்துமுன்னணி கிளை தொடங்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. மாவட்டத்தில் இருந்து நகர, ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர் நகர தலைவர் சுந்தர் நன்றி கூறினார்.
Next Story






