என் மலர்
நீலகிரி
அடிக்கடி நிலவும் விபத்துகளால் டிரைவர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்
அரவேணு,
கோத்தகிரி மலைப்பாதை யில் பயணிக்கும் சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தினர்.
தற்போது கோடை சீசன் தொடங்கிய நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு உள் மற்றும் வெளி மாநில, மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிகின்றனர்.
சமவெளிப் பகுதிகளில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் பர்லியார், குன்னூர் வழியாக மாவட்டத்திற்கு வந்து கோத்தகிரி, குஞ்சப்பனை வழியாக சமவெளிப் பகுதிகளுக்கு செல்ல ஒரு வழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் கோத்தகிரி மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலை மலைப்பாதையில் கடந்த 2 வாரங்களில் நான்கு சுற்றுலா வாகனங்கள் விபத்திற்குள்ளான நிலை யில், மலைப்பாதையில் பயணிக்கும் சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு மலைப்பாதையில் பயணிக்கும் போது போக்குவரத்து நெறி முறைகளை பின்பற்றிடவும், வாகனத்தை இரண்டாவது கியரில் இயக்கவும், மிகக்குறுகிய வளைவுகளில் ஒலி எழுப்பி வாகனத்தை குறிப்பிட்ட வேகத்தில் இயக்க கோத்தகிரி போக்குவரத்து ஆய்வாளர் சரவணனக்குமார் தலைமையிலான காவலர்கள் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்கினர்.
மேலும் மலைப்பாதையில் பயணிக்கும் போது ஏதேனும் இடர்பாடுகள் ஏற்பட்டால் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
நோயாளிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் அழைத்துச் செல்ல பேட்டரி காா் வழங்கப்பட்டது
ஊட்டி,
நீலகிரியில் பழமை வாய்ந்த கட்டடத்தில் அரசு லாலி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தை புனரமைக்கும் பணியில் ரோட்டரி கிளப் ஈடுபட்டு, பணிகள் நிறைவுற்ற நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வருகிற சனிக்கிழமை திறக்கப்படவுள்ளது.
அதன் முன்னேற்பாடாக சா்வமதத்தினரின் முன்னிலையில் சிறப்புப் பிராத்தனை நடைபெற்றதுஅதன் பின் நோயாளிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் அழைத்துச் செல்ல பேட்டரி காா் வழங்கப்பட்டது. இந்த காா் நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.
பெரும்பாலான வணிக கடைகள், கல்வி நிறுவனங்கள், நெடுஞ்சாலைத்துறை மரங்களில் விளம்பர பலகைகள் வைப்பது தொடர் கதையாகி வருகிறது
ஊட்டி:
மரங்கள், பொது இடங்களில் விளம்பர பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் வைக்க கூடாது என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், பெரும்பாலான வணிக கடைகள், கல்வி நிறுவனங்கள், நெடுஞ்சாலைத்துறை மரங்களில் விளம்பர பலகைகள் வைப்பது தொடர் கதையாகி வருகிறது. தற்போது வணிக நிறுவனங்கள், அரசு உத்தரவை காற்றில் பறக்கவிட்டு, காணுமிடமெல்லாம் மரங்களில், ஆணி அடித்து விளம்பர பலகைகள் வைக்கின்றனர்.
மரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை மறந்து, ஆணிகள் அடித்து, விளம்பர பலகைகள் வைத்து மரங்களை சுமைதாங்கிகள் ஆக்குகின்றனர். துருப்பிடித்த ஆணிகளால் மரங்கள் நோயுற்று, வலுவிழந்து மரணிக்கிறது
பச்சை மரத்தில் ஆணி அடிப்பதால் ஆணி துளை வழியாக வெப்பக் காற்று மரத்தினுள் சென்று ஈரப் பசையில்லாமல் மரம் பட்டுப்போக வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் நீலகிரியில் நடைபெறும் கோடைவிழா குறித்த விபரங்கள் அடங்கிய மாவட்ட நிர்வாகத்தின் பேனர்களை குன்னூர் மேட்டுபாளையம் சாலை ஓர மரங்களில் ஆணி அடித்து மாட்டி உள்ளனர் இது சூழல் ஆர்வலர்களை வேதனை அடைய செய்துள்ளது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் கவனத்திற்கு சென்றதும் இது மாவட்ட நிர்வாகம் செய்யவில்லை தனியார் அமைப்பு செய்துள்ளது. அவை உடனடியாக அகற்றபடும் என கலெக்டர் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்ப ட்டுள்ளது.
