என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில், மது பானங்களை வாங்கி பயன்படுத்திவிட்டு காலி மது பாட்டில்களை சாலையோரங்களிலும், வன பகுதியிலும், விளை நிலங்களிலும் சிலா் வீசி வருகின்றனா்.
வன பகுதிகளில் வீசப்படும் காலி மதுபாட்டில்களால் வன உயிரினங்களுக்கும், பொது இடங்களில் வீசப்படும் காலி மதுபாட்டில்களால் சுற்றுபுறமும் மாசுபட்டு நோய் தொற்று ஏற்பட காரணமாகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் மையம் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலையோரங்களில் காணப்படும் காலி மதுபாட்டில்களைச் சேகரித்து அகற்றும் பணி கடந்த 11-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் மதுபானங்களின் காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் மீண்டும் கொடுத்து, ரூ.10-தை வாடிக்கையாளா்கள் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் தொடா்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் நேற்று முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து மதுபான பாட்டில்களின் மேலும் டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 பெறப்படும் என்ற ஸ்டிக்கா் ஒட்டப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் திட்டமும் தொடங்கியது. இதற்கிடையே அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து மதுபான பாட்டில்கள் மீது டாஸ்மாக் நிறுவனத்தால் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படும் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சேகர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இது தொடர்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சேகர் கூறியதாவது:-
ஸ்டிக்கருடன் விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களின் காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் மீண்டும் அளித்து ரூ.10 வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
எனவே பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் மையங்களில் ஒப்படைத்தோ அல்லது டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளில் அளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நீலகிரி மாவட்டத்தில் பொரங்காடு, தொத நாடு, மேக்கு நாடு, குந்தெ சீமை என நான்கு சீமைக்குட்பட்ட கிராமங்களில் ஏராளமான படுகர் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இதில் ஒன்றான பொரங்காடு சீமை படுகர் நலச் சங்கம் சார்பில் ஆண்டு தோறும் மே மாதம் 15-ந் தேதியை படுகர் தினமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஆண்டு படுகர் தின விழா நேற்று பொரங்காடு சீமை படுகர் நலச் சங்கம் சார்பில், கோத்தகிரி நட்டக்கல் கிராம மைதானத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். 19 ஊர்த் தலைவர் ராமாகவுடர், கைகாரு சீமை தலைவர் நஞ்சா கவுடர், ஆயிரம் வீடு தலைவர் சீராளன், பார்ப்பத்தி ஆலா கவுடர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக பேரவை மாவட்ட செயலாளருமான சாந்திராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் படுகர்களின் தந்தை என்று அழைக்கப்படும் மறைந்த ராவ் பகதூர் ஆரி கவுடர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, அமைதியைப் போற்றும் வகையில் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து எழுத்தாளர் ஓரசோலை சுனில் ஜோகீ எழுதிய படுகர்களின் வரலாறு குறித்த ‘மாதி’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
விழாவில் பங்கேற்ற அனைவரும் தங்களது பாரம்பரிய வெள்ளை ஆடை அணிந்திருந்தனர். பின்னர் அவர்கள், தங்கள் பாரம்பரிய இசை கருவிகளை ஒலிக்க விட்டு, தங்களின் பாரம்பரிய நடனத்தை ஆடி பாடி படுகர் தினத்தை விமரிசையாக கொண்டாடினர். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளும், நாடகங்களும் நடத்தப்பட்டது.
இதில் கோத்தகிரி சுற்றுவட்டார அனைத்து படுகர் வாழ் மக்கள், குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி மற்றும் பழ கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான கோடை விழா கடந்த வாரம் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில் பல வாசனை திரவிய பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் இன்று 17வது ரோஜா கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியை கலெக்டர் அம்ரித், அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் பார்ர்வையிட்டனர்.

கண்காட்சியையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. 30 ஆயிரம் பல வண்ண ரோஜா மலர்களை கொண்டு ட்ரீ அவுஸ் அமைக்கப்பட்டு பூங்காவில் காட்சி படுத்தப்பட்டிருந்தது.
