என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரே நாளில் 3 மாரியம்மன் கோவில்களில் தேர்த்திருவிழா
    X
    ஒரே நாளில் 3 மாரியம்மன் கோவில்களில் தேர்த்திருவிழா

    நீலகிரியில் ஒரே நாளில் 3 மாரியம்மன் கோவில்களில் தேர்த்திருவிழா

    மயிலாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டியது
    ஊட்டி, 
    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 18&ந் தேதி பூச்செரிதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 20&ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடந்தது.

    சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று நடந்தது. காலை 6 மணிக்கு மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. 9 மணிக்கு விநாயகர் மாரியம்மன் உள்பட எழுந்-தருளிய தெய்வங்களுக்கு அலங்கார பூஜைகளும், அதனை தொ டர்ந்து கனகாபிஷேகமும் நடந்தது. மதியம் அலங்கரிக்கப்பட்ட தேரில் சிம்ம வாகனத்தில் மாரியம்மன் எழுந்த-ருளினார்.
    இதையடுத்து தேரோட்டம் நடந்தது. தேரை கலெக்டர் அம்ரித் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல ஆயிரம் பக்தர்கள் ஓம்சக்தி, பராசக்தி கோஷத்துடன் தேரை இழுத்து சென்றனர்.  பெரிய தேருக்கு முன்பு பல சிறிய தேர்கள் அணி வகுத்து சென்றன. இதனை காணவும், அம்மனின் அருளை பெறவும் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் வந்திருந்தனர்.
    50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டதால், மாரியம்மன் கோயில் வளாகம், அப்பர், பஜார் சாலை களைகட்டியது. மேலும், பக்தர்கள் அதிகளவு திரண்ட நிலையில், போக்குவரத்து சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    குன்னூர் மேல்கடை-வீதியில் உள்ள தந்தி மாரி-யம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 8&ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று தேரோட்டம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு துயில் எழுப்பு அதிர்வேட்டு வைக்கப்பட்டது. வி.பி. தெருவில் உள்ள துருவம்மன் கோவிலில் இருந்து ஊர்-வலம் புறப்பட்டது. ஊர்வலத்தில் மயி-லாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் மற்றும் மங்கள இசை, மேளதாளம், பேண்டு வாத்தியங்கள் முழங்க மாரியம்மன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தது. அப்போது நடன கலைஞர்கள் அம்மன் வேடமிட்டபடி நடனமாடி வந்தனர்.
    தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

    கூடலூர் சந்தைக்கடை மாரியம்மன் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் சிறப்பு பூஜை, உச்சிகால பூஜை நடந்தது. 
    தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேளதாளங்கள் முழங்க அலங்கரிக்கப்பட்ட  தேரில் சிம்ம வாகனத்தில் மாரியம்மன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு கூடலூர் சக்தி விநாயகர், சக்தி முனீஸ்வரன், நாகராஜா உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று முக்கிய வீதிகள் வழியாக கோவிலை அடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை எடுத்த சென்றனர்.

    கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று அம்மன் அலங்-கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. கரகாட்டம், பொய்க்கால் ஆட்டம் மற்றும் மேள, தாளங்கள் முழங்க அம்மன் வீதி உலா நடைபெற்றது.

    Next Story
    ×