துணை ஜனாதிபதி, கவர்னர், முதலமைச்சர் ஆகியோர் ஒரே நேரத்தில் ஊட்டிக்கு வருவதை அடுத்து மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகமும், தோட்டக்கலைத்துறையும் இணைந்து செய்து வருகின்றன.
இதுதவிர ஊட்டி உதயமாகி 200 ஆண்டு தினமும் கொண்டாடப்பட உள்ளது . இதன் ஒரு பகுதியாக நினைவு சின்னமும் அமைக்கப்பட்டுள்ளது. அரசு சார்பிலும், 200 ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி பல்வேறு விழாக்கள் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 19ந் தேதி மாலை ஊட்டி செல்கிறார். 20ந் தேதி காலை ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து மலர் செடிகளை பார்வையிடுகிறார்.
அதன்பின்னர் ஊட்டி உதயமாகி 200 ஆண்டு தினத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தையும் திறந்து வைக்க உள்ளார்.
தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்கும் முதலமைச்சர் 21ந் தேதி அரசு சார்பில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
இதேபோன்று வருகிற 15ந் தேதி கவர்னர் ஆர்.என்.ரவியும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஊட்டிக்கு வருகிறார். வருகிற 24ந் தேதி வரை ஊட்டியில் தங்கும் கவர்னர் அன்றைய தினம் நடக்கும் மலர் கண்காட்சி நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார்.
முதலமைச்சரும், கவர்னரும் ஒரே நேரத்தில் ஊட்டிக்கு வந்தாலும் ஒன்றாக சந்தித்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
இதனிடையே 15ந் தேதி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் குன்னூர் மற்றும் ஊட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஊட்டிக்கு வருகை தர உள்ளார்.
துணை ஜனாதிபதி, கவர்னர், முதலமைச்சர் ஆகியோர் ஒரே நேரத்தில் ஊட்டிக்கு வருவதை அடுத்து மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதையும் படியுங்கள்...மே 14ந்தேதி அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை- உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவு
சமவெளிப் பகுதிகளில் வெயில் வாட்டி வரும் நிலையில் கோத்தகிரியில் குளிர் அதிகமாக காணப்படுவதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த குளு குளு காலநிலையை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர்.
கோத்தகிரி:
கோத்தகிரியில் ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதம் வரை வெயில் காணப்படும். குறிப்பாக மே மாதம் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படும்.
இம்முறையும் கடந்த இரு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்த போதிலும் சமவெளி பகுதிகளை போன்று இங்கும் சூடான காலநிலை நிலவி வந்தது. கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அசானி புயல் காரணமாக சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதற்கு ஏற்றார்போல் நீலகிரி மாவட்டத்திலும் தற்போது காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்று அதிகமாக வீசி வருகிறது. இதனால் மரங்கள் வேரோடு சாயும் நிலையும் உள்ளது. சில இடங்களில் தகரை கூரைகள் போட்டு இருக்கும் இடத்தில் அதிகம் சத்தமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் உள்பட அனைவரும் பயத்துடன் காணப்படுகின்றனர். பெரும்பாலான பகுதிகளில் அதிகமான காற்றுடன் சாரல் மழையும் பெய்து வருகிறது.