மேலும் 20 ஆயிரம் ரோஜா மலர்களை கொண்டு பியாேனா, மான், பனிக்கரடி, படச்சுருள் மற்றும் குழந்தைகளை கவரும் கார்ட்டூன் வடிவங்களும் காட்சி படுத்தப்பட்டிருந்தது.
வண்ண வண்ண ரோஜா மலர்களை கொண்டு குழந்தைகள் சறுக்கி விளையாடும் சறுக்கு, திண்டுக்கல் பூட்டு சாவி, கோபுரம், மலர்களால் ஆன மனிதன், விலங்குகள், குழந்தைகளுக்கு பிடித்த மோட்டு, பட்லு பொம்மைகளும் இடம் பெற்றிருந்தது.
30,000 ரோஜா மலா்களைக் கொண்டு பிரமாண்ட மர வீடு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பிளாஸ்டிக்கை ஒழிக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ரோஜா கண்காட்சியில் பூக்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மஞ்சப்பையும் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. அதன் அருகே பிளாஸ்டிக்கை தவிர்ப்பீர், மஞ்சப்பை உபயோகிப்பீர் என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது.
நிலா மாடம் அருகே மெரிகோல்டு மலா்களை கொண்டு பட்டாம்பூச்சி வடிவில் ’செல்பி ஸ்பாட்’ அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிமாவட்டத்தை சேர்ந்த தோட்டக்கலைத்துைற சார்பில் 10க்கும் மேற்பட்ட குடில்களில் பல வகையான மலர்களை கொண்டு சிறிய அளவிலான மலர் அலங்காரங்களும் செய்யப்பட்டிருந்தது.
கண்காட்சியையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள், பூங்காவில் குவிந்தனர். சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக ரோஜா இதழ்களை கொண்டு பல்வேறு அரங்கங்களும், ரங்கோலிகளும் பூங்காவில் போடப்பட்டிருந்தது. இது அங்கு வந்த சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திழுந்தது.
பின்னர் அவர்கள் பூங்காவுக்குள் சென்று, ரோஜாக்களை கொண்டு அமைக்கப்பட்டிருந்த மான், பனிக்கரடி, படச்சுருள், ட்ரீ அவுஸ் உள்ளிட்டவற்றை கண்டு ரசித்ததுடன், அவற்றின் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர். குழந்தைகள் தங்களுக்கு பிடித்த பொம்மைகளையும், சறுக்கையும் கண்டு குதுகலமடைந்தனர்.
மேலும் பூங்காவில் உள்ள 40 வகையான 4 ஆயிரம் ரோஜா செடிகளில் பல வண்ண மலர்களில் பூத்து குலுங்கிய ரோஜாக்களையும் பார்த்து ரசித்தனர். சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக்குக்கு பதிலாக மஞ்சைப்பை பயன்படுத்துவதின் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் பகல் நேரங்களில் கடும் வெயிலுடன் கூடிய வறட்சியான காலநிலை நிலவியது.
இதனால் தோட்டங்களில் ஈரப்பதம் வெகுவாக குறைந்து வந்தது. மேலும் சிவப்பு சிலந்தி நோய் தாக்கி வந்தது. இதனால் மஞ்சள் நிறமாக மாறிய இலை உதிர்ந்து வந்ததுடன் தேயிலை மகசூல் வெகுவாக பாதித்தது.
இந்த நிலையில் கோத்தகிரி உள்பட மாவட்டம் முழுவதும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நிலத்தில் ஈரப்பதம் ஏற்பட்டதுடன் போதிய சூரிய வெளிச்சத்துடன் இதமான காலநிலை நிலவியதால் தேயிலைச் செடிகளில் சிவப்பு சிலந்தி நோய் தாக்குதல் நீங்கியது.
மேலும் கொழுந்துகள் வளர்ந்து பச்சை தேயிலை மகசூல் வெகுவாக அதிகரித்து வருகிறது. தேயிலை தோட்டங்கள் பசுமைக்கு திரும்பி வருகின்றன.
இதைப் பார்ப்பதற்கு பச்சை கம்பளம் விரித்தது போல காணப்படுகிறது. இது சுற்றுலாப் பயணிகளில் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
இதேபோல மாவட்டம் முழுவதும் தேயிலை தோட்டங்கள் பசுமைக்கு திரும்பி பச்சை பசேலென காட்சி அளிக்கின்றன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் காடுகள் வறட்சியில் இருந்து மீண்டும் பசுமைக்கு திரும்பியுள்ளது.
இந்த நிலையில் குட்டியுடன் யானைகள் கூட்டம் அங்கு முகாமிட்டுள்ளது. யானைகள் தண்ணீர் தேடி அவ்வப்போது சாலையை கடந்து சென்று வருகின்றன. குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் குரும்பாடி அருகே யானை கூட்டம் குட்டியுடன் சாலையை கடந்து சென்றது.
இதையடுத்து வாகனங்கள் நிறுத்தப்பட்டு யானைகள் சாலையை கடந்த பிறகு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
யானைகள் தொடர்ந்து சாலையோரத்தில் உலா வருவதால் சுற்றுலா பயணிகள் யானைகளின் அருகே செல்ல வேண்டாம், செல்பி எடுக்க முயற்சிக்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு கோடை விழா கடந்த வாரம் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. 2 நாள் நடந்த கண்காட்சியை 15 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்.
அதனை தொடர்ந்து இன்று கூடலூரில் கோடை விழாவையொட்டி 9வது வாசனை திரவிய கண்காட்சி இன்று மார்னிங் ஸ்டார் பள்ளி வளாகத்தில் தொடங்கியது. கண்காட்சியில் அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, தொடங்கி வைத்தனர்.
கண்காட்சிக்காக பள்ளி மைதானத்தில் 37 அரங்குகள் வருவாய்த்துறை சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் தோட்டக்கலை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மற்றும் தனியார் தொண்டு அமைப்புகள் சார்பிலும் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாசனை திரவிய கண்காட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் வாசனை திரவியங்களான ஏலக்காய், குறு மிளகு, ஓமம், உள்பட பல்வேறு வகையான வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசனை திரவியங்களை கொண்டு ஏர் உழவர் மற்றும் பசுந்தேயிலை பறிக்கும் பழங்குடியினப் பெண் போன்ற சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
கூடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறு, சிறு வனவிலங்குகளும் செய்யப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.
காலை முதலே வாசனை திரவிய கண்காட்சி நடைபெறும் இடத்தில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள் அங்கு காட்சிபடுத்தப்பட்டிருந்த வாசனை திரவிய பொருட்களையும், சிற்பங்களையும் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இன்று முதல் 3 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில் கூடலூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகராட்சி ஒப்பந்ததாரர்கள் சார்பில் கோடை விழா விளையாட்டு போட்டிகளும், பல்வேறு அமைப்புகள் சார்பில் கலை கலாசார நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த வாசனை திரவிய கண்காட்சியில் பெற்றது.
கோடை விழாவிற்கான ஏற்பாடுகளை கூடலூர் கோட்டாட்சியர் சரவணன் தலைமையில் வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.
ஊட்டி ரோஜா பூங்காவில் 17வது ரோஜா கண்காட்சி நாளை தொடங்குகிறது. 2 நாட்கள் நடக்கும் கண்காட்சியையொட்டி நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர கடந்த சில மாதங்களாகவே பணியாளர்கள் மலர் நாற்றுகள் நடவு செய்து பராமரித்து வந்தனர்.
தற்போது பூங்காவில் உள்ள ரோஜா செடிகளில் பல்வேறு வண்ணங்களில் கண்ணை கவரும் வகையில் ரோஜா பூக்கள் பூத்து குலுங்குகின்றன. கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக அடுக்கு ரோஜா தோட்டம் அமைக்கப்பட்டு, அங்கு 31, 500 ரோஜாமலர்கள் தயார் நிலையில் உள்ளன. ரோஜா பூங்காவின் நுழைவு வாயிலில் தோரணம் கட்டப்பட்டு அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. நாளை கண்காட்சி நடக்க உள்ளதால் ஊழியர்கள் ரோஜா பூங்காவில் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தற்போது ஊட்டிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கும் ரோஜா பூக்களை கண்டு ரசித்து செல்கின்றனர்.
* * * ஊட்டியில் நாளை தொடங்க உள்ள கண்காட்சியில் சுற்றுலாபயணிகளை வரவேற்க தயாராக உள்ள ரோஜாக்கள்.