இன்று காலை முதல் கடும் மேகமூட்டம் மற்றும் காற்று வீசி வருகிறது. அவ்வப்போது மழை துளிகள் விழுந்தன. காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு தற்போது குளுகுளு காலநிலை நிலவி வருகிறது.
இந்த காலநிலையால் கோத்தகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மேலாடை பனியன், சுவர்ட்டர், கோட்டு, தொப்பி உள்ளிட்டவைகளை அணிந்து வருகின்றனர்.

ஊட்டியில் கடந்த மாதம் அவ்வப்போது பெய்த மழை காரணமாக மலர் செடிகள் நன்கு வளர்ந்து மேரிகோல்டு, டேலியா உள்ளிட்ட அனைத்து வகை மலர்களும் பூத்து குலுங்குகின்றன.
ஊட்டி:
கோடை சீசன் சமயத்தில் வருபவர்களை மகிழ்விக்க ஊட்டியில் உள்ள நூற்றாண்டு புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இங்கு நூற்றாண்டுகளை கடந்து மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனை லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்வார்கள்
கொரோனா தொற்று காரணமாக நடத்தப்படாமல் இருந்த மலர் கண்காட்சி 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மீண்டும் நடத்தப்பட உள்ளது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 124வது மலர் கண்காட்சி வரும் 20ந்தேதி தொடங்கி 24ந்தேதி வரை நடக்கிறது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
இதனிடையே மலர் கண்காட்சிக்காக கடந்த ஜனவரி மாதமே மலர் செடிகள் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பூங்கா முழுவதும் 275 வகைகளில் 5.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. இதுதவிர மலர் மாடங்கள், கண்ணாடி மாளிகையில் காட்சிப்படுத்துவதற்காக 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வண்ண மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன.

இந்த நிலையில் மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல வண்ண பூந்தொட்டிகளை மலர் மாடத்தில் அடுக்கி வைக்கும் பணிகள் நடந்தது. இதனை கலெக்டர் அம்ரித், தோட்டக்கலை இணை இயக்குநர் சிபிலாமேரி, உதவி இயங்குநர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தனர்.
இதை தொடர்ந்து மலர் காட்சி திடலில் மலர் தொட்டிகளை அடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஜெரேனியம், சைக்லமன், சினரேரியா, கிலக்ஸ்சீனியா, ரெனுன்குலஸ் மற்றும் புதிய ரகங்களான ஆர்னமென்டல்கேர், ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியாக்கள், இன்காமேரி கோல்டு, பிகோனியா, கேன்டீப்ட், பென்டாஸ், பிரான்ஸ் மேரி கோல்டு, பேன்சி, பெட்டுன்யா, பிளாக்ஸ், பிரிமுலா, ஜினியா, ஸ்டாக், வெர்பினா, டொரினியா உள்பட 200க்கும் மேற்பட்ட ரகங்களை கொண்ட 35 ஆயிரம் பூந்தொட்டிகளை அடுக்கி வைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் தாவரவியல் பூங்காவில் உள்ள புது பூங்காவில் 20 ஆயிரம் பூந்தொட்டிகள் பல்வேறு வடிவங்களில் காட்சிபடுத்தப்பட உள்ளது. இதுதவிர ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் ஆனதை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார தோரணங்கள் உள்பட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

பக்தர்கள் அக்னி சட்டி பால்குடம் மற்றும் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ஊட்டி:
கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட கட்டப்பட்டு அருகே உள்ள பாக்கிய நகரில் முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ந் தேதி மாலை அம்மன் அழைப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடத்தப்பட்டது.
தொடர்ந்து பக்தர்கள் அக்னி சட்டி பால்குடம் மற்றும் பறவைக்காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பகல் 12 மணி அளவில் பக்தர்கள் விரதமிருந்து குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதை அடுத்து மாலை 3 மணிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்து கோத்தகிரி கட்டபெட்டு கோவில் கட்டப்பட்டுந்தருளி வீதி உலா வந்தனர். இரவு 8 மணிக்கு பாக்கிய நகர் அய்யன் திருவள்ளுவர் நற்பணி மன்றம் சார்பில் சிறுவர்களுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற்றன.
பின்னர் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் மற்றும் நடைபெற்றன மாவிளக்கு பூஜை நடைபெற்றன இந்த திருவிழாவை ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.
ஊட்டி அருகே ஜெகதளா கிராமத்தில் கடந்த சில தினங்களாக கரடி நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானை, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த விலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தையொட்டிய கிராம பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது. அவ்வாறு வரும் விலங்குகள் விளைநிலங்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஊட்டி அருகே ஜெகதளா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். நேற்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய கரடி ஒன்று கிராமத்திற்குள் புகுந்தது.
நீண்ட நேரமாக அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்த கரடி அங்குள்ள மளிகை கடையை தட்டியது. மேலும் சில வீடுகளின் கதவின் அருகே சென்று கதவையும் தட்டியது.
வீடுகளின் கதவை தட்டும் சத்தம் கேட்டு, வீட்டில் உள்ளவர்கள் எழுந்து பார்த்தனர். அப்போது வாசலில் கரடி நின்றிருந்தது. இதனால் அவர்கள் அச்சம் அடைந்தனர்.
1 மணி நேரத்திற்கு மேலாக சுற்றி திரிந்த கரடி பின்னர் அங்கிருந்து வனத்திற்குள் சென்று விட்டது. இதன் பின்னரே பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். தொடர்ந்து கடந்த சில தினங்களாக இந்த பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
எனவே இந்த பகுதியில் சுற்றி திரியும் கரடியை வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என்றும், அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே கூடலூர் பகுதியில் சாலையோரத்தில் ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது. வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியில் சுற்றி வரும் யானையால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனயே வாகனத்தை ஓட்டி செல்கின்றனர்.
வனத்துறையினரும் அந்த பகுதியில் முகாமிட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து யானை சாலைக்கு வராத வண்ணம் வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வருகிற 14 மற்றும் 15ந் தேதிகளில் 17வது ரோஜா கண்காட்சி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
ஊட்டி:
கோடை சீசனையொட்டி நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஊட்டி ரோஜா பூங்கா நீலகிரியில் சுற்றுலா தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
சுற்றுலா பயணிகள் பூங்காவுக்குள் நுழைந்ததும் அவர்களை வரவேற்கும் வகையில் மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை என பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.
அங்கு அமைக்கப்பட்டு உள்ள 4 காட்சி முனைகளில் நின்றபடி பூங்காவின் பல்வேறு பகுதிகளை கண்டு ரசிக்கலாம். சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வு எடுக்க நிழற்குடைகள், நிலா மாடம் ஆகியவை உள்ளன. கிணற்றை சுற்றி ஹெரிடேஜ் கார்டன் உள்ளது. அங்கு டேபிள் ரோஜாக்கள் பூத்துக்குலுங்குகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ரோஜா கண்காட்சி நடத்தப்படவில்லை. தற்போது தொற்று குறைந்துள்ளதை தொடர்ந்து இந்த ஆண்டு கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
வருகிற 14 மற்றும் 15ந் தேதிகளில் 17வது ரோஜா கண்காட்சி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இரண்டு நாட்கள் நடக்கும் கண்காட்சியையொட்டி பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் 4 ஆயிரம் ரகங்களை கொண்ட 40 ஆயிரம் ரோஜா செடிகள் தயார் நிலையில் உள்ளன. தற்போது ரோஜா செடிகளில் ரோஜாக்கள் பூத்து குலுங்குகிறது. இதனை அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

3,302 மாணவிகளும், 3,805 மாணவிகளும் என மொத்தம் 7,107 பேர் எழுதுகின்றனர்.
கோத்தகிரி:
கொரோனா பரவல் காரணமா கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி பொது தேர்வுகள் முறையாக நடத்தப்படவில்லை. ஆனால் இநத ஆண்டு பொதுத் தேர்வை நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. அதன்படி கடந்த 5-ந் தேதி பிளஸ்-2 பொதுத் தேர்வும், 6-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும் தொடங்கியது.
நீலகிரி மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் இன்று காலை பிளஸ்-1 மாணவ மாணவிகளுக்கான பொதுத் தேர்வு தொடங்கியது.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் கூடலூர் கல்வி மாவட்டத்தில் இன்று பிளஸ்-1 தேர்வு தொடங்கியது. இதற்காக 39 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. அனைத்து தேர்வு மையங்களிலும் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
முன்னதாக தேர்வுக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. அதன்பின்னர் மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் உள்ளே அனுமதித்தனர். கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும் வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் 3,302 மாணவிகளும், 3,805 மாணவிகளும் என மொத்தம் 7,107 பேர் எழுதுகின்றனர். காலை முதலே மாவட்டத்தில் பரவலான இடங்களில் மழை பெய்து வருகிறது. குடை பிடித்து கொண்டு மாணவ, மாணவிகள் தேர்வு எழுத பள்ளிக்கு வந்தனர்.
கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
நேற்று காலை முதல் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதமான காலநிலையே நிலவி வந்தது. இரவில் சாரல் மழையாக தொடங்கி நள்ளிரவில் பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. இரவு 2 மணிக்கு தொடங்கிய மழை இன்று காலையும் தொடர்ந்து பெய்து வருகிறது.
இந்த மழை காரணமாக கோத்தகிரி பஸ் நிலைய சாலை உள்பட முக்கிய சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் மக்கள் அவதியடைந்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிலவிய வெயிலால் தேயிலை செடிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது பெய்த மழையால் தேயிலை செடிகளில் ஏற்பட்டிருந்த நோய் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக கோத்தகிரி மக்களின் நீராதாரமான ஈளடா தடுப்பணைக்கு நீர்வரத்து அதிகரித்து மிக வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் கோத்தகிரி நகர மக்களின் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சோலூர் மட்டம், கொடநாடு, கீழ்கோத்தகிரி, குஞ்சப்பனை உள்பட பிற பகுதிகளிலும் மழை கொட்டியது.
ஊட்டி, குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை காரணமாக நீலகிரியில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இந்த இதமான காலநிலையை ஊட்டியில் குவிந்திருக்கும் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் மிகவும் அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர்.
இன்று காலையும் தொடங்கி மழை பெய்து வருகிறது. இதனால் காலையில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் அவதியடைந்துள்ளனர்.
துணை ஜனாதிபதி மற்றும் கவர்னர் வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஊட்டி:
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் வருகிற 15-ந் தேதி ஊட்டிக்கு வருகின்றனர்.
டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு வரும் வெங்கையா நாயுடு, அங்கிருந்து கோவைக்கு வருகிறாா். கோவையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டா் மூலம் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரிக்கு வருகிறாா்.
அங்கிருந்து மற்றொரு ராணுவ ஹெலிகாப்டரில் ஊட்டியில் உள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டா் தளத்துக்கு செல்லும் அவர், அங்கிருந்து கார் மூலம் ஊட்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். மே 20-ந்தேதி வரை அவர் ஊட்டியிலேயே தங்கி இருக்கிறார். அவருடன் தமிழக கவர்னர் ஆா்.என்.ரவியும் ஊட்டிக்கு வருகிறாா்.
இருப்பினும் அவர் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 20-ந்தேதி வரை ஊட்டியில் தங்கியிருக்கும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார்.
கவர்னர் ஆர்.என்.ரவி மட்டும் வருகிற 24-ந்தேதி வரை ஊட்டியிலேயே தங்க உள்ளதாகவும், அன்று நடக்கும் மலர் கண்காட்சி நிறைவு நாளன்று நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